UNLEASH THE UNTOLD

Tag: tamilnadu

லிடியா

லிடியா, ”விருது முக்கியமானதுதான். இவ்விருதுக்கு என்னுடன் பயணிக்கும் நண்பர்களுக்கு உரிமையானது. விருது பெற்றபோது என்னிடம் ஆராவாரமில்லாத அமைதியான உணர்வே இருந்தது. என் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாத வார இறுதிநாட்களில் பெற்றோருடன் குப்பை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அப்போது எனக்காகக் குப்பையிலிருந்து பொம்மை எடுத்து, பத்திரப்படுத்தி, நான் செல்லும் போது கொடுப்பார்கள். அந்த சந்தோஷத்தை விட வேறு எதுவும் பெரிதில்லை” என்றார்.

 கல்யாண அகதிகள்

இந்தக் கல்யாணங்கள் ஏற்படுத்தப்பட்டதன் நோக்கம் தனக்கென்று ஒரு பாதுகாப்பு வேண்டும். அது உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும், பொருளாதார நிலை சரியில்லாமல் இருந்தாலும் ஒருவருக்கு இன்னொருவர் உதவிக் கொண்டு அனுசரணையாக இருந்து, உறவுச் சங்கிலியின் கண்ணிகள் அறுந்து போகாமல் காத்துக் கொள்ள வேண்டிதான் திருமணங்கள் தோற்றுவிக்கப்பட்டன.

ஓர் ஒற்றைப் பெற்றோரின் மகள்

பொதுவாகக் குழந்தைகள் சுதந்திரமாகவும் தன்னுடைய செயலுக்குப் பொறுப்பு ஏற்கும் தன்மையுடனும் வளர வேண்டும்; வளர்க்கப்பட வேண்டும். குழந்தைகள் சிறிய வயதில் இருக்கும் போது பெற்றோர் ஏன் கண்டிக்கிறார்கள் என்று நினைப்பார்கள். அது சிறிது வளர வளரப் புரியும். நல்ல பெற்றோருக்குத் தெரியும் ‘எவ்வளவு அன்பு செலுத்த வேண்டும் எப்போது கண்டிக்க வேண்டும்’ என்று.

ஒரு மளிகைக் கடைக்காரர் மனைவியின் சா(சோ)தனைகள்

கடின உழைப்பு, நேர்மை, பொருட்களின் தரம், நம் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் குடும்ப விவரம் தெரிந்திருத்தல், அவர்களோடு இணைந்து பழகுதல் போன்றவை ஒரு வணிக வெற்றியின் தாரக மந்திரம். எல்லாத் தொழில்களும் கொண்டாட்டமும் திண்டாட்டமும் நிறைந்ததே. அது என் அம்மாவிற்கும் பொருந்தும் கடையின் பெயர் கலையரசி (இறந்து போன என் அக்காவின் பெயர்) ஸ்டோர்ஸ். வழக்கில் விக்டர் கடை. அப்பாவைவிடக் கூடுதல் நேரம் உழைத்த அம்மாவின் பெயர்? எங்கள் நினைவுகளில் மட்டுமே!

மாட்டிறைச்சி பொது உணவு இல்லையா?

இந்தியாவில் மட்டும்தான் உணவு அரசியலாக்கப்படுகிறது. மாட்டிறைச்சி சாப்பிடுவது என்பது இந்து மதத்திற்கு, இந்தியாவிற்கு, இந்துக்களுக்கு எதிரான ஒரு கருத்துருவாக்கமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்துக்களிலும் மாட்டிறைச்சி சாப்பிடுகிறவர்கள் இருக்கிறார்கள். இந்துக்களில் தங்களை உயர்சாதியினராகக் கூறிக்கொள்ளும் பார்ப்பனர்கள் மட்டுமே உண்பதில்லை. இருப்பினும் பண்டைய இந்தியாவில் அனைத்து சாதியினரும், குறிப்பாக இந்துக்களும் மாட்டிறைச்சியை உண்டனர். பெளத்த மற்றும் சமண மதத்தின் எழுச்சிக்குப் பின்னரே சைவ உணவு என்பது இந்து தர்மமாகப் பார்க்கப்பட்டது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர் (Avenshi Centre for Women’s Studies, 2012).

தினமும் என்னைக் கவனி...

