UNLEASH THE UNTOLD

கிருஷ்ணப்ரியா நாராயண்

ஆடையா? அறியாமையா? எது சிக்கல்?

குடும்பத்துக்குள்ளேயே இருந்துகொண்டு தங்கள் சொந்தக் குடும்பத்துப் பெண்களுக்கே பாலியல் தொந்தரவுகள் கொடுத்த ஆண்கள் இங்கே இல்லையா?

வேண்டாமே கதாநாயக வழிபாடு

‘Self Love’ அதாவது சுய அன்பு / சுயப்பற்று இதுவே இத்தகைய மனப்பான்மையிலிருந்து விடுபடத் தீர்வாக அமையும். நாம் இங்கே யாரையும் விடத் தாழ்ந்தவர் இல்லை என்பதை முற்றிலுமாக உணரவேண்டும்.

குழந்தைகளை இயல்பாக வாழவிடுவோம்!

ஒருவேளை சாப்பாட்டுக்காக, வறுமை காரணமாக குழந்தைகளை வேலை செய்ய வைப்பது போக இப்பொழுது அதிகமான லைக்ஸ், கமெண்ட்ஸ், புகழின் மேல் இருக்கும் போதை கூடவே வருமானம் போன்றவற்றிற்காக சமூக வலைத்தளங்களில் \ ரியாலிட்டி ஷோக்களில் குழந்தைகளைத் தவறான முறையில் பெற்றோர்களே ஈடுபடுத்துவது நிச்சயம் கண்டிக்கத்தக்க செயல்.

மகளிர் உரிமைத் தொகை...

ஒரு மகன் லட்சத்தில் சம்பாதிப்பதால் மட்டுமே அவனுடைய தாய்க்கு அதில் உரிமை இருக்கிறது என்று பொருள் இல்லை. ஓர் அவசர செலவுக்கு, மருந்து, மாத்திரை வாங்க என்றாலும்கூட ‘எனக்கு இது வேண்டும் வாங்கிக் கொடு’ என்று வாய்விட்டுக் கேட்கும் நிலையில்தான் பல பெண்கள் இருக்கிறார்கள்.

மூட வேண்டியது மூடர் வாயை மட்டுமே...

பெண்கள் அழுக்கு உடையுடன் இருப்பதற்கான காரணம் நாள் முழுவதும் அவர்களை ஓய்வின்றி வைத்திருக்கும் வீட்டுவேலைகளே அன்றி வேரில்லை. நைட்டி என்றில்லை, வேலை செய்யும்போது உடுத்தும் புடவையும்கூட இரண்டு மூன்று வாரங்கள் தொடர்ந்து உபயோகித்தால் பிசுக்கு பிடித்துப் போகும். வெங்காயம் நறுக்கினால் போதுமே, அந்த உடையை மாற்றும் வரை அதன் வாடை நம்மைச் சுற்றிக்கொண்டே இருக்காதா?

பிரஷர் போடாதீர்கள் பெற்றோர்களே!

ஒவ்வொரு பிள்ளையும் ஒவ்வொரு ரகம். அவரவர் திறமையை அவரவர் அடையாளம் கண்டுகொள்ளவே அதிக கால அவகாசம் தேவைப்படும், அதுவும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். அப்படி இருக்க, அவர்களின் திறமையைப் பரீட்சை வைத்து, மதிப்பெண் அடிப்படையில் ஒரே அளவுகோலில் அளவிட இயலாது என்பதே உண்மை.