UNLEASH THE UNTOLD

Tag: Education

உன்னால் முடியும் கண்ணம்மா...

சூழ்நிலைகளால் கனவுகள் நொறுங்கி , குடும்பத்திற்காகத் தங்களை மெழுகுவர்த்திகளாக மாற்றிக்கொள்ளும் பெண் குழந்தைகள் நிரம்பிய சமூகம் இது. குறிப்பாகக் கிராமங்களில் இன்னும் பெண்களுக்கு விருப்பம் சார்ந்த படிப்பு கிடைப்பதில்லை.

அரசியல் உரையாடலைப் பதின்ம பருவத்தில் தொடங்குவோம்!

எங்கும் அப்பாவுடன் கூடவே செல்லும் தென்றல் கேள்விக்கணைகளைத் தொடுத்துக்கொண்டே இருக்க, அப்பாவும் தனக்குத் தெரிந்ததை மகிழ்வோடு பதில் சொல்வார். தன் குழந்தை அனைத்தையும் கேள்விக்குட்படுத்துகிறாளே என்ற பெருமிதம் இருக்கும். பொண்ணு இப்படி எடக்குமடக்காகக் கேள்வி கேட்கிறாயே என்று ஒரு நாளும் சொன்னதில்லை. மாறாக ஊக்கம் அளித்தே வந்தார்.

படிக்கும்போதே திருமணம் செய்தால்...?

இது போன்றே சில மாணவியரின் வாழ்க்கையில் சவாலாக ஏற்பட்ட அனுபவங்கள் பலவற்றையும் லட்சுமி டீச்சர் வழியாக அறிந்துகொண்டு, தன் உலகத்தை விரிவாக்கிக்கொண்டு, தனது வாழ்க்கையை எதிர்கொள்ள ஆரம்பித்த பைரவி, தற்போது சிறப்பாகப் பயணித்துக் கொண்டிருக்கிறாள்.

பதின்ம வயது பெண்களைப் புரிந்துகொள்வோம்; அவர்களுக்கான வெளியை உருவாக்குவோம்!

“நான் யோசிச்சு பார்த்தேன் மிஸ். இந்தச் சடங்கெல்லாம் வேணாம்ன்னு சொன்னேன். அதுக்குச் செலவு பண்றத என் படிப்புக்குச் செலவு பண்ணுங்க. நான் படிக்கணும்ங்கிறதுதான் நான் கேட்டதோட நோக்கமே!” என்றாள் குயிலி.

கல்வித் துறைக்கும் பொறுப்புள்ளது...

பெற்றோருக்குப் பொறுப்பு உளதைப்போல, அரசுக்கும் நல்லதொரு கல்வியைக் குழந்தைகளுக்கும் வழங்க வேண்டும் என்ற புரிதல் வேண்டும். அதற்காக ஏராளமான தொடர் பணிகளைச் செய்ய வேண்டிய தேவை உள்ளது

பெற்றோருக்குப் பொறுப்பில்லையா ?

தொடர்ந்து மாதம் ஒரு முறையாவது பள்ளிக்கு வந்து குழந்தைகளின் ஆசிரியர்களுடன் உரையாடி, தங்கள் குழந்தைகளின் நல்லது கெட்டது அறிந்து கண்டிக்கவோ பாராட்டவோ செய்வதை வழக்கமாக்கிக்கொண்டால், மாணவர்களைச் சமூகம் வன்முறையாளர்களாகச் சித்தரிப்பதைத் தடுக்க முடியும்.

மாணவர்கள் வன்முறை யார் பொறுப்பு?

40 ஆயிரம் அரசுப் பள்ளிகள் உள்ள நமது மாநிலத்தில் மிகச் சிறிய எண்ணிக்கையில் பத்துக்கும் குறைவாக வந்துள்ள இந்த வீடியோக்களை வைத்துக்கொண்டு மொத்தமாக அரசுப் பள்ளிகளே சரியல்ல என்ற கருத்தைப் பரவலாக்குவதும், 2 வீடியோக்களில் பெண் குழந்தைகளின் செயல்களை வைத்து பெண் பிள்ளைகளின் ஒழுக்கத்தை விமர்சிப்பதும் எந்த விதத்தில் சரி?

சங்கரிகளுக்குக் கூடுதல் கவனம் தேவை!

பள்ளிகளில் குறிப்பாக அரசுப் பள்ளிகளில் பல நிலைகளில் சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் பயில்கின்றனர். உடல் குறைபாடுகள், உள்ளக் குறைபாடுகள், உணர்வுக் குறைபாடுகள் என மருத்துவ ரீதியாக இருபதுக்கும் மேற்பட்ட பெயர்கள் கொண்டவையாக அவை இருக்கின்றன. கல்வித் துறையில் சிறப்பாசிரியர்கள் மிகச் சிறிய எண்ணிக்கையில் நியமிக்கப்பட்டு இயங்கி வருகின்றனர்.

உடை அனைவருக்கும் பொதுவாகட்டும்!

ஓ, இதுதான் பிரச்னையா? உடை என்பதில் ஏன் இப்படி உயர்வு, தாழ்வு வந்துச்சுன்னு பேசுவோம். ஆதிமனிதர்கள் உடை போட்டிருந்தாங்களா? இன்னும் சில பழங்குடி மக்கள் முதன்மை வாழ்க்கை முறையில் உடை இல்லாம இருக்காங்க. ஆதிமனிதர்கள் தொடக்கத்தில் உடை போடாமத்தான் இருந்தாங்க. நாமதான் குரங்குல இருந்து பல கோடி வருசமா பரிணாமம் அடைஞ்சு மனிதனா வளர்ந்திருக்கோம்னு அறிவியல் அறிஞர் டார்வின் சொன்னார்ல்லயா…” எனத் தொக்கி நின்றது வாக்கியத்தோடு நிறுத்தினார் ஆஷா.

அனிச்சம் பூக்கள்

தனக்கு ஏதேனும் இயல்புக்கு மாறாக நடக்கிறது என்பதே நிறையக் குழந்தைகளுக்குத் தெரிவதில்லை என்றால் அதற்கான முழுக் காரணமும் பெற்றோர்கள் தாம்.