நம் இந்தியச் சமூகத்தில் உடலுக்கு முக்கியத்துவம் எத்தனை பேர் கொடுக்கிறோம்?. குறிப்பாகப் பெண்கள். உடலுக்குப் பயிற்சிகள் செய்ய வேண்டும் என்று சொன்னால், “அதெல்லாம் எதுக்கு? வீட்டு வேலை செஞ்சாலே போதும். அவருக்குப் புடிக்காது. குழந்தைகளை யார் பாக்குறது?” என்றெல்லாம் விதவிதமாகப் பதில் பேசி தங்கள் இயலாமையை மறைப்பவர்கள் நம் இந்தியப் பெண்கள். உடலைப் பேண வேண்டும் என்று பள்ளிப் பருவத்தில் இருந்து பாடம் படித்தாலும் சோம்பேறித்தனத்தால் நம் உடலை நாமே வீணடித்து விடுகிறோம். எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி நன்றாகச் சாப்பிடக் கூடியவர். கடினமாக வேலைகளும் செய்வார். ஆனால் வடை, பஜ்ஜி, போண்டா போன்ற எண்ணெய்ப் பண்டங்கள் அன்றாடம் அவருக்கு வேண்டும். கடையில் வாங்க மாட்டார். உடலுக்கு ஆகாது (?) என்று வீட்டிலேயே தினமும் தயாரிப்பார்.

களப்போராளி சாஜிதா

சமூகம் அல்லல்படுவதையும், அழிவதையும் கண்டு எப்படி அமைதியாக இருக்க முடியும்? அவர்கள் எந்த மதநம்பிக்கை உடையவராக இருந்தாலும் அவர்களும் எங்கள் உடன்பிறப்புகள் தானே?. கொழுந்துவிட்டு எரியும் மணிப்பூரில் பெண்கள் அவமதிக்கப்பட்டதைக் கண்டு என் மனம் துயரத்தால் நிரம்பியது. ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணம் என்னுள் இருந்துகொண்டே இருந்தது.

நம் குழந்தைகளைச் சரியாக வளர்க்கிறோமா?  

பெற்றோர் தங்களுக்குள் ஒரு சுய அலசல் செய்து கொள்ள வேண்டியது அவசியம். நீங்கள் சர்வாதிகாரம் செய்யும் பெற்றோரா?, நடுநிலையுடன் நடந்து கொள்ளும் பெற்றோரா?, நட்புடன் பழகும் பெற்றோரா?, எதையும் கண்டுகொள்ளாத பொறுப்பற்ற பெற்றோரா? இதில் நாம் எந்த வகை என்று எந்தவித சமரசமும் இன்றி ஒப்புக் கொள்ள வேண்டும்.

சமத்துவத்துக்காகப் போராடும் பிரியா

கல்வியும்  ஓரளவு   அரசியலும்  இருக்கும்  நானும் மக்களுக்காக  இயங்கவில்லை  என்றால்  கல்வியையும் அரசியலையும்  நுகரமுடியாத  விளிம்புநிலை  மக்களை  எப்படி  எழுச்சிப் பெறச்  செய்வது?  ஆதலால்  இயங்குகிறேன்  என்கிறார்  பிரியா. 

உத்தியோகம் மனுஷ லட்சணம்

உத்தியோகம் புருஷ லட்சணம் என்று சொல்வதை இனிமேல் மாற்றி உத்தியோகம் மனுஷ லட்சணம் என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் வேலைக்குச் செல்வது என்பது புருஷர்களுக்கு மட்டுமே உரித்தான ஒன்று அல்ல. அவர்களைவிட அதிகமாக உழைக்கும் பெண்களுக்கும் இதில் பங்கு இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதனால் இருபாலருக்கும் பொதுவாக மனுஷ லட்சணம் என்று மாற்றுவதில் தவறு ஒன்றும் இல்லைதானே? பெண்கள் வேலைக்குச் செல்வதால் அவர்களது தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. பொது அறிவு விரிகிறது. பொருளாதாரத்தில் யாரையும் சார்ந்து வாழ வேண்டியதில்லை. அடுத்தவருக்குப் பாரமாக இருந்து சுய பச்சாதாபத்தில் மருகிக் கொண்டிருப்பதைவிடப் பணிபுரியச் செல்வது நல்லது.