UNLEASH THE UNTOLD

Tag: women

இலக்கணம் மாறுதே... 8

“நான் அருணைக் காதலித்தேன். அதனால் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.”

“அருணைக் காதலித்தாய் சரி, ஏன் கல்யாணம் செய்து கொண்டாய்?” என மீண்டும் கேட்டாள் நித்யா.

“காதலிச்சா கல்யாணம்தான் பண்ணுவாங்க. வேறு என்ன பண்ணுவாங்க?” என்று பதில் சொன்னாள் ஷாலினி.

“இல்லை ஷாலினி… நன்றாக யோசித்து பதில் சொல். காதலிச்சா கல்யாணம் பண்ணித்தான் ஆகணுமா என்ன? கல்யாணம் எதுக்காகப் பண்ணின?”

“சமூகத்துல ஒரு அங்கீகாரத்தோட வாழத்தான்…”

வெண்பாவுக்கு ஒரு நியாயம், வேந்தனுக்கு ஒரு நியாயமா?

வேந்தன் வெகு நேரம் அழுது கொண்டே இருந்தான். அதற்கும் அதட்டல் விழுந்தது. பின்பு படித்துக் கொண்டே இருக்கும் போது அப்பா கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து தேங்காய் துருவிக் கொடுத்தான், மாடியில் காயப் போட்ட துணிகளை எடுத்து வந்து மடித்து வைத்தான். செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றினான். மளிகை சாமான்களை அப்பா சொன்னபடி டப்பாக்களில் கொட்டி வைத்தான். அப்பாவுக்குப் பிடித்த சீரியலை உடன் அமர்ந்து பார்த்தான்.

முக்காடுகளை ஆண்களுக்கு அணிவித்த துவாரெக் பெண்கள்!

துவாரெக் பெண்களின் வளமான இலக்கியப் பாரம்பரியம் போற்றுதலுக்குரியது. ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கதைகளைக் கொண்டு செல்வதற்கு வாய்வழி பாரம்பரியத்தையே பெரிதும் சார்ந்துள்ளது. இந்தப் பாரம்பரியம் கவிதைகள், பழமொழிகள், நாட்டுப்புறக் கதைகள், புனைவுகள், புதிர்கள் உள்ளிட்ட வளமான ஆதாரங்களில் இருந்து வருகிறது. திருமணங்கள், பிறப்புகள், பருவங்களின் மாற்றம் உள்ளிட்ட முக்கிய சமூக நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் பெண்கள் கவிதைகள் இயற்றுகிறார்கள்.

தி கிரேட் இண்டியன் ஃபேமிலிகள்

இந்தக் குடும்ப வன்முறை கணவன், மனைவிக்கு இடையே மட்டுமல்ல வயதானவர்கள், குழந்தைகள் இடையே, வீட்டில் உள்ள மற்ற பெண்கள் புதிதாக வந்த பெண் மீது காட்டுவது என்று நிறைய உறவுகளிடம் ஏற்படலாம். பிரிந்து வாழும் தம்பதியர் இடையே, விவாகரத்து செய்து கொண்ட தம்பதியர் இடையேகூட ஒருவர் மற்றவர் மீது ஆதிக்கம் செலுத்தும் போது அது குடும்ப வன்முறையில் சேர்ந்தது.

காகிதப் பை முதல் டயாபர் வரை

பெரிய சீமாட்டியான ஜோசபின் கோச்ரேன், தனது வீட்டுப் பணியாளர்கள் தட்டுகளைக் கழுவத் தெரியாமல் கழுவுவதைப் பார்த்து நொந்துபோனார். நிறைய யோசித்து 1886ஆம் ஆண்டில் ஒரு பாத்திரம் கழுவும் இயந்திரத்தை (Dishwashing machine) உருவாக்கினார். உருவாக்கியதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய கண்டுபிடிப்பை வணிகமயமாக்கவும் எல்லா முயற்சிகளையும் எடுத்தார். இதற்கான முறையான காப்புரிமையைப் பெற்றார். 1893இல் நடந்த ஓர் உலகக் கண்காட்சியில் பங்கேற்ற எல்லா கேட்டரிங் நிறுவனங்களும் தன்னுடைய இயந்திரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தார். அதை நடத்திக் காட்டினார்.

