UNLEASH THE UNTOLD

படைப்பாளர்கள்

 கனவு தேசமா, மர்ம தேசமா?

இதுவரை உலகில் கட்டப்பட்டுள்ள வழிபாட்டுத் தலங்களில் மிகப்பெரிதான அங்கோர்வாட், உலகின் எட்டாவது அதிசயம் எனப் பேச்சுக்குச் சொல்லப்பட்டாலும், உண்மையில் காண்போர் மனதைக் கவரும் முதல் அற்புதம் இதுவாகத்தான் இருக்க வேண்டும். நான் பார்த்த வரையில் அழகால் மயக்கும் தாஜ்மஹாலையும், பகட்டாக எழும்பி நிற்கும் எம்பயர் ஸ்டேட் பில்டிங்கையும் பின்னுக்குத் தள்ளி விட்டு என் மனதில் முதலிடத்தில் வந்து நிற்பவை அங்கோர்வாட் கோயில்களே. யுனெஸ்கோவினால், உலகப் பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு, காலம் கடந்து நிற்கும் அந்தச் சிற்ப உலகிற்குள் நுழைந்த நொடியில் என் கனவு தேசம், மர்மதேசமாக மாறியதைப் போன்ற உணர்வு.

 கல்யாண அகதிகள்

இந்தக் கல்யாணங்கள் ஏற்படுத்தப்பட்டதன் நோக்கம் தனக்கென்று ஒரு பாதுகாப்பு வேண்டும். அது உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும், பொருளாதார நிலை சரியில்லாமல் இருந்தாலும் ஒருவருக்கு இன்னொருவர் உதவிக் கொண்டு அனுசரணையாக இருந்து, உறவுச் சங்கிலியின் கண்ணிகள் அறுந்து போகாமல் காத்துக் கொள்ள வேண்டிதான் திருமணங்கள் தோற்றுவிக்கப்பட்டன.

கனவு தேசம் நோக்கி

ஒரு மனிதனின் கற்பனை ஆகப்பெரும் கலைவடிவமாய், உலகின் பிரமாண்டமாய் வியாபித்து நிற்பதைக் காணவேண்டுமென்ற பித்து. கண் மூடினால்  கலைநயமிக்க கட்டிடங்கள் கனவுகளாய் உலா வர,  கால எந்திரத்தில் பின்னோக்கிப் போய், அந்த பிரம்மாண்டத்துக்குள் நான் உலவிக்கொண்டிருக்கிறேன்.

 'நோ' சொல்லுங்க...

சரியான திட்டமிடல் இல்லாதவர்கள் வெகு எளிதாக மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். செய்ய இயலாத வேலைகளுக்கு நோ சொல்லுபவர்கள் மனச் சிதைவு நோய்களுக்கு ஆளாவதில்லை. எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்பவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். மனதை நேர்மறை எண்ணங்களால் லகுவாக வைத்துக் கொள்ள வேண்டும்

   பாராட்டக் கற்றுக் கொள்வோம்...

உண்மையாகப் பாராட்ட வேண்டும். பொய்யான புகழ்ச்சி வெகு விரைவில் எல்லாருக்கும் புரிந்துவிடும். நம்பகத்தன்மை மறைந்துவிடும். ஆனால் தயக்கமின்றிப் பாராட்டுதல் இரு சாராருக்கும் மனமகிழ்ச்சி தரும். வெறுமனே பாராட்டாமல் அவர்கள் செயலில் ஒரு சிறு பகுதியைக் குறிப்பிட்டு பாராட்டினால் இன்னும் நன்றாக இருக்கும். குழந்தைகளைப் பாராட்டும் போது அவர்கள் இன்னும் உற்சாகமாகி, நிறைய நல்லவற்றைக் கற்றுக் கொள்வார்கள். மட்டுமின்றி அவர்களும் பிறரைப் பாராட்டும் நல்ல பழக்கத்தைக் கற்றுக் கொள்கிறார்கள். இது அவர்களை வாழ்க்கையில் பன்மடங்கு உயர்த்தும். இணையரைப் பாராட்டும் போது வாழ்க்கை மிக இனிதாக மாறும். அக்கம் பக்கத்தினரைப் பாராட்டினால் இணக்கமும், பாதுகாப்பும் கிடைக்கும். உறவுகள், நட்புகளைப் பாராட்டும் போது அவை நல்லதாகத் தொடரும். தன்னிடம் பணிபுரிபவர்களைப் பாராட்டும் போது இருதரப்புமே மகிழ்ச்சி அடையும். வேலையும் சிறப்பாக நடக்கும்.

தேசியவாதம் – இடதா, வலதா?

