UNLEASH THE UNTOLD

Tag: bharathi thilakar

திருக்கார்த்திகை விளக்குகள்

திருக்கார்த்திகை, தீபாவளி என ஒளி குறித்த விழாக்கள் பல உண்டு. திருக்கார்த்திகையை, முதல் நாள் முருகனுக்கு, இரண்டாவது நாள், பெருமாளுக்கு (இது முடக்கார்த்திகை என்று அழைக்கப்படுகிறது), மூன்றாவது நாள் சக்திக்கு என மூன்று நாட்கள் தோழி தனது வீட்டில் கொண்டாடுவதாகச் சொன்னாள்.

கூஜா... கூஜா... கூஜா...

தானியங்களில் இருந்து தேவையற்ற உமி, கல் போன்றவற்றைப்  பிரித்தெடுப்பதை புடைத்தல் என்பர். சுளவின் பின்பக்கம், இருபக்கமும் பிடித்துக் கொண்டு, ஒருவிதமாக தூக்கிப் புடைக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது, கனம் குறைந்த பொருள் முன்பக்கம் வந்து விடும்.

அஞ்சல் தலைகளில் அண்ணல் காந்தி

காந்தியைப் பற்றி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், “இதைப் போன்ற ஒருவர், ரத்தமும் சதையுமாக இந்தப் பூமியில் நடமாடினார் என்பதை வரும் தலைமுறையினர் நம்ப மாட்டார்கள்” என்கிறார். அவரை மட்டுமல்ல உலகின் பல தலைவர்களையும் அறிஞர்களையும் கவர்ந்தவராக காந்தி இருந்திருக்கிறார்; இருக்கிறார்.

பயன்பாட்டில் இருந்த பொருட்கள்

பொதுவாகக் கருங்காலி மரத்தில் இருந்து உலக்கை செய்யப்படுகிறது. தண்டு, இலை எங்கும் முட்கள் கொண்ட இந்த மரம் பார்க்க மிக அழகாக இருக்கும். கருங்காலி மரம் மிகவும் வலிமையானது. அதனால் பல பொருட்கள் கருங்காலி மரத்திலிருந்து செய்கிறார்கள். மரத்தை வெட்டப் பயன்படும் கோடரிக்கான கைப்பிடி பெரும்பாலும் கருங்காலி மரத்திலிருந்துதான் செய்கிறார்கள். மர இனத்தை அழிப்பதற்கு அது துணை செய்கிறது என்பது போல தன் இனத்தை அழிப்பதற்குத் துணை செய்பவர்களைக் ‘கருங்காலி’, ‘இனத்தை அழிக்க வந்த கோடரிக் காம்பு’ என்றெல்லாம் அழைக்கிறார்கள்.

விடுதலை... விடுதலை... விடுதலை...

வெண்முடி சூடிய வேந்தனாம் இமையனும்
விந்திய மலையனும் வாழ்த்துங்கள்!
தண்ணிய கீழ்மேல் மலைகளும் பழனி
நீலமா மலையும் வாழ்த்துங்கள்!

வானிடமிருந்து நீரினை வழங்கும்
கங்கையும் யமுனையும் வாழ்த்துங்கள்!
தேனுறு நீரினைத் தென்னவர்க் களிக்கும்
பொன்னியும் பொருனையும் வாழ்த்துங்கள்!

உங்கள் குழந்தைகள் உங்களுடையவர்கள் அல்லர்...

முயற்சி செய்தால் வெற்றி என்றாவது ஒருநாள் கிடைக்கும் என்பதை அவர்களுக்கு உணர்த்திய வண்ணமாகவே இருங்கள். உள்ளேயே பொத்தி வச்சு வளர்க்காமல், தானாக வளர விடுங்கள். மணலில் விளையாடட்டும்; மழையில் நனையட்டும்.

வெத்தலைப் பெட்டி... வெற்றிலைச் செல்லம்...

முதலில் பாக்கைக் கடித்துக்கொண்டு, வெற்றிலை மேல் , சுண்ணாம்பைத் தடவி மடித்து வாயின் ஓரமாக ஒதுக்கி மெல்வார்கள். ‘விரைவில்’ என்று சொல்லுவதற்குப் ‘பாக்கு கடிக்கும் நேரத்தில்’ எனச் சொல்லுவதுண்டு. மெல்லமெல்ல, சிறிது சிறிதாக வாயின் நிறம் சிவப்பாக மாறத் தொடங்கும்.

முத்துமணி மாலை உன்னைத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட...

நகை போட்டால் தான் ஊரில் மதிப்பார்கள் என்பதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. நம்மைத் தெரிந்தவர்கள், நாலு தடவை நகை போட்டு வரவேண்டியது தானே என்பார்கள். பின் இவள் இப்படித்தான் எனக் கடந்து போய்விடுவார்கள். தன்னை அழகுபடுத்திக்கொள்வதில் ஆர்வம் இருப்பவர்களுக்கென்றே இப்போது ஓராயிரம் ஆபரணங்கள் வருகின்றன. அவற்றை அணிந்து பாதுகாப்பாகப் பயணிப்போம்.

காதோரம் லோலாக்கு கதை சொல்லுதம்மா...

ஆண் குழந்தைகள் ‘வாளி’ அணிந்திருக்கின்றனர். வாளி என்பது சிறு வளையம். அதன் தொடர்ச்சியாகவே இன்றும் கோயிலில் வைத்து காது குத்தும் விழா ஆண்களுக்கும் நடைபெறுகிறது. எங்கள் ஊரில் அந்தோணியார் கோயிலில் வைத்து அந்தோணியார் பட்டம் வைத்து வாளி போடுவார்கள். அந்தோணியார் பட்டம் என்பது தலையின் வெளிப்புறம் மட்டும் சிறிது முடி வைத்து, மற்ற இடங்களின் மொத்த முடியையும் அகற்றும் வகையிலான மொட்டை.

டிரெண்ட் செட்டர் நதியா

அதுவரை கிராமத்தில் பெண்களுக்கான சைக்கிளை வயதான ஆண்கள், காலைத் தூக்கி போட்டு ஏறுவதற்கு எளிதாக இருக்கும் என வாங்கினார்கள். வீட்டில் சைக்கிள் ஓட்டும் பெண்கள்கூட ஆண் குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்திய ஆண்களுக்கான சைக்கிளைத்தான் பயன்படுத்தினார்கள். நதியா சைக்கிள் பிரபலமான பின் தான் லேடிஸ் சைக்கிள் பிரபலமானது. ஊரில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியும் ஒரு காரணமாக இருக்கலாம்.