UNLEASH THE UNTOLD

Tag: Venba

புரியாத புதிர்கள் 

குழந்தை உருவானதிலிருந்து ஆறு வாரங்களுக்கு அந்தக் குழந்தை எந்தப் பாலினம் என்று கண்டுபிடிக்க முடியாது. காரணம் ஆண்களுக்கான Y குரோமோசோம் ஆண்களுக்குத் தேவையான ஹார்மோன்களைக் குழந்தை கருவாக உருவான ஆறு வாரங்களுக்குப் பிறகுதான் சுரக்க ஆரம்பிக்கும். அப்படி ஆண்களுக்கான ஹார்மோன்களும் உடல் வளர்ச்சியும் இருந்தால்தான் அந்தக் கரு ஆண் என்று வித்தியாசப்படுத்தப்படும். ஒரு வேளை அது போன்ற சுரத்தல்கள் இல்லை என்றால் அந்தக் குழந்தை பெண் என்று அடையாளப்படுத்தப்படும். அதாவது அந்தக் கருவிற்குப் பெண்களுக்கான XX குரோமோசோம்கள்தாம் இருக்கின்றன என்று அர்த்தம்‌

பாலினம் அறியலாமா?

மரபணு ஆலோசனை மையங்களுக்கென்றே தனி நெறிமுறைகளும் உண்டு. கருவிலிருக்கும் குழந்தைக்கு ஏதேனும் மரபணுக் குறைபாடு இருப்பது தெரியவந்தாலோ அல்லது சந்தேகத்தின் பெயரிலோ மேற்கொள்ளப்படும் பரிசோதனை முறைகளும் சிகிச்சைகளும் இந்தச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்க‌ வேண்டும். செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை மேற்கொள்பவர்கள் எக்காரணம் கொண்டும் இந்தக் குழந்தைதான் வேண்டும் என்று பாலினத்தின் அடிப்படையில் எந்தத் தனிப்பட்ட சிகிச்சைகளும் மேற்கொள்ளக் கூடாது.

பெருந்தொற்று

தடுப்பூசிகளை எடுத்துக் கொள்ளலாமா என்கிற கேள்விக்கு வருவோம். ஒரு நோயிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியைக் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அதற்கு முன்னால் அந்தத் தடுப்பூசியின் பக்கவிளைவுகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.

அறிவதுவே!

ஓரறிவு முதல் ஆறறிவு வரை உள்ள உயிர்கள் அனைத்தும் தங்கள் மரபணுக்களை அடுத்த தலைமுறையினருக்குக் கடத்திக் கொண்டேதான் இருக்கும். ஒரு மாமரத்தில் இருந்து இன்னொரு மாமரம் உருவாக முடியும் என்பதுதான் ஓரறிவு உயிரினங்களும் மரபணுக்களைக் கடத்துவதற்கான சான்று. இதைத்தான் மரபியலின் தந்தையான கிரிகர் ஜான் மெண்டல் (Gregor John Mendel) பட்டாணியில் நிகழ்த்திய ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது.

அறிவில் பெருகிய சமூகம் ஆரோக்கியத்தில்?

மரபணு பிறழ்வின் காரணமாகச் சிலரின் உடலில் தேவையற்ற மிக அதிகமான செல்கள் உருவாகி, உடலின் ஓரிடத்தில் கட்டியாகப் படியும். அந்தக் கட்டியில் வலி இருக்காது. கட்டிகள் பரவிக்கொண்டே போகும், பெரிதாகிக் கொண்டே போகும். அந்த சைலன்ட் கில்லர்தான் கேன்சர்.

இடைவெளிகள்

மரபணு பற்றிய விழிப்புணர்வு இல்லாததுதான் சொந்தத்திற்குள் திருமணம் செய்துகொள்வது போன்ற நிகழ்வுகளுக்குக் காரணம். காலம் காலமாக நம் குடும்பங்களில் பின்பற்றப்பட்ட வழக்கத்தைத் தவறென்று சொல்வதா என்கிற கேள்வி இன்றும் பலரிடம் விவாதத்திற்குரியதாக இருக்கிறது. இது தவறா, சரியா என்பதைப் பற்றி விவாதிப்பதைத் தாண்டி இதனால் ஏற்படக்கூடிய விளைவுகளைப் பற்றி யோசிப்பதுதான் சாமர்த்தியம்.

