UNLEASH THE UNTOLD

Tag: women

தன் உரிமைகளுக்காகப் போராடும் வருண்!

‘சனிக்கிழமை நிலா நண்பர்களுடன் வெளியில் சென்றால் மதிய உணவுக்கு வந்துவிட வேண்டும். ஊர் சுற்றப் போனாலும் தான் போன் செய்தால் எடுத்துப் பேச வேண்டும், பல ஆண்டுகளாக அவன் போக ஆசைப்பட்டுக் கொண்டிருக்கும் கொடைக்கானலுக்கு இந்த ஆண்டாவது அவள் தன்னை அழைத்துப் போக வேண்டும். நிலாவின் பெற்றோர் இருக்கும்போது வேட்டிதான் கட்ட வேண்டும் என்று நிர்பந்திக்கக் கூடாது. இஷ்டப்படி ஷார்ட்ஸ் அணிய அனுமதிக்க வேண்டும்’ என்பது போன்ற கடுமையான விதிகளை நிலாவிடம் தலையணை மந்திரம் போட்டுச் சம்மதிக்க வைப்பதுதான் வருணின் போர்த் தந்திரம்.

நமக்கான நினைவுகளை உருவாக்குவோம்!

வாழ்வில் திரும்பிப் பார்த்தால் எனக்கான நாட்கள் சில இருக்க வேண்டும். என்னுடைய தோழியும் நானும் எங்களுக்கான தனியான நினைவுகளை உருவாக்க ஆரம்பித்து விட்டோம். எங்களால் வெளிநாடு, வெளி மாநிலம் செல்ல முடியாமல் போகலாம். ஆனால், தமிழ்நாட்டில் புதிய இடங்களுக்குச் செல்ல முடியும்.

உடையில் பாலின சமத்துவம்

“அவ்ளோ கஷ்டமா அப்போ படிக்கறது. இப்போல்லாம் அவ்ளோ சிரமம் இல்ல. அப்போ நாங்க ஜாலியா படிக்கறோம். அம்மா அப்போ தாவணி கட்டிருக்கீங்க, பொட்டு பாரு பெருசா நேர் பொட்டு வைச்சி அழகா இருக்கீங்கம்மா. இப்போ டீச்சரா வேலை செஞ்சாலும் ஸ்கூல்க்கு சுடிதார் போட்டுக்கிட்டுப் போறீங்க. அப்போ கொஞ்சம் பார்க்க கம்பீரமாவும் இருக்கீங்க. லவ் யூ ம்மா” எனக் கட்டிபிடித்து முத்தம் கொடுத்தான் விவேக்.

என் மனைவிக்கு மாதவிடாய் வலி...

மாதவிடாய் நேரத்தில் சில பெண்களுக்கு வரும் கடுமையான வயிற்றுவலி Dysmenorrhea எனப்படும். இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கக்கூடிய அளவுக்குக் கடுமையான வயிற்று வலி ஓரிரு நாட்களுக்கு மேலும் தொடர வாய்ப்பு உண்டு. சிலருக்கு வலியுடன் வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைவலி, மயக்கமும் வரலாம்.

வேட்டையாடும் ‘ஆகா’ பெண்கள்!

ஒன்பது மாத கர்ப்பிணியான ஆகா பெண்கள் மரம் ஏறி வேட்டையாடுகிறார்கள். குழந்தை பிறந்த ஒரு மாதத்திற்குள்ளேயே வேட்டையாட ஆயத்தமாகிறார்கள். சில தாய்மார்கள் புதிதாகப் பிறந்த குழந்தைகளைப் பக்கவாட்டில் கட்டிக்கொண்டு விலங்குகளைத் துரத்திக் கொண்டு ஓடுகின்றனர். ஆண்களைவிடப் பெண்கள் அதிகமாக வேட்டையாடுகிறார்கள். பெண்கள் வேட்டையாடலி நுட்பத்தை எளிதில் புரிந்துகொள்கிறார்கள். பரிணாம, கலாச்சாரக் கோட்பாட்டு நோக்குநிலைகளால் கணிக்கப்படும் பெண் வேட்டைக்கான சூழல்களில் பெரும்பாலானவை ஆகாவின் இந்தக் குழுவில் நிகழ்ந்தன.

மனைவியை இழந்த கணவனுக்கு நேர்ந்த கொடுமை

“மனைவி இறந்தப்புறமும் அழகா இருந்தா மத்த பொண்ணுங்க தொல்லை கொடுப்பாங்கல்ல? அதுக்காக அப்படி ஒரு பழக்கம் நம்ம முன்னோர்கள் வெச்சிருந்தாங்க. முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. இது கலிகாலம் நிறைய கெட்டுடுச்சு. நிறைய பழக்கமும் மாறிடுச்சு. பொண்டாட்டி செத்தாகூட மீசையும் தாடியும் கலர் ட்ரெஸ்ஸுமா ஹாட்டா சுத்துறாங்க. பழகிக்க வேண்டியதுதான். சரி, நீ போய்ப் படி.”

