UNLEASH THE UNTOLD

Tag: Kamali Panneerselvam

பொறுப்பாக எப்போது நடந்துகொள்ளப் போகிறோம்?

ஒருவரை விமர்சிக்க, தூற்ற தங்கள் சொந்த காழ்ப்புணர்ச்சியை அளவீடாகப் பயன்படுத்துகின்றனர். அதில் வெளிப்படுவது நான் அப்படியானவர் இல்லை, ரொம்ப பர்பெக்ட் என்பதைத்தான் வெவ்வேறு வகையில் கூற முயல்கின்றனர்.

பண்டிகைகள்... திருவிழாக்கள்... பெண்கள்...

பண்டிகை நாட்கள், விசேஷ நாட்கள் என்பது விடுமுறை நாட்கள் என்றாலும் ஒய்வுக்கான நாள்கள் அல்ல. சாதாரண நாட்களைவிட பன்மடங்கு உழைப்பைக் கோரி நிற்கும் நாட்கள். வீடும் அடுப்படியும் மட்டுமே பெண்களின் உலகமாக இருந்த காலம் இப்போது இல்லை. பல வீடுகளில் பெண்கள் வேலைக்குச் செல்கிறார்கள். வேலைக்குச் செல்வதால் அவர்களின் வீட்டு வேலைகள் குறைந்துவிட்டதா என்றால் இல்லை. என்ன வேலைக்குச் சென்றாலும், சடங்குகள், மத நம்பிக்கைகளில் விருப்பம் இல்லாவிட்டாலும், வீட்டில் விஷேசங்கள், பண்டிகைகளைக் கொண்டாடியே ஆக வேண்டிய கட்டாயத்தில்தான் பல பெண்கள் இருக்கின்றனர்.

காதல் கொலைகள்...

பெண் சாதியைக் கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பில் இருப்பதால், அவள் வேறு சாதி ஆணைக் காதலிப்பதோ அவன் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதோ பெரும் கெளரவ குறைச்சலாக பார்க்கப்படுகிறது. சாதி ஆணவக்கொலையில் அதிகளவில் கொலையாவது பெண்கள்தாம்.

மீ டூ…

பாலியல் சீண்டலில் பாதிக்கப்பட்ட பலரும் தங்களுக்கு நேர்ந்த அத்துமீறல்களை வெளியே கூறத் தொடங்கும் போது, நம்மைப் போன்றுதான் பலருக்கும் நடந்திருக்கிறது, இதில் பயப்படவோ குற்ற உணர்வு அடையவோ கவலை கொள்ளவோ தேவையில்லை எனத் தங்களை அமுக்கி வைத்திருக்கும் துயரங்களில் இருந்து எளிதில் வெளிவர இந்த மீ டூ உதவியாக இருக்கும் என்கிற அளவிலும் இது தீவிரமாக முன்னெடுக்கப்பட வேண்டிய ஒன்றுதான்.

சமூக வலைத்தளமும் பெண்களும்

நாம் என்ன விஷயங்களைப் பகிர்ந்தாலும், நம்பிக்கையானவர்களிடம் சுயநினைவோடுதான் கூறுகிறோமா என்பதை நமக்குள்ளாக உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். சில நேரம் ஏதோ ஒரு நெகிழ்ச்சியான தருணத்தில், உணர்வு வயப்பட்ட நிலையில் நெருக்கமாக உரையாடி இருக்கலாம், அல்லது பொதுவில் பகிர முடியாத சொந்த விஷயங்களைப் பகிர்ந்து இருக்கலாம். பின்னர் அந்த நபருடன் பிணக்கு ஏற்பட்டு பிரிந்து இருக்கலாம், அல்லது அந்த நபரின் செயல் ஏதோ ஒன்றின் காரணமாக அவரைப் பிடிக்காமல்கூடப் போகலாம். அப்படிப்பட்ட நேரத்தில் நேர்மையாக அவர்களிடம் கூறி விலகிவிடுவது நல்லது. விலகிய பின் அவர்களைப் பற்றிப் பேசாமலும், அவர்களைப் பின்தொடராமலும் இருப்பது அதைவிட நல்லது.

