UNLEASH THE UNTOLD

இளம்பிறை

ஈரம் உதறும் பறவை

ஜன்னலில்
நனைந்த பறவையொன்று
வந்தமர்ந்து
இறகுகளின் ஈரம்
உதறிக்கொண்டிருக்க
எண்ண முடியாத
நரம்புகளின் வீணையாக
எல்லோருக்கும் ஆறுதலாக
இசைத்துக் கொண்டிருக்கிறது
வான்

பாறையில் படிந்த ஆதித்தடங்கள்

பொதுவுடமை சித்தாந்தத்தில் ஈடுபாடுகொண்ட மணலூர் மணியம்மை என்னை வெகுவாக பிரமிக்க வைத்த சென்ற நூற்றாண்டுப் போராளிப் பெண்ணாக ஒளிர்கிறார். பால்ய விதவையான மணியம்மா சிலம்பம் பயின்று, சைக்கிள் ஓட்டக் கற்று, தன் முடியை ‘கிராப்’ வெட்டிக்கொண்டதோடு நில்லாமல், வேட்டி, அரைக்கை வைத்த கதர் சட்டை, சிவப்புத் துண்டோடு வலம் வந்திருக்கிறார் மக்களுக்காக.