அவனது அந்தரங்கம் – அண்ணாமலையின் ஆண்களுக்கான இல்லறக் குறிப்புகள்

வாழ்க்கையின் யதார்த்தத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டிய வயதில் இருக்கிறீர்கள். உங்கள் நண்பருக்குத் திருமணமாகி ஒரு நல்ல வாழ்க்கை கிடைத்துள்ளது. அவரது மகிழ்ச்சியைத் தள்ளி நின்று வாழ்த்துங்கள். ஒரு வீட்டுக்கு வாழப் போய்விட்ட அவருக்கு இனி மனைவியையும் மாமனார், மாமியாரையும் வீட்டையும் கவனித்துக்கொள்ளும் பொறுப்புகள்தாம் அதிகம் இருக்கும். அதை நீங்கள்தான் புரிந்து நடந்துகொள்ள வேண்டும். உங்களுக்கு இன்னும் திருமணமாகவில்லை எனும் ஆதங்கத்தில்தான் இப்படி நண்பரைப் போட்டுப் பிடுங்குகிறீர்கள்.

அடிக்கிற கை அணைக்குமா?

உலகின் எண்பது நாடுகளில் உள்ள இருபத்தைந்து சதவீத மக்கள் ஆண் பெண்ணை அடிப்பதை நியாயப்படுத்துகிறார்கள் என்று ஐநா சபையின் வளர்ச்சித் திட்ட அறிக்கை தெரிவித்துள்ளது. இந்தியர்களில் பாதிப்பேர் மனைவியை அடிப்பதில் தவறில்லை என்றும், இது இயல்பான ஒன்று என்கிற மனநிலையிலும்தான் இன்னும் இருக்கின்றனர். முதல் முறை ஆண் கை ஓங்கும் போதே பெண் தனது ஆட்சேபத்தை வன்மையாகத் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் இதுவே வாடிக்கையாகிவிடும். கல்வி, வேலை, பொருளாதாரம் என்று எதுவும் ஆணுக்கு பெண்ணை அடிப்பது தவறென்று போதிக்காதது பெரிய ஆச்சரியம்தான். கணவன் என்றாலே அடிக்கும் உரிமையும் தன்னாலே வந்துவிடுவதாகப் பெரும்பாலான ஆண்களும் ஆணாதிக்கக் கட்டுப்பாடுகளிலேயே ஊறிக் கிடந்த பெண்களும் எண்ணிக்கொள்வது தவறென்று உணர்த்த வேண்டும்.

டூர் அவ்வளவுதானா?

அருண் தவியாகத் தவித்தபடி இருந்தான். ட்ரெயினுக்கு இன்னும் ஒரு மணி நேரம்தான் இருக்கிறது. போக்குவரத்து நெரிசலில் ஸ்டேஷனுக்குப் போய் ட்ரெய்னைப் பிடிக்க வேண்டுமானால் இப்போது கிளம்பினால்தான் முடியும். ஏற்கெனவே இரண்டு கேப் கேன்சல் செய்துவிட்டுக் கிளம்பி விட்டார்கள்.

“அகிலா… டைம் ஆகுது…”

அகிலா திரும்பி முறைத்தாள். அப்பாவுடன் பேசும் போது யாரும் குறுக்கிடக் கூடாது. ‘வரேன் போ’ என்று சமிக்ஞையை ஆறாவது முறையாகச் செய்தாள்.

பெண்களுக்கென்று ஒரு ராஜ்ஜியம்!

மோசுவோ கலாச்சாரத்தில் உறவுகள் அனைத்தும் பரஸ்பர பாசத்தைப் பற்றிக்கொண்டிருக்கின்றன. அது மங்கும்போது, அவரவர் பாதையில் முன்னெடுக்கிறார்கள். அவர்கள் மொழியில் கணவன் அல்லது தந்தை என்கிற வார்த்தையே இல்லை. மோசோ பெண்களால் குழந்தைகளைப் பெற முடியாவிட்டால், அல்லது ஆண் குழந்தைகளை மட்டுமே பெற்றுக்கொண்டால் என்ன செய்வது என்று யோசிக்கலாம். அவர்கள் இதற்கெல்லாம் அஞ்சுவதில்லை. முறைப்படி அவர்களின் தாய்வழி உறவினர் ஒருவரிடமிருந்தோ தொடர்பில்லாத மோசோ குடும்பத்திலிருந்தோ ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுப்பார்கள். சீனர்கள் மோசோ பழங்குடியை ‘பெண்களின் ராஜ்ஜியம்’ என்று குறிப்பிடுகிறார்கள்.