UNLEASH THE UNTOLD

நிவேதிதா லூயிஸ்

கருத்தடை மாத்திரைகளுக்குத் தடை கூடாது - அர்ச்சனா சேகர்

நம் சமூகத்தில் குழந்தை பெற்றுக்கொள்வது பெரிய சாதனை போலப் பார்க்கப்படுகிறது. எனவே பெண்களுமேகூட ஒரு குழந்தை பெற்ற பிறகே இசிபி பயன்படுத்துகிறார்கள். நான் ஏற்கெனவே சாதித்துவிட்டேன். இன்னொரு முறை சாதனை செய்ய விருப்பம் இல்லை என்பதுபோல. குழந்தை பெற்றவர்களிடம் இசிபி மாத்திரை பயன்படுத்துவது பற்றிய கூச்சம் அல்லது அவமான உணர்வு இல்லை. ஆனால், முதல் குழந்தையே வேண்டாம் என்று சொல்லக் கூச்சம் வருகிறது. உடல்நலம் மற்றும் பொருளாதாரக் காரணங்களினால் மூன்றாவது வேண்டாம் என்று சொல்ல வராத தயக்கம் முதல் கருவை வேண்டாம் எனச் சொல்லும்போது வந்துவிடுகிறது.

தமிழ்நாட்டின் முதல் பெண்கள் பள்ளி, அதைத் தாங்கிப் பிடிக்கும் ஆசிரியர்கள்!

“இங்கு இளம் சிறாருக்கு அடிப்படை கல்வியறிவு தரப்படுகிறது. பெண்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை. கோயில்களில் ஆடும் தேவதாசிப் பெண்களுக்கு மட்டும் கல்வி கற்பிக்கப்படுகிறது” – சீகன்பால்கு

மேரியின் ஆட்டுக்குட்டி பாடல்

1830ம் ஆண்டு சாராவின் நூல் வெளியாகி உலகமெங்கும் மேரியின் ஆட்டுக்குட்டி பிரபலமானது. எந்த அளவுக்குப் பிரபலம் என்றால், உலகின் முதல் ஒலிப்பதிவுக் கருவியான ஃபோனோகிராஃபை உருவாக்கிய தாமஸ் ஆல்வா எடிசன், தன் சொந்தக் குரலில் அதில் முதலில் பதிவு செய்தது ‘மேரியின் ஆட்டுக்குட்டி’ பாடலைத்தான்!

வேலூர்ப் புரட்சி 1806 - நூலறிமுகம்

இந்த வரலாறை, சாதி, மதம் தாண்டி ஏகாதிபத்தியத்தை எதிர்த்த கிளர்ச்சிக் குரல்களை, நம் தலைமுறை வரை கொண்டு வந்து சேர்க்காததன் காரணமே இன்று இந்த அளவுக்கு அழுகிப்போயிருக்கும் சாதி, மத அழுக்கு மண்டியிருக்கும் சமூகத்தில் ஏகாதிபத்தியம் நம் குரல்வளைகளை நசுக்கும் சூழலுக்கு நாம் தள்ளப்பட்டிருப்பதன் காரணமென நான் நினைக்கிறேன்.

நீதிக்கு வாதிப்பேன் நின்று- நூல் அறிமுகம்

‘கத்தோலிக்க பிரமுகர்களின் சத்தியாக்கிரகம்: இந்த ஜில்லாவின் பிரபல நீண்டநாள் காங்கிரஸ்வாதியான ஸ்ரீ ஏ மாசிலாமணியும், அவரது மனைவி ஜெபமணி எம்.எல்.ஏ.வும் இன்று காலை மாதா கோவில் முன் ஆயிரக்கணக்கான கத்தோலிக்கரிடையில் யுத்த எதிர்ப்பு கோஷம் செய்து சத்தியாக்கிரகம் செய்தனர்’

மதராஸின் முதல் திரையரங்கை நிறுவிய பெண்

மதராஸ் போன்ற பழைமைவாத நகரில் 23 வயதேயான மணமாகாத இளம்பெண் ஒருவர் சினிமா விநியோகத் தொழில் செய்து, நகரின் முதல் சினிமா அரங்கை ஏற்படுத்தியது எவ்வளவு பெரும் சாதனை!

மகிழ் பிரிவு வாழ்த்துகள்- ஐஸ்வர்யா, தனுஷ்

பிரியக் கூடாதது- மணமான ஆணும் பெண்ணும் அல்ல; மனிதனும் மகிழ்ச்சியும். இதை மீண்டும் ஒருமுறை அழுத்தம் திருத்தமாக தனுஷ்-ஐஷ்வர்யா பிரிவு வலியுறுத்துகிறது.

திரௌபதி

நான் வெட்கப்பட வேண்டிய எந்த ஆணும் இங்கு இல்லை என்று சொல்கிறாள். என் துணியை என் மீது போட நான் உங்களை அனுமதிக்க மாட்டேன்.

வரலட்சுமி விரதம் யாருக்கானது?

ஆசையைத் துறக்கச் சொன்ன புத்தர் செல்வத்தைப் பெற ஏன் ஆலோசனை சொன்னார்? ‘பலருக்கு நன்மை பயப்பதால்’, ‘பலருக்கும் இன்னல் தீர்வதால்’ !

உலகின் முதல் புகைப்படக் கலைஞர்- சாரா!

படத்தில் ‘பெயரியப்படாத கலைஞர்’ என்று எழுதப்பட்டது. ‘வரலாறு முழுக்க பெண் பெயரிடப்படாதவள்’ (For most of history, anonymous was a woman) – நினைவுக்கு வருகிறதா?