UNLEASH THE UNTOLD

Top Featured

உங்கள் குழந்தைகள் உங்களுடையவர்கள் அல்லர்...

முயற்சி செய்தால் வெற்றி என்றாவது ஒருநாள் கிடைக்கும் என்பதை அவர்களுக்கு உணர்த்திய வண்ணமாகவே இருங்கள். உள்ளேயே பொத்தி வச்சு வளர்க்காமல், தானாக வளர விடுங்கள். மணலில் விளையாடட்டும்; மழையில் நனையட்டும்.

அரசியல் உரையாடலைப் வளரிளம் பருவத்தில் தொடங்குவோம்!

அரசியலுக்கும் அரசியல் கட்சி சார்ந்து பேசறதுக்குமான வித்தியாசத்தை அனைவரும் முதலில் உணரணும். பதின்ம வயதுல இந்த உலகத்துல நடக்கிற விசயங்களைக் கேள்வி எழுப்பும், கூடவே தனக்கான ரோல் மாடலைத் தேர்வு செய்து தனக்கான அடையாளத்தைக் கண்டடையத் தொடங்கும் தருணம் அது.

ஆவே ஆவே மரியா வாழ்க வாழ்க மரியா!

தேவாலயப் பகுதியைக் கைப்பற்றிய ராணுவத்தினர் பெரும் ராணுவ வெற்றியாக அதைக் கொண்டாடி மகிழ்ந்தனர். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்துவந்த மடு இலங்கை ராணுவத்தினர் வசம் வந்தது. மடு தேவாலய நுழைவாயில் அருகில் ராணுவத்தினரால் பௌத்த விகாரை அமைக்கவும் முயற்சி எடுக்கப்பட்டு தோல்வியில் முடிந்தது.

மகிழ்ச்சி எனும் மன வழக்கம்

வாழ்க்கையில் இலக்குகள் மிகவும் அவசியம். ஆனால், அந்த இலக்குகளை அடைவதை மட்டும் உங்கள் மகிழ்ச்சிக்கான காரணமாக வைத்திருக்க வேண்டாம். ஏனென்றால் இலக்குகளை நோக்கிய பயணமும் மகிழ்ச்சியே.

சுயமரியாதைக்காகப் போராடும் வானவில்!

உலகெங்கும் தன்பால் ஈர்ப்பாளர்கள் தங்கள் திருமணத்தை பகிரங்கமாக அறிவித்து வருகின்றனர். இந்தியாவிலும் ஆண், பெண் இரண்டு தரப்பில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்துகொண்டனர்.

வெத்தலைப் பெட்டி... வெற்றிலைச் செல்லம்...

முதலில் பாக்கைக் கடித்துக்கொண்டு, வெற்றிலை மேல் , சுண்ணாம்பைத் தடவி மடித்து வாயின் ஓரமாக ஒதுக்கி மெல்வார்கள். ‘விரைவில்’ என்று சொல்லுவதற்குப் ‘பாக்கு கடிக்கும் நேரத்தில்’ எனச் சொல்லுவதுண்டு. மெல்லமெல்ல, சிறிது சிறிதாக வாயின் நிறம் சிவப்பாக மாறத் தொடங்கும்.

எல்லாப் பெண் குழந்தைகளுக்கும் உயர் கல்வியைச் சாத்தியப்படுத்துங்கள்!

பெண்கல்வியைப் பள்ளிக் கல்வியில் 100% சேர்க்கை என்று உறுதி செய்தாலும் உயர்கல்வியில் சேர்க்கை பாதியைக்கூட எட்ட முடியாத வகையிலேயே இருக்கிறது. இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் முக்கியக் காரணம், பொருளாதாரப் பிரச்சனைதான்.

எரியும் நினைவுகள்

வரலாற்றில் இருந்து நாம் பாடம் படிக்கத் தவறுகின்ற போது மீண்டும் மீண்டும் அந்தத் தவறான வரலாறு மீட்டப்படும் என்பதற்கு இந்தத் தேசத்தின் வரலாறு சான்றாக இருக்கிறது. எந்த மக்களைக் கேடயங்களாகப் பயன்படுத்தி தாங்கள் ராஜபோக வாழ்க்கை வாழ்ந்தார்களோ, அந்த மக்களே இன்று அவர்களுக்கு எதிரான ஆயுதங்களாக மாறியுள்ளனர்.

இந்தியாவில் பெண்களின் நிலை என்ன?

ஒவ்வோர் இந்திய வீட்டிலும் மனுஸ்மிருதி இல்லாமல் இருக்கலாம். ஆனால், வாய்மொழியாகவும் வாழ்வியல் வழியாகவும் சமூக உரையாடல்கள் வழியாகவும் இன்றும் மனுஸ்மிருதி புழக்கத்தில்தான் இருக்கிறது. இதுமட்டும் அல்லாமல் பெரும்பான்மையான இந்தியப் பெண்கள் சனாதன தர்மத்தில் உள்ள ‘வர்ணாஷ்ரம தர்ம’ சாதி அமைப்பால் ஒடுக்கப்படுகிறார்கள்.

ஒற்றை ரோஜாக்கள்

நிறைய உடன்பிறப்புகளோடு இருந்தாலும் ஒற்றையாக இருந்தாலும் பெற்றோரின் வளர்ப்பு முறையே அவர்களின் குணாதிசயங்களைத் தீர்மானிக்கும்.