மஞ்சள் நிற சுவர் காகிதம் - சார்லோட் பெர்கின்ஸ் ஸ்டெட்சன்
“என்ன குட்டிம்மா இது?” என்று அவர் கேட்டார். “இரவில் இப்படி அநாவசியமாகத் திரியாதே, குளிர்ப் பிடித்து விடும்” என்றார். அப்போது அவரிடம் பேச அதுதான் நல்ல நேரம் என்று நினைத்தேன். எனவே, “நான் இங்கே…
“என்ன குட்டிம்மா இது?” என்று அவர் கேட்டார். “இரவில் இப்படி அநாவசியமாகத் திரியாதே, குளிர்ப் பிடித்து விடும்” என்றார். அப்போது அவரிடம் பேச அதுதான் நல்ல நேரம் என்று நினைத்தேன். எனவே, “நான் இங்கே…
ஜான் போல, என்னைப் போல ஒரு சாதாரணமான மனிதர்களுக்கு இது மாதிரியான ஒரு பழம்பெரும் மாளிகையைக் கோடைக்காலத்திற்காக வாடகைக்கு எடுப்பது என்பது எல்லாம் அவ்வளவு சுலபமான காரியமில்லை. எப்போதாவது இப்படி அதிசயங்கள் நடப்பதுண்டு. ஒரு…
முனைவர். இரா. பிரேமா முதலில் இவ்வளவு பெண்கள் எழுதி இருக்கிறார்கள் என்பதே சாகசம் போன்று இருக்கிறது. அதைத் தேர்ந்தெடுத்து தொகுப்பது என்பது அதைவிடப் பெரிய அசாத்தியம்தான். நூறு கதையாசிரியர்களைப் பற்றிய அறிமுகம், அவர்தம் நிழற்படம்,…
பொதுவாக அனைவருமே விரும்பும் விஷயம் வெளிநாட்டு பயணம். புதுப்புது இடங்களை ரசிக்கலாம். புதிய மனிதர்கள் மற்றும் புதிய அனுபவங்களை சந்திக்கலாம். புதிய கலாசாரங்கள் மற்றும் புதிய பொருள்களை பார்க்கலாம். வாழ்வின் மகிழ்ச்சியான, மறக்கமுடியாத தருணங்களாக…
எனக்கு 19 வயது இருக்கும் போது தமிழ்நாடு என்கிற பத்திரிகை நடத்திய ஒரு கதைப் போட்டியின் அறிவிப்பைப் பார்த்தேன். ஒரு கதை எழுதி போட்டிக்கு அனுப்பினேன். இரட்டைப்பரிசு எனும் அந்தக் கதைக்கு ஆறுதல் பரிசு கிடைத்தது. அதைப் பார்த்ததும் வானில் இறக்கைக் கட்டிப் பறப்பது போல் இருந்தது. அந்தக் கதைக்குப் பத்து ரூபாய் பரிசாகக் கொடுத்தார்கள். அந்த நாட்களில் அது பெரிய பணம். அதுவும் எம்.எஸ். சுப்புலட்சுமி கையால் எனக்கு அந்தப் பரிசு கிடைத்தது. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆக எனக்குமே இரட்டைப்பரிசுதான்.
1983இல் ‘கோகுலம்’ சிறுவர் மாத இதழில் என் முதல் மொழிபெயர்ப்புக் கதை வெளியானது. தொடர்ந்து எனது மொழிபெயர்ப்புக் கதைகள் சிறுவர் இதழ்களில் வெளிவந்தன; மகிழ்ச்சியாக இருந்தது. கல்லூரிக் காலங்களில், புதுக்கவிதைகள் எழுதிக் கொண்டிருந்த நான், தந்தையின் சொற்படி மரபுக் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். தந்தையாரின் வழிகாட்டுதலின்படி குழந்தை எழுத்தாளரானேன்.
வாழ்க்கையை அதன் போக்கிலே ஏத்துக்கணும். அது வர்ற வழியில் எதிர்கொள்ளணும். வாழ்க்கையைப் பொறுத்தமட்டில் அதீத மகிழ்ச்சி, அதீத துயரம் இரண்டுக்குமே அர்த்தமில்லைன்னு நினைக்கிறேன். ஏன்னா, அவை மாறிக்கிட்டே இருக்கும். பெண்கள் தங்களுடைய தேவைகளைப் போராடித்தான் பெற வேண்டும் என்கிற சூழல் வந்தால் போராடத் தயங்கக் கூடாது. போராடும் முறைகளை அவங்கவங்க வாழ்வியல் சூழலுக்குத் தகுந்த மாதிரி தனது ஆளுமை, மதிநுட்பத்தால் வடிவமைச்சுக்கணும்.
ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, சமஸ்கிருதம், ரஷ்யன் மற்றும் பிரெஞ்ச் மொழிகளைக் கற்றவர். இவருடைய படைப்புகள் கன்னடத்திலும், இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. தமிழ் வளர்ச்சிக் கழக விருது, கல்கி சிறுகதைப் போட்டியில் பரிசு உள்பட பல விருதுகளைப் பெற்றவர். சில நூல்களைத் தமிழில் மொழிபெயர்ப்பும் செய்திருக்கிறார். உலக வரலாறு பற்றிய அவருடைய பொது அறிவும் வியப்பை அளிக்கும் வண்ணம் இருந்தது.
மகாத்மா காந்தியிடம் மட்டற்ற பக்தி கொண்டு சுதந்திர பாரதம் உருவாக வேண்டும் என்று அயராது உழைத்தவர்களில் குமுதினியும் ஒருவர். காந்தீயத்தை முன் வைத்து அவர் எழுதியுள்ள கதைகள் மற்றும் கட்டுரைகள் அனைத்துமே விடுதலைப் போராட்டத்தை எடுத்துக்கூறுகின்றன. இவற்றை ஒரு மணித்திரள் எனலாம். இதற்கு முக்கிய காரணம் வெறும் பேச்சு, எழுத்து என்று அவர் பின்தங்கவில்லை.
அம்மாவின் பனித்துளி நாவல் ரொம்ப பிரபலமாக்கியது. அம்மா பனித்துளி நாவல் எழுதியபோது நிறைய தோழிகள், ‘இந்த நாவலை எழுதியது உங்க அம்மாதானே நாங்க பார்க்கணும்’ என்று சொல்லி அம்மாவைப் பார்க்க வீட்டுக்கு வருவார்கள். அவர்களுடைய அம்மாக்களோ அம்மாவை நவராத்திரிக்கு வரச்சொல்லி வற்புறுத்துவார்கள். அப்போதுதான் அம்மா ஒரு பெரிய எழுத்தாளர் என்று உணர்ந்தேன். அம்மாவுடைய அருமை பெருமையைக் காலந்தாழ்ந்த பின்னே நாங்கள் புரிந்துகொண்டோம்.