இனிமேல் வருண் மீது கை நீட்ட மாட்டேன், அத்தை!
வருண் மனைவி தன்னை அழைத்துப் போக வந்ததை எண்ணி உள்ளூரப் பெருமையுடன் மூட்டைகளைக் கட்டத் தொடங்கினான். அடுத்த வீட்டு அண்ணன் சேகர் வந்து உதவி செய்து கொண்டிருந்தான்; நிறைய புத்திமதிகளுடன்.
வருண் மனைவி தன்னை அழைத்துப் போக வந்ததை எண்ணி உள்ளூரப் பெருமையுடன் மூட்டைகளைக் கட்டத் தொடங்கினான். அடுத்த வீட்டு அண்ணன் சேகர் வந்து உதவி செய்து கொண்டிருந்தான்; நிறைய புத்திமதிகளுடன்.
புது ஆண் ஒருவனைத் தன் பழகிய அறைக்குள் எதிர்பார்த்திருந்தாள் லதா. தள்ளியிருத்தலே பெருமதிப்பு என்றும் முடிவெடுத்திருந்தாள். ஆனாலும் தன் உடல் அப்படிச் சொல்லுமா என்பதில் அவளுக்கும் சந்தேகம் இருந்தது. மணப்பந்தலில் அவன் வாசம் அவளைத் துளைத்தபடியே இருந்தது. உடல் ஒரு போக்காகவும் அவள் ஒரு போக்காகவும் போய்க்கொண்டிருந்தார்கள்.
தீர்ப்பின்படி, சொத்து கணவனின் பெயரில் அல்லது மனைவியின் பெயரில் வாங்கப்பட்டிருந்தாலும், அது கணவன், மனைவி இருவரும் சேர்ந்து உழைத்து வாங்கியது என்றே கருதப்படும். இல்லத்தரசி நேரம் பார்க்காமல் பல பணிகளைச் செய்கிறார். அவர்களுக்கு நிர்வாகம் செய்யும் பண்பு, சமைக்கும் திறன், பொருளாதாரம், கணித அறிவு எல்லாம் அவசியமாகிறது. வீட்டைப் பார்த்துக்கொள்ளுதல் என்பதில் அடிப்படை மருத்துவமும் அடங்கி இருக்கிறது. அதனால் மனைவியின் இந்தப் பங்கை ஒன்றுமில்லாதது எனக் கூற முடியாது. கணவன் சம்பாதித்த சொத்தில் சம உரிமை மனைவிக்கு உள்ளது. மனைவி இல்லாமல் அதை அவர் சம்பாதித்து இருக்க முடியாது. பெண்கள் குடும்பத்திற்காக அனைத்தையும் செய்யும்போது இறுதியில் அவர்களுக்கு எதுவும் இல்லை எனக் கூற முடியாது. நீதிமன்றங்களும் பெண்கள் தன் தியாகத்துக்குச் சரியான பரிசு பெறுகிறார்கள் என்பதை அங்கீகரிக்க வேண்டும்.
நாம் என்ன விஷயங்களைப் பகிர்ந்தாலும், நம்பிக்கையானவர்களிடம் சுயநினைவோடுதான் கூறுகிறோமா என்பதை நமக்குள்ளாக உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். சில நேரம் ஏதோ ஒரு நெகிழ்ச்சியான தருணத்தில், உணர்வு வயப்பட்ட நிலையில் நெருக்கமாக உரையாடி இருக்கலாம், அல்லது பொதுவில் பகிர முடியாத சொந்த விஷயங்களைப் பகிர்ந்து இருக்கலாம். பின்னர் அந்த நபருடன் பிணக்கு ஏற்பட்டு பிரிந்து இருக்கலாம், அல்லது அந்த நபரின் செயல் ஏதோ ஒன்றின் காரணமாக அவரைப் பிடிக்காமல்கூடப் போகலாம். அப்படிப்பட்ட நேரத்தில் நேர்மையாக அவர்களிடம் கூறி விலகிவிடுவது நல்லது. விலகிய பின் அவர்களைப் பற்றிப் பேசாமலும், அவர்களைப் பின்தொடராமலும் இருப்பது அதைவிட நல்லது.
“இல்லம்மா, காலம் கெட்டுக் கிடக்கு. சோஷியல் மீடியா ரொம்ப மோசமா இருக்கு. பொண்ணுங்களுக்கென்ன எப்படி வேணா இருப்பீங்க. வீட்டு ஆம்பளைங்க மேல ஒரு சொல்லு யாராவது சொல்லிட்டா குடும்ப கௌரவம் கெட்டுப் போயிடும்மா. அதுக்குதான் சொல்றேன். கொஞ்சம் கண்டிச்சு வையி.”
2021ஆம் ஆண்டு தேசிய குற்ற ஆவணக் காப்பகம் புள்ளிவிவரப்படி தற்கொலை செய்துகொள்பவர்களில் ஆண்கள் 72.5சதவீதம், பெண்களோ 27.5 சதவீதம். ஆனால், அறிவியலுக்குச் சம்மந்தமே இல்லாத நம் மதங்கள் என்ன சொல்கின்றன? முதலில் படைக்கப்பட்டது ஆண்தான் என்றும் அவனுக்குத் துணையாகப் பெண்ணைப் படைத்தான் என்றும் பெண்ணைப் பாதுகாப்பதே ஆணின் தலையாய கடமை என்பது போலவுமான உருட்டுகளை உருட்ட, உண்மைக்குத் தொடர்பே இல்லாத கற்பிதங்களை மனிதர்கள் கடைப்பிடிப்பது இன்றும் தொடர்கிறது.
பெண்களுக்கும் இயற்கைக்குமான தொடர்பு, பாலினம், வர்க்கம், சாதி, இனம் போன்ற பிற அம்சங்களாலும் கட்டமைக்கப்படுகிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார். பெண்களுக்கும் இயற்கைக்குமான உறவைப் புனிதப்படுத்தாமல், இது சமூகரீதியாகவும் வரலாற்றுரீதியாகவும் வேறுபடும் என்பதை நாம் கவனிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
திரைப்படக் காட்சிகள் கொடுக்கும் பொய்யான கற்பனைகளால் தூண்டப்பட்டு எதையோ எதிர்பார்த்துத் திருமண வாழ்வைத் தொடங்கும் பல பெண்களுக்கும் ஆண்களுக்கும் முதலிரவில் தொடங்கி எல்லா இரவுகளிலும் கிடைப்பதென்னவோ பெரிய ‘பல்பு’தான்!
மாதவிடாயை அறிவியலாகப் பார்க்கும் சமூகத்தை உருவாக்க வேண்டுமே தவிர, ஆன்மிகத்தைத் தடுக்கும் செயலாகப் பார்க்க வேண்டாம் என்றே தொடர்ந்து கூற வேண்டிய அவசியம் இன்றும் இருக்கிறது.
ஆண் பெரும்பாலும் ஒரு பெண்ணை அடைய காட்டும் முனைப்பை அதைத் தொடர்வதில் காட்டுவதில்லை. இந்த உண்மையைப் பெண்களால் ஏற்க முடிவதில்லை.