திருமணம் தாண்டிய உறவு

ஆண் பெரும்பாலும் ஒரு பெண்ணை அடைய காட்டும் முனைப்பை அதைத் தொடர்வதில் காட்டுவதில்லை. இந்த உண்மையைப் பெண்களால் ஏற்க முடிவதில்லை.

உடல், உடை, சர்ச்சை

பெண்கள் உடல் வெளியே தெரிந்துவிட்டால் அவள் உயிர் வாழக் கூடாது, கணவனுக்கு மட்டுமே அவள் உடல் உரித்தானது, அதை அந்நிய ஆண்கள் பார்த்துவிட்டாலே அவள் வாழத் தகுதியற்ற பெண் போன்ற பத்தாம்பசலித்தனமான கருத்துகள் இன்றும் கண்மூடித்தனமாகப் பின்பற்றப்படுவதால் எத்தனை உயிர்கள் பறிபோகின்றன?

பெண்கள் ஏன் வேலைக்குச் செல்ல வேண்டும்?

பெண் வேலைக்குச் செல்லாத வீடுகளில் அவள் ஊதியம் பெறாத சமையல்காரி, வேலைக்காரியாகதான் தொடருகிறாள். அவளை ராணி மாதிரி வைத்திருக்கிறேன் என்று சில ஆண்கள் ஏன் சம்மந்தப்பட்ட பெண்களே பெருமை பீற்றினாலும் உள்ளுக்குள் ஏக்கம் பீறிட, இயலாமையுடன்தான் வாழ்வைத் தொடருகின்றனர். ஆண்கள் எட்டு மணி நேரம் வெளியே வேலை பார்த்து சம்பாதித்து வருகிறான். ஆனால், பெண் 16 மணி நேரம் வீட்டில் வேலை பார்த்தாலும் அவளுக்கு எந்த வருமானமும் கொடுக்கப்படுவதில்லை. மூன்று வேளை உணவு, தங்குமிடம் இலவசம் என்பது மட்டுமே அவர்களின் வருமானமாக இருக்கிறது. மற்றபடி தனது தேவைகளுக்கு, தனது ஆசைகளுக்குப் பணம் கொடுப்பவரின் அனுமதி இல்லாமல் அவளாக எதுவும் செய்துவிட முடியாது.

குழந்தை பெற்றுக்கொள்ளும் முன்...

என் அம்மா பார்த்துக்கொள்வார், மாமியார் பார்த்துக் கொள்வார், உறவினர்கள் இருக்கிறார்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று பிறரை நம்பி குழந்தை பெற்றுக்கொள்வதும் கூட அபத்தம்தான். அவர்கள் குழந்தை வளர்ப்பில் துணை புரியலாமே தவிர, முழுப் பொறுப்பையும் ஏற்க முடியாது, கணவன், மனைவி இருவரும் குழந்தை வளர்ப்புக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டு, விட்டுக் கொடுக்க வேண்டியவை பற்றித் தீர ஆலோசித்து, அதன் பின் குழந்தை பெற்றுக்கொள்வது பற்றி யோசித்தாலே குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே பிரச்னை இருக்காது.

விவாகரத்தும் வியாக்கியானங்களும்

இன்றைய தலைமுறை ஆண்கள் நான் மனைவியின் சுமைகளைப் பகிர்ந்து கொள்கிறேன், வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்கிறேன் என்று சிலவற்றைப் பகிர்ந்தாலும், பல நூற்றாண்டுகளாக ஆணுக்குள் ஆழப் பதிந்துவிட்டு இருக்கும் பெண்ணின் இலக்கணம் வழுவுதலை பல ஆண் மனதால் ஏற்க முடிவதில்லை என்பதுதான் உண்மை.