எதிர்பாராதவிதமாக, புலம்பெயர்ந்தவர்களுக்கு வரும் பாதுகாப்பின்மை உணர்வுக்குத் தீர்வே கிடையாது. உதாரணத்திற்கு, புலம் பெயந்த ஒருவரின் அடையாளங்களைப் பார்ப்போம். ஒருவர் தமிழ் நாட்டில் பிறக்கிறார்; அவரது தேசிய/பண்பாட்டு அடையாளம் தமிழ்; குடியுரிமை அடையாளம் இந்தியன். அதே நபர் கனடாவிற்கு வந்து குடியுரிமை பெற்ற பின் அவரது தேசிய/பண்பாட்டு அடையாளம் இன்னமும் தமிழ்தான். ஆனால், அவரது குடியுரிமை கனடியன். எனவே, அடையாளம் எதுவாகவும் மாறலாம்; அதன் மூலம் ஒடுக்குமுறைகள் நிகழலாம், நிகழாமலும் போகலாம். ஆனால் ஒடுக்குமுறை நிகழும்பட்சத்தில், சமூகநீதியின் வழியில் தீர்வு காண வேண்டும்.

உள்ளாற எப்போதும் உல்லாலா...

ஒரு வெற்றுப் பாட்டிலில் உள்ள காற்றை வெளியேற்ற வேண்டும் என்றால் அதனுள் முதலில் தண்ணீரை ஊற்ற வேண்டும். அப்போது காற்று தானாகவே வெளியேறிவிடும். அது போல நாம் எதிர்மறை எண்ணங்களை நமக்குள்ளிருந்து அகற்ற வேண்டும் என்று நினைத்தால், முதலில் நம் மனதை நேர்மறைச் சிந்தனைகளால் நிரப்ப வேண்டும். அப்போது தானாகவே நாம் நினைத்தது நடக்கும். 

கார்த்தீஸ்வரி

“இல்ல டீச்சர்… செத்துப் போயிட்டா…” எல்லோரும் அமைதியாய் இருக்க, ஒரு குட்டி வாண்டு கத்தியது. வசந்திக்கு ஒரு கணம் மூச்சு நின்றது. என்ன நடந்தது? ஏதும் விபத்தா? விசாரித்த போது, எதையும்  மறைக்கத் தெரியாத அந்தக் குழந்தைகள் கதை கதையாகச் சொன்னதன் சாராம்சம் இதுதான்.

பெண் விஞ்ஞானிகள் எப்படிப்பட்ட உடைகளை அணிவது சரியாக இருக்கும்?

ஒருவர் சிறந்த விஞ்ஞானியா இல்லையா என்பது அவர் செய்யும் வேலையைப் பொறுத்தது, உடையைப் பொறுத்தது அல்ல. ஆண் விஞ்ஞானிகள் என்று வரும்போது இந்தத் தெளிவான பார்வை இருக்கும். ஆனால், பெண் விஞ்ஞானிகளுக்கு அந்த சௌகரியம் இருப்பதில்லை. பெண்களை எல்லா இடத்திலும் பின்தொடரும் உடைப் பிரச்னை ஸ்டெம் துறையிலும் அவரைப் பாதிக்கிறது என்பதே கவலைக்குரிய நிதர்சனம். ஸ்டெம் பெண்களுக்கும் உடைக்குமான தொடர்பில் பல்வேறு இழைகள் உண்டு.

தினமும் என்னைக் கவனி...

நம் இந்தியச் சமூகத்தில் உடலுக்கு முக்கியத்துவம் எத்தனை பேர் கொடுக்கிறோம்?. குறிப்பாகப் பெண்கள். உடலுக்குப் பயிற்சிகள் செய்ய வேண்டும் என்று சொன்னால், “அதெல்லாம் எதுக்கு? வீட்டு வேலை செஞ்சாலே போதும். அவருக்குப் புடிக்காது. குழந்தைகளை யார் பாக்குறது?” என்றெல்லாம் விதவிதமாகப் பதில் பேசி தங்கள் இயலாமையை மறைப்பவர்கள் நம் இந்தியப் பெண்கள். உடலைப் பேண வேண்டும் என்று பள்ளிப் பருவத்தில் இருந்து பாடம் படித்தாலும் சோம்பேறித்தனத்தால் நம் உடலை நாமே வீணடித்து விடுகிறோம். எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி நன்றாகச் சாப்பிடக் கூடியவர். கடினமாக வேலைகளும் செய்வார். ஆனால் வடை, பஜ்ஜி, போண்டா போன்ற எண்ணெய்ப் பண்டங்கள் அன்றாடம் அவருக்கு வேண்டும். கடையில் வாங்க மாட்டார். உடலுக்கு ஆகாது (?) என்று வீட்டிலேயே தினமும் தயாரிப்பார்.