UNLEASH THE UNTOLD

Tag: Geetha Ilangovan

பெண்ணியம் பேசும் எழுத்துக்கு நோபல் பரிசு!

ஒருவரின் தனிப்பட்ட அனுபவம் என்று எதுவும் இல்லை. அவர் சார்ந்திருக்கும் வர்க்கமும் இனமும் சமுதாயமும் அரசாங்கங்களும் எடுக்கும் முடிவுகள், நேரடியாகவும் மறைமுகமாகவும் தரும் அழுத்தங்கள், பொது வாழ்வியல்முறை ஆகிய அனைத்தும் தனிநபர்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஆகவே, தனிநபர் தனது சொந்த அனுபவத்தைப் பேசினாலும், அந்தச் சமுதாயத்தின், வரலாற்றின் பிரதிநிதியாகத்தான் பேசுகிறார். பெண்ணுக்கு இது அதிகமாகப் பொருந்தும்.

சமையல்கட்டை விட மனமில்லையா தோழிகளே?

பெண் ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராகவே இருந்தாலும், “வீட்டில சமைப்பீங்களா? நீங்க சமைக்கறதுல உங்க குழந்தைகளுக்குப் பிடிச்ச ரெசிப்பி என்ன?” போன்ற அநாவசிய கேள்விகளைக் கேட்டு, அவர் வீட்டில் சமைப்பதை உறுதிப்படுத்திக்கொள்கின்றன. “வீட்டில் சமைக்க மாட்டேன்” என்று வெளிப்படையாகச் சொல்லும் பெண்ணை, “நீயெல்லாம் ஒரு பெண்ணா” என்று மறைமுகமாகக் குத்திக் காட்டி பகடி செய்கின்றன. இது அப்பட்டமான உரிமைமீறல்.

‘அழகை ஆராதித்துதான் ஆகவேண்டுமா ?’

ஆண் குழந்தையை, எப்படி அழகு பற்றிச் செயற்கையான கற்பிதங்கள் இல்லாமல் சுதந்திரமாக வளர்க்கிறோமோ, அதே போல் பெண் குழந்தையையும் வளர்க்க வேண்டும். தனது அறிவை, ஆரோக்கியத்தை, ஆற்றலை வளர்த்துக்கொள்ள அவர்களுக்குச் சொல்லித்தர வேண்டும் தோழர்களே. இங்கு ஆண் உழைத்தால் மட்டும் போதும், பெண்ணோ உழைப்பதோடு ‘அழகாகவும்’ இருக்க வேண்டியுள்ளது. அவளுக்கு இது மிகப்பெரிய சுமை.

திக்குத் திசை தெரியாதவர்களா பெண்கள்?

முதலில் வயதுக்கு வந்த பெண்ணை ஏன் தனியாக அனுப்புவதில்லை? அவளுக்குப் பாதுகாப்பு வேண்டுமாம். எதற்குப் பாதுகாப்பு? வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால் அவளுடைய so called ‘கற்பு’க்குப் பாதுகாப்பு அளிக்கிறார்களாம்.

பார்பி பொம்மைகளா பெண்கள்?

பெண் குழந்தைகளுக்காக விற்கப்படும் பொம்மைகளுக்கும் இதில் பெரிய பங்கு இருக்கிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், பார்பி பொம்மை. இந்தப் பொம்மையின் உடலமைப்புடன் ஒரு பெண் இயல்பில் இருக்க முடியுமா?

வாகனம் பழகு பெண்ணே!

வாகனம் ஓட்டினால் கல்வி கற்பதும், வேலைக்குப் போவதும் எளிதாகிவிடுமே, அவள் பொருளாதார சுதந்திரம் பெற்று உரிமைகளைக் கேட்டால் சிக்கலாகிவிடுமே என்று ஆணாதிக்கச் சமூகம் பயப்படுகிறது.

குடும்பமே பெண் குழந்தையிடம் பேசு; அவளைப் பேச விடு!

பெற்றோர், பெண் குழந்தையிடம் தினமும் உரையாட வேண்டும். அவள் கேட்கும் கேள்விகளுக்கு உளப்பூர்வமாக, நேர்மையாகப் பதிலளிக்க வேண்டும். அவளைப் பேசவிட வேண்டும்.

மனைவியை நேசிப்பவர்கள் ’வாசக்டமி’யை வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள்!

குடும்பக் கட்டுப்பாட்டைப் பற்றி இருவருமோ குடும்பமோ முடிவெடுக்கும் போது வாசக்டமி பற்றிப் புரிய வைக்க வேண்டிய முதல் பொறுப்பை, பெண்கள் கையில் எடுக்க வேண்டும்.

ஒரே காதல் ஊரில் இல்லையடா...

காதலியுங்கள், அது தோல்வியுற்றால் மீண்டும், மீண்டும் காதலியுங்கள். இந்தச் சமுதாயம் ஆணாதிக்கமானதுதான். ஆனால், பெண்ணைச் சக தோழியாக மதிக்கும், புரிதல் உள்ள ஆண் தோழர்கள் இங்கு இருக்கிறார்கள்.

பயணம் போங்கள் பெண்களே...

யணங்கள் நமது ஆளுமையைச் செறிவூட்டுகின்றன. மனஅழுத்தங்களிலிருந்து விடுவிக்கின்றன. நமது சுயத்திற்குப் புதிய பரிமாணங்களை அளிக்கின்றன. பரவசமூட்டுகின்றன.