UNLEASH THE UNTOLD

Tag: women

ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதியா?

ஆணும் பெண்ணும் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களிலும் பெண்ணை மட்டும் குற்றவாளியாக நிற்க வைத்துவிடுகிறது இந்தச் சமுதாயம். எத்தனையோ தடவை சொல்லி இருப்பேன், எத்தனையோ குழந்தைகள் ஆதரவின்றி பெற்றோராக ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கின்றனர் அவர்களைத் தத்து எடுத்துக்கொள் என்று. ஆனால், மனிதர்களின் மனம் தத்து எடுத்துக் கொள்ளும் கருத்தை ஏற்றுக்கொள்ளவதில்லை.குழந்தை பெற்றுக் கொண்டால் மட்டுமே பெண் என்பவள் பூரணப்படுகிறாள், குழந்தை பெற்றால் மட்டுமே அவள் தாய்மை என்னும் உணர்வு அடைவதாகக் கற்பனைகளைப் புகுத்திவிட்டது பெண்ணின் மனதில்.

பெண்களின் உலகைத் திரையில் காட்சிப்படுத்த விரும்பினேன் - கண்ணகி திரைப்பட இயக்குநர் நேர்காணல்

எல்லா ஆண்களும் தன் தினசரி வாழ்க்கையில் பெண்களைக் கடந்து செல்கின்றனர். நிஜ வாழ்க்கையில் ஒவ்வொரு பெண்ணுக்கும் தனிக்கதைகள் இருக்கின்றன. அவர்களுக்கென்று உணர்வுகளும் வலிகளும் கனவுகளும் உள்ளன. ஆனால், சினிமாக்களில் அவர்களின் உணர்வுகளையும், கனவுகளையும் பிரதிபலிப்பதாகப் பெரும்பாலான காட்சிகள் இல்லை. கதாநாயகனுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் பெண் கதாபாத்திரத்துக்குக் கொடுக்கப்பதில்லை.

ஆடுவது சாமியா, மனிதனா?

அவருடைய அண்ணனும் சாமியாடுபவர். அவரும் தான் சாமியாடும் விஷயத்தை மறைத்து ஒரு பெண்ணைத் திருமணம் செய்தார். அவருடைய திருமணம் முடிந்த முதல் வருட திருவிழாவின் போது, கணவன் சாமியாடுவதைக் கண்ட, அவரது மனைவிக்கு அதிர்ச்சி. பெரிய சண்டை போட்டார். அதற்கு மேல் அவரால் என்ன செய்ய முடியும்? தாலி கட்டியாகிவிட்டது, வயிற்றிலோ பிள்ளை! சண்டையிட்டு ஓய்ந்தார், அவ்வளவுதான். இப்போது தமையன் வழியை தம்பியும் பின்பற்ற தயாராகிவிட்டார்.

“நாம மீட் பண்ணலாமா?” - இலக்கணம் மாறுதே...

“ஷாலினி, உன்னோட கஷ்டம் எனக்கு புரியுது. இன்னும் மூணே மாசத்துல எக்ஸாம் ரிசல்ட் வந்துரும். இதுல கண்டிப்பா, நான் கிளியர் பண்ணிருவேன். ஆன்சர் கீ செக் பண்ணிப் பாத்ததுல ஸ்கோர் நெறையவே வந்திருக்கு. இன்னும் மூணு மாதம்தான். கொஞ்சம் பொறுத்துக்கோ. நீ சீக்கிரமே வேலைய விட்டுடலாம். அன்னைக்கு நான் பேசுனது தப்புதான். நான், அக்கா கிட்ட பேசிக்கிறேன். தயவு செய்து கிளம்பு. நம்ம வீட்டுக்கு போகலாம்.”

மறுக்கப்பட்ட அன்பும் தரப்படாத அங்கீகாரமும் - இலக்கணம் மாறுதே... 14

“ஆடுற மாட்டை ஆடி கறக்கணும். பாடுற மாட்டை பாடி கறக்கணும்னு சொல்லுறதெல்லாம் சரிதான். ஆனா, அதுக்கு முன்னாடி அது பசு மாடு தானானு செக் பண்ணிக்கணும். ஏன்னா, காளை மாடுகிட்ட போயி பால் கறக்கணும்னு நினைக்கிறது முட்டாள்தனம்தானே?

யாரையும் திருத்துவது உன் வேலை அல்ல – இலக்கணம் மாறுதே -13

“நீ இருக்குறது ஒரு டென்னிஸ் மைதானம் என வைத்துக்கொள்வோம். நீ களத்தில் நிற்கிறாய். ஆட்டம் தொடங்கிவிட்டது. எதிரில் நிற்பவர் பந்தை உன் மேல் படும்படி அடிக்கிறார். உன் கையில் பந்தை அடிக்கும் மட்டை கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இல்லை எனக்கு டென்னிஸ் ஆடவே வராது. பல்லாங்குழிதான் ஆடவரும் என்று சொல்வதால் உனக்கு என்ன பலன்?”

