UNLEASH THE UNTOLD

Tag: mental health

உணர்வைக் கையாளணுமா, கட்டுப்படுத்தணுமா?

நம் மகிழ்ச்சி, துன்பம், வளர்ச்சி, வாழ்க்கை தரம் அனைத்தையும் முடிவு செய்வது நம் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள் அல்ல, அதை ஒட்டிய நமது உணர்வுகளும் அதன் தொடர்ச்சியான நமது செயல்களும்தாம். நிகழ்வை கட்டுப்படுத்தும் ஆற்றல் நமக்கில்லை, அதனை ஒட்டிய உணர்வைக் கையாளும் ஆற்றல் நம்மிடம், நம்மிடம் மட்டுமே உள்ளது.

அன்யோன்ய உறவு முக்கியமானது!

ஏனென்றால் மனிதர்களுக்குக் காதலிப்பது, காதலிக்கப்படுவது, அன்யோன்யமான உறவில் இருப்பது, இளமையிலும் முதுமையிலும் எல்லாப் பருவ வயதுகளிலும் பிடித்தே இருக்கிறது. ஆக இந்த அடிப்படையான உயிரியல் தூண்டுதலும் அன்யோன்யத்தின் மீதான ஆசையும் ஒருபுறம் இழுக்க, மறுபுறம் நம் மூளை சொல்லும் வேண்டாம் என்ற தீர்வுக்கும் இடையே எழும் குழப்பம்தான்.

சுய கட்டுப்பாடே சுதந்திரம்!

என்றோ ஒருநாள் அல்லது ஒருவாரம் அல்லது ஒரு மாதம் நேர்மறையாகச் சிந்தித்துவிட்டு, எல்லா நாள்களும் நலமோடு இருப்பது என்பது இயலாது. சாப்பிடுவது, தூங்குவதுபோல அன்றாட செயல்களாக, உடற்பயிற்சிகளும் மனப் பயிற்சிகளும் இருக்க வேண்டும். அன்றன்றைக்கு உட்கொள்பவற்றை உட்கொண்டு, கழிப்பவற்றைக் கழிக்க வேண்டும். அதுவே ஆரோக்கிய வாழ்வு!

வாழ்க்கையின் பூரணத்துவம்!

மகிழ்ச்சிக்கான காரணங்கள் நிறைந்த வாழ்க்கையில் சில சவால்களும் இருக்கத்தான் செய்கின்றன. ஏனென்றால், நாம் எல்லாருமே, எல்லாருடைய வாழ்க்கையுமே perfectly imperfect. அதுவே வாழ்க்கையின் பூரணத்துவம். அதுதான் முழுமையானதும் கூட!

உங்களின் முதன்மையான உறவு எந்த உறவு?

உங்கள் வாழ்வில் அந்த நபர் நீங்கள்தான். அந்த முக்கியமான உறவு உங்களுக்கும் உங்களுக்குமான உறவுதான். ஏனென்றால் உங்களைப் பற்றி நன்றாகத் தெரிந்தவர், உங்கள் வாழ்வில் நடந்தவை குறித்து அனைத்தும் அறிந்தவர் நீங்கள்தாம். இதுவரை ஒரு நிமிடம்கூட இடைவெளி இல்லாமல் அதிக நேரம் செலவிட்டதும் உங்களிடம்தான்.

உறவுகளில் மகிழ்ச்சியைப் பெற...

தனக்கு எது வேண்டாம், எது வேண்டும் என்ற தெளிவு இருப்பதால், தங்களுக்காகத் திருமண உறவை அமைத்துக்கொள்ள முடியும். அல்லது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும். வாழ்க்கை மிக அழகாக மாறும்.

வாழ்தல் இனிது; உறவுகளோடு வாழ்தல் இனிதினும் இனிது!

உணர்வுகளைப் பொறுத்தவரை, உங்கள் உணர்வுகளுக்கு நீங்களே பொறுப்பு. உணர்வுகள் மொத்தமும் உங்களுடையவையே. உங்களால் உணரபட்டவை. உங்களுக்குள்ளாகவே ஓடிக்கொண்டிருப்பவை. இது உறவுகளால் ஏற்படும் உணர்வுகளுக்கும் பொருந்தும்.

உங்களுக்காகவும் பேசுங்கள்!

மற்றவர்களுக்கான உதவிகளைச் செய்வதற்கு முன்னால், உங்களுக்கு நீங்கள் உதவி செய்யக் கற்றுக்கொள்ளுங்கள். அவரவர்களின் செயல்களுக்கான நியாயங்கள் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கும். அதைக் கருத்தில் கொள்வதற்கு முன்னால், உங்கள் நியாயங்களைக் கருத்தில் வையுங்கள்.

உணர்வுகள் வெங்காயம் போன்றவை...

உணர்வுகள் வெங்காயம் போன்றவை. நீங்கள் உணர உணர, ஏற்றுக்கொள்ள ஏற்றுக்கொள்ள, வெங்காயம் போன்று ஒவ்வோர் அடுக்காக உரிந்து ஒன்றுமில்லாமல் ஆகிவிடும். அதன் பின்னர் பிரச்னைகளைக் கையாளுவதற்கான வழிமுறைகளும் எடுக்க வேண்டிய தீர்மானங்களும் அழகாகத் தெரியவரும்.

வாய்ப்புகளின் தொகுப்பே வாழ்க்கை!

நம்மை அன்பு செய்கிற, கொண்டாடுகிற பல நபர்களைக் கணக்கில்கொள்ளாமல், நம்மை நிராகரித்த ஓர் உறவைப் பற்றி மிகவும் வருத்தப்பட்டுக் கொண்டிருப்போம்.

வேலைக்கான தேர்வில் தகுதி இழந்தால், அதைவிட அதிக ஊதியமும் மனநிறைவும் தரக்கூடிய வேலைகள் இந்த உலகில் நிறைய இருக்கின்றன என்பதை மறந்து வருத்தப்படுகிறோம்.