UNLEASH THE UNTOLD

Tag: love

காதல் கொலைகள்...

பெண் சாதியைக் கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பில் இருப்பதால், அவள் வேறு சாதி ஆணைக் காதலிப்பதோ அவன் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதோ பெரும் கெளரவ குறைச்சலாக பார்க்கப்படுகிறது. சாதி ஆணவக்கொலையில் அதிகளவில் கொலையாவது பெண்கள்தாம்.

இலக்கணம் மாறுதே...

பேசிக்கொண்டே நித்யாவின் தோள்களில் கை போட்டுக் கொண்டான். மெதுவாகத் தன்னை நோக்கி இழுத்து, தன் மார்பில் சாய்த்துக்கொண்டான். ஒவ்வொரு முறை அவன் அணைக்கும் போது, அவள் புதிதாகப் பிறந்தாள். கண் மூடி, அவன் மார்பில் இருந்துவந்த, பழகிப்போன வியர்வை கலந்த ஸ்ப்ரே வாசனையை சுவாசிக்கையில் அவள் இதயம் பலமாகத் துடித்தது. அந்த வாசனை அவளுக்குப் புதிதல்ல. ஆனால், அன்று ஒருவித மன நெருடலைத் தந்தது.

இருண்ட கடல்

அவர்கள் போட்டு வைத்திருந்த திட்டம் அனைத்தையும் கொரோனா தகர்த்தெறிந்தது. நிலா அவளது சொந்த ஊருக்குத் திரும்பியிருந்தாள். அவனுக்கு வீட்டிலிருந்தபடியே மடிக்கணியின் மூலம் ட்ரெயினிங் தொடங்கியிருந்தது. இருவரும் தொலைபேசியில் தொடர்பில் இருந்தார்கள். வீட்டில் இருந்ததால் நிறைய நேரம் பேசிக்கொள்ள முடியாமல் இருந்தாலும் அவர்களின் அன்பின் சாரல் அப்படியே தொடர்ந்துகொண்டிருந்தது.

எங்கிருந்து வந்தாலும் அன்பு அன்புதானே!

இந்த உலகத்தில் இன்னும் மனிதமும் அன்பும் முழுக்கச் செத்துவிடவில்லை. செல்லும் வழியெங்கும் அன்பை விதைத்துச் சென்றால், திரும்பி வர நேரிடும் போது அன்பையே அறுவடை செய்யலாம். அந்த இன்ஸ்டாகிராம் தாய் தன் குழந்தைக்கு மனிதர்களின் எதிர்மறைப் பகுதிகளை மட்டுமே சொல்லி வளர்க்கிறார் போலும். மனிதர்களிடம் நேர்மறைப் பகுதிகளும் உண்டு என்பதை முதலில் அவர் கற்றுக்கொள்ள வேண்டும். பின்பு குழந்தைக்குக் கற்பிக்க வேண்டும்.

சமூக வலைத்தளமும் பெண்களும்

நாம் என்ன விஷயங்களைப் பகிர்ந்தாலும், நம்பிக்கையானவர்களிடம் சுயநினைவோடுதான் கூறுகிறோமா என்பதை நமக்குள்ளாக உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். சில நேரம் ஏதோ ஒரு நெகிழ்ச்சியான தருணத்தில், உணர்வு வயப்பட்ட நிலையில் நெருக்கமாக உரையாடி இருக்கலாம், அல்லது பொதுவில் பகிர முடியாத சொந்த விஷயங்களைப் பகிர்ந்து இருக்கலாம். பின்னர் அந்த நபருடன் பிணக்கு ஏற்பட்டு பிரிந்து இருக்கலாம், அல்லது அந்த நபரின் செயல் ஏதோ ஒன்றின் காரணமாக அவரைப் பிடிக்காமல்கூடப் போகலாம். அப்படிப்பட்ட நேரத்தில் நேர்மையாக அவர்களிடம் கூறி விலகிவிடுவது நல்லது. விலகிய பின் அவர்களைப் பற்றிப் பேசாமலும், அவர்களைப் பின்தொடராமலும் இருப்பது அதைவிட நல்லது.

பெண்ணுடலும் சாதியும்

ஒரு பெண் தன்னை நம்பிவிட்டால், தன்னையே சார்ந்து இயங்கிவிட்டால், தன்னுடைய தேவைக்காக மட்டும் பயன்படுத்துகிறவர்களாக ஏன் இச்சமூகம் மாறிப்போனது? உண்மையில் பெண்ணிடம் சர்வமும் அடங்கியிருக்கிறது. அவளுக்குள் அறிவு, ஆளுமை, அனுபவம், அன்பு, உழைப்பு, துணிச்சல் என்ற அனைத்தையும் வைத்திருக்கிறாள். தனக்குள்ளே சுமந்து புறத்தில் அதை வெளிக்காட்டாமல் அடக்கமாக வைத்திருப்பதை இவர்கள் என்றுதான் உணர்வார்களோ? அவளிடமும் சொல்வதற்கும் கேட்பதற்கும் பல கதைகள் இருக்கிறதென்பதை எப்போதுதான் அறிவார்களோ?

திருமணம் தாண்டிய உறவு

ஆண் பெரும்பாலும் ஒரு பெண்ணை அடைய காட்டும் முனைப்பை அதைத் தொடர்வதில் காட்டுவதில்லை. இந்த உண்மையைப் பெண்களால் ஏற்க முடிவதில்லை.

தேமாக்காதல்

பத்து நாள்களாகவும் வேம்பின் தலையணையும் விஜியின் தலையணையும் ஒன்றாக ஆகியிருந்தது. இரவில் மொட்டை மாடியில் படுத்தபடியே நட்சத்திரங்களை இணைத்து வேண்டுமானதை வரைந்துகொண்டார்கள் இருவரும். தனது இருபத்தி நான்கு வருடக் கதையையும் வேம்பிடம் சொல்லியிருந்தாள் விஜி.

காதலும் சுயமும்

சில நேரத்தில் சூழ்நிலைகளுக்கேற்ப விட்டுக் கொடுப்பது ஒருவருக்கு இன்னொருவர் செய்ய வேண்டியதுதான். ஆனால், எப்பொழுதும் ஒருவரே விட்டுக் கொடுத்துக்கொண்டிருப்பது உறவின் சரிநிலையைப் பாதிக்கும். நாளடைவில் சுயமரியாதையையும் இழக்கச் செய்யும். ஒரு நாள் என்ன சமைப்பது என்பது தொடங்கி, யார் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ள வேண்டும் என்பது வரை பெரும்பாலும் பெண்களே சமரசங்கள் செய்துகொள்ள நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

<strong>அறிந்தும் அறியாமலும்</strong>

பதின் பருவத்துக்கு வந்த குழந்தைகளிடம் குடும்பநிதி நிலையைத் தெளிவாக விளக்கி, பொறுப்புகளை ஒப்படைத்தால் நம்மைவிட அதிக கவனமாகச் செலவு செய்வார்கள். செல்லம் கொடுப்பது வேறு, அவர்களை சுதந்திரமாக வளர்த்தல் வேறு. இது இரண்டுக்குமான வித்தியாசம் புரியாமல்தான் பல பெற்றோர்கள் கோட்டை விடுகிறார்கள்.