உணவுப் பொருள்களின் உருமாற்றம்!

தாவரங்களின் வளர்ச்சிக்குப் பயன்படும் வளங்களை அப்படியே உணவு உற்பத்திக்குத் திசை திருப்பியதுதான் அதிக விளைச்சலுக்கான காரணம். தாவரங்களில் சிலவற்றிக்கு இயற்கையாகவே சில குணங்கள் உண்டு. உதாரணமாக நெல் சாகுபடியில் அதிக உயரம் வளராத, ஆனால் அதிக விளைச்சலைத் தருகின்ற ஒரு ரகம் உண்டு என்றால் அந்த ஒரே ஒரு வகை நெல்லை மட்டும் தொடர்ந்து சாகுபடி செய்வது, அந்த நெல்லின் மரபணுவைப் பரிசோதனை செய்து, அதை எடுத்து பிற நெல் வகைகளில் இணைத்து, பிற நெல் வகைகளையும் இந்த ஒரு குறிப்பிட்ட நெல் வகையைப் போல் மாற்றுவது போன்றவற்றால்தாம் உற்பத்தி அதிகரித்தது. இந்த முறையைக் கண்டுபிடிப்பதற்காகப் பல ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்தனர். உணவு முறையில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தியது இந்தப் பசுமை புரட்சி தான்.

நீரிழிவு குறைபாடும் மனிதர்களும்

நீரிழிவு குறைபாடு ஏற்படுவதற்குக் காரணம் இன்சுலின் என்கிற ஹார்மோன் தேவையைவிடக் குறைவாகச் சுரப்பதுதான். இன்சுலின் என்பது ஒருவகையான புரதம். இது உடலில் இருக்கும் ரத்தத் சர்க்கரையின் (blood glucose) அளவைச் சீராக வைத்திருக்கும். கணையத்தில் (pancreas) சுரக்கக்கூடிய இந்த இன்சுலின், தேவையைவிடக் குறைவாகவோ அல்லது முற்றிலும் சுரக்காமலோ இருக்கும் போதுதான் ரத்தச் சர்க்கரையின் அளவு கூடுகிறது. இதைத்தான் நீரிழிவு என்கிறோம். உலகில் பெரும்பான்மையானவர்களைப் பாதித்திருக்கும் இந்த நீரிழிவு குறைபாடானது பல பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. அதுவும் இதில் இருக்கும் இரண்டு முக்கியமான பிரிவுகளைப் பொறுத்துதான் இதன் விளைவுகளும் சிகிச்சைகளும் தீர்மானிக்கப்படுகின்றன.

கறுப்பு வெள்ளைப் பூக்கள்

நிறக் குருடு உள்ள ஒருவர் சாலையில் செல்லும் போது அங்கே இருக்கும் போக்குவரத்து விளக்குகளில் பிரதானமாக இருக்கும் பச்சை மற்றும் சிவப்பு நிறங்களை வேறுபடுத்திப் பார்த்து அதற்கேற்ப வாகனத்தை இயக்க வேண்டும். ஆனால், இது அவர்களுக்கு அவ்வளவு எளிதான செயல் அல்ல. ஒரு நிமிடம் தாமதித்தாலும்கூட அது அந்த நபருக்கு ஆபத்தை விளைவிக்கும்.

டைனோசர் உலகம்

மனிதர்களுக்குள்ளும் எண்ணற்ற வித்தியாசங்கள் இருப்பதற்கு காரணம் இந்தச் சுற்றுச்சூழலும் அதற்கேற்ப தீர்மானிக்கப்பட்ட தாயனையும். இந்த உலகில் இருக்கும் எல்லா உயிர்களின் தாயனையும் தனித்துவமானது. அதுதான் தடயவியலின் (forensic) அடிப்படை. குற்றம் நடந்த ஓர் இடத்தில் கிடைக்கும் தலைமுடி, நகம் முதலியவற்றிலிருந்து கிடைக்கும் தாயனையை வைத்து குற்றவாளியைக் கண்டறிவதுதான் தடயவியல். உடலில் இருக்கும் ஒவ்வொரு செல்லிலும் தாயனை இருப்பதால் முடி, நகம், ரத்தம் முதலியவற்றில் இருந்து தாயனையைச் சேகரிக்க முடியும்.