எது என் உலகம்?

விழாவுக்கு அழைப்பு வந்த போது மாமனாரும் மாமியாரும் உடன் வருவதாகச் சொன்னபோது, உண்மையாகவே மனம் குளிர்ந்தான் வருண். தனக்கும் தனது திறமைக்கும் குடும்பத்திலும் அங்கீகாரம் கிடைப்பது ஓர் ஆணுக்கு எவ்வளவு பெரிய மகிழ்ச்சி. ஆகவே அவர்கள் இங்கே வந்ததில் அவனுக்குப் பெருமைதான். ஆனால், ஏதோ கப்பல் கவிழ்ந்ததுபோல் ஏன் முகத்தைத் தூக்கி வைத்திருக்கிறார்கள் என்றுதான் அவனுக்குப் புரியவே இல்லை. காரில் திரும்பும்போது மயான அமைதி. விழாவைப் பற்றி அத்தை, மாமா ஒன்றுமே சொல்லவில்லையே? எதுவும் பிடிக்கவில்லையா அவர்களுக்கு?

நீயும் பெண்ணியவாதியா? - இலக்கணம் மாறுதே... 12

சிலர் பெண்ணியம் பேசுபவர்களை, ஏதோ தங்களுக்குத் தீங்கிழைப்பவர்களாக நினைத்துக்கொள்கிறார்கள். உண்மையில் சம உரிமையுடன் நடத்தப்படும்போது அங்கு சுரண்டல்கள் இல்லை.
ஒரு பெற்றோருக்கு ஓர் ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை என வைத்துக்கொள்வோம். அந்தப் பெற்றோர், ஆண் குழந்தைக்கு அதிக கவனிப்பு கொடுத்து, சகோதரியை நீதான் கவனிக்க வேண்டும். நீதான் சம்பாதித்து, செலவு செய்து, திருமணம் செய்து கொடுக்க வேண்டும் எனச் சொல்லி வளர்க்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். அந்த ஆண் குழந்தையும் பொறுப்பு அனைத்தையும் தன் தலைமேல் போட்டுக் கொண்டு, தனக்கான வாழ்க்கையை வாழ்வதுமில்லை. அடுத்தவரை சுதந்தரமாக வாழவிடுவதும் இல்லை. ஆனால், பெண்ணியம் என்பது அவரவர் ஆட்டத்தை ஆடுவது . அவரவர் பொறுப்பை எடுத்துக்கொள்வது.

பாய்ஸ் டே அவுட்!

அத்தை மதியம் சாப்பிட்டுவிட்டு ஹாலில் நடுநாயகமாக டிவி முன்பு ஈசி சேரில் வீற்றிருந்தார். அவரை எப்போதும் அங்குதான் பார்க்கலாம். சரி, இவர் நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும். மாமாவுடன் மனம் திறந்து கொஞ்சம் ஆண்கள் உரிமை பற்றிப் பேசலாம் என்று ஆர்வத்துடன் கிளம்பினான். டைட்டான மெல்லிய டிஷர்ட் அணிந்தால் மாமா புருவம் உயர்த்துவார் என்பதால், திருமணத்தின்போது அவர்கள் எடுத்துக் கொடுத்த கட்டம் போட்ட, காலர் வைத்த சட்டையையே அணிந்துகொண்டான்.

கோயில்களில் ஆடைக் கட்டுப்பாடு அவசியமா?

திரையரங்கிற்கு எப்படி வேண்டுமானாலும் போகலாம். கோயிலுக்கு இப்படித்தான் வர வேண்டும் என்று இன்னொருவர் வாதாடுகிறார். திரையரங்கத்தில் கலாச்சாரம் கிடையாதா? அப்போது மட்டும் நாம் இந்தியாவைவிட்டு வெளியில் போய்விடுவோமா? அமெரிக்கப் பெண்கள் எல்லாம் இப்போது திருந்தி விட்டார்கள் என்று அறிவிக்கிறார் ஒருவர். அவர்கள் இங்கே வரும்போது சேலை அணிகிறார்கள் என்று பெருமை வேறு. நான் கேட்கிறேன். ஐயா… அவர்களுக்குச் சேலை ஒரு புதுமையான ஆடை அதனால் அதை அணிந்து பார்க்க விருப்பப்பட்டு அணிகிறார்கள். வருடம் 365 நாட்களும் சேலையே அணிய வேண்டும் என்று சொன்னால் அதை அப்படியே சுருட்டி உங்கள் முகத்தில்தான் வீசிவிட்டுப் போவார்கள்.