UNLEASH THE UNTOLD

Tag: Brindha sethu

விபாஸனா

நான் உலகத்தோடு கலந்ததாக, அப்படி எல்லாம் இல்லை; உலகம் தனியாக அப்படியே இருக்கிறது. நானில்லை. நான் என்பதே இல்லை. ‘நான்’ என்று எவ்வெப்போதும் உணர்ந்து கொண்டிருக்கிற எதுவுமே இல்லை. அந்த உணர்வில், பிடித்தம் பிடிக்காமை, பயம் வெறுப்பு நேசம் எந்த உணர்வுத் தீவிரமும் அதில் இல்லை. எதுவுமே இல்லை. வெறும் ஒரு ஜன்னல் வழி உலகம், ஜன்னலற்றுத் தெரிவது போல. அவ்வளவுதான்.

தைரியசாலியின் பயங்கள் பயங்கரமானவை...

கூச்சம், தயக்கம், பயம் என்கிற உணர்வுகள் ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது; இல்லாவிடில் இத்தனை சுதந்திரம் உள்ளதாக நம்பப்படுகிற ஆண்கள் இந்நேரம் எவ்வளவோ சாதித்திருக்க முடியும்தானே? அந்தத் தயக்கத்தை உடைத்து நம்மிடம் பேசும் நம்பகத் தன்மை வரவும், நம்மை அதைப் பற்றி எல்லாம் உரையாட அனுமதிப்பதுமே பெரும் சவாலாக இருந்தது. கடல் அலைகள் போலத்தான்; ஆண்களுக்கும் பெண்களுக்கும் நடுவே உள்ள அலைகளைத் தாண்டிவிட்டால், இருவருமே கடல்தான். ஒத்த உயிரினம்தான்.

ஏமாந்த கதை...

நினைக்கும் போதெல்லாம் அந்த நினைவின் திரும்ப அடைய முடியாத தூரத்திற்குள்
திரும்பத் திரும்ப சிக்கிக்கொள்ள வைக்கிறது.

பாதைகளின் கண்களுக்குத் தப்பிய ஏமாற்றுக்காரர்களோ மறதிக்குள் ஒளிந்து கொள்கிறார்கள் அல்லது ஞாபகமாய் மறந்து விடுகிறார்கள்.

‘வாழ்; வாழ விடு’

பொதுவாகக் கண்ணாடிப் பொருள்களை எடுக்கும்போது கீழே விட்டுவிடுவோமோ என்று பதற்றம் கொள்வோம். ஆனால், தினமும் மற்ற பொருள்களை எத்தனை முறை எடுக்கிறோம்; அப்படி எடுக்கும்போது எத்தனை முறை கீழே விட்டோம்? இப்படி யோசித்துப் பார்த்தால், கண்ணாடிப் பொருள்கள் மேல் நமக்கிருக்கும் பயம், போய்விடும்.

சுய கட்டுப்பாடே சுதந்திரம்!

என்றோ ஒருநாள் அல்லது ஒருவாரம் அல்லது ஒரு மாதம் நேர்மறையாகச் சிந்தித்துவிட்டு, எல்லா நாள்களும் நலமோடு இருப்பது என்பது இயலாது. சாப்பிடுவது, தூங்குவதுபோல அன்றாட செயல்களாக, உடற்பயிற்சிகளும் மனப் பயிற்சிகளும் இருக்க வேண்டும். அன்றன்றைக்கு உட்கொள்பவற்றை உட்கொண்டு, கழிப்பவற்றைக் கழிக்க வேண்டும். அதுவே ஆரோக்கிய வாழ்வு!

எல்லாம் பய மயம்!

மார்கஸ் அரேலியஸ் சொல்வார், ‘குழந்தைக்கு உடம்பு சரியில்லையா, குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்கிற முதல் நிலை எண்ணத்தில் மட்டும் மனதை நிற்கச் செய்ய வேண்டும்; இப்படியே நலக்குறைவு அதிகமாகி, குழந்தை இறந்துவிடுமோ என எண்ணங்களின் அடுத்த நிலைக்குப் போகக் கூடாது. இது தேவையற்ற பயங்களிலிருந்து நம்மை விடுவிக்கச் செய்யும். நிகழ்வதின் உள்ளபடியேயான தன்மையை உணரச் செய்யும். வேண்டாத, விபரீத கற்பனைகளைக் கட்டுப்படுத்தும்.’

கோபத்தை வெல்வது எப்படி?

இயல்பில் மனிதர்கள் எல்லாருமே அன்பிற்கு ஏங்குபவர்கள்; அன்பானவர்கள். ஆனால், அவர்களுக்குத் தமது வாழ்வில் கிடைத்த மற்றும் கிடைக்காததன் ஏக்கம் கோபம் தன்னிரக்கம் ஏமாற்றம் வெறுப்பு எல்லாமே எங்கிருந்து வருகிறது என்று பார்த்தால், தனது வாழ்வை மற்றவர்களின் வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்ப்பதால்தான்.

கோபம் பிறரை மட்டுமல்ல, தன்னையும் அழிக்கும்...

கோபம் என்பது சிறு தீப்பொறி போல், தான் பற்றித் தொடங்கியவற்றிலிருந்து யாவருக்கும் தொற்றி எல்லோரையும் அழிக்க வல்லது மட்டுமல்ல, தன்னையே எரிக்கும் பெரும் தீ. அதைச் சுடராக வைத்துக்கொள்வது சம்பந்தப்பட்ட நமது கைகளில்தாம் உள்ளது.

வெற்றி என்பது உங்களை நீங்கள் விரும்புவது...

‘வெற்றி என்பது உங்களை நீங்கள் விரும்புவது, நீங்கள் செய்வதை விரும்புவது மற்றும் நீங்கள் அதை எப்படிச் செய்கிறீர்கள் என்பதை விரும்புவது’ என்கிறார் மாயா ஏஞ்சலோ.

‘வாழ்க்கை என்பது கற்றுக்கொண்டே இருத்தல்!’

நாம் பிறந்ததிலிருந்து நம் கூடவே இருப்பது யார் என்றால், அது நாம்தான். இன்பத்திலும் துன்பத்திலும் வாழ்விலும் தாழ்விலும் எப்போதும் – நம்மோடு நாம்தான் இருக்கிறோம். ஆனால், நமக்குப் பிடித்த மனிதர்கள் வரிசையில் நாமே, நம்மைச் சொல்ல மறந்திருப்போம்.