ஓர் அறிவியலாளரை வரையுங்கள் பார்க்கலாம்!

“உங்களுக்குத் தெரிந்த பத்து விஞ்ஞானிகளைச் சொல்லுங்கள்” என்று நாம் பொதுவெளியில் கேட்டால், அந்தப் பத்துப் பேரில் எத்தனை பெண் விஞ்ஞானிகள் இருப்பார்கள்? இந்தக் கேள்வியைக் கொஞ்சம் மாற்றி, “உங்களுக்குத் தெரிந்த பத்துப் பெண் விஞ்ஞானிகளைச் சொல்லுங்கள்” என்று சொன்னால் எத்தனை பேரால் பத்துத் தனி பெயர்களைச் சொல்லமுடியும்? மேரி க்யூரியைத் தவிர, அவரது மகள் ஐரீன் க்யூரிக்கு அப்பால் ஏன் நமக்குப் பெண் விஞ்ஞானிகளைப் பற்றி அதிகம் தெரிவதில்லை?

பெய்யெனப் பெய்யா மழை

உலகில் நிலவும் பல்வேறு வகையான பாகுபாடுகளுக்கு எதிரான சிந்தனையாளர்களுக்கு இடையே ஏற்படுகின்ற முரண்பாடுகளையும் கருத்தியல் மோதல்களையும் இயல்பாகக் கடக்கின்றவர்கள், பெண்ணியச் சிந்தனையாளர்களிடம் ஏற்படுகின்ற முரண்களையும் கருத்தியல் மோதல்களையும் ஆரோக்கியமான விவாதங்களாக எதிர்கொள்ளாமல் குழாயடிச் சண்டையாகச் சித்தரித்து இழிவுபடுத்துகின்றனர்; முற்போக்காளர்கள், பிற்போக்காளர்கள் என்கிற வேறுபாடுகளின்றி அனைவரும் பாலினச் சமத்துவத்தைப் பின்பற்ற மறுக்கும் ஒற்றைப் புள்ளியில் இணைந்து பெண்ணியத்தின் மீதும் ஒட்டுமொத்த பெண்ணியச் சிந்தனையாளர்கள் மீதும் வன்மத்தை வெளிப்படுத்துகின்றனர்.

பெண்ணடிமைத்தனத்தைத் தூக்கிப் பிடிக்கும் விளம்பரங்கள்

செஃப் தாமு வந்து சோப் பவுடர் விற்கிறார். அதைப் பெண்களிடம்தான் விற்கிறார். ஒரு மாறுதலுக்கு ஆண்களிடம் துவைத்துப் பார்க்கச் சொல்லி விற்றிருக்கலாமே! சமையல் பொருட்கள், சமையலறைச் சாமான்கள், ஆடைகள், நகைகள் போன்றவற்றிற்குப் பெண்களைப் பயன்படுத்தும் விளம்பரங்கள், தொழில்நுட்பக் கருவிகள், டிஎம்டி கம்பிகள், சிமெண்ட் போன்ற விளம்பரங்களில் ஆண்களை மட்டுமே பயன்படுத்துகின்றனர். ஏன் பெண்களில் பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் இல்லையா என்ன?

பிறந்த வீட்டுக்குப் போன தாராவின் புருசன்

“ஆமாம். அநியாயம்ல? ஆனா புருசன் விட்டுட்டுப் போயிட்டாலும் தாரா கேரக்டர் படு சுத்தம். ரோட்ல போற ஒரு ஆம்பளையத் தப்பா பார்க்க மாட்டாங்க. அன்னிக்குப் பலகாரம் கொடுக்கப் போனேன், வாசல்ல தம்மடிச்சிட்டு இருந்தவங்க என்னைப் பார்த்ததும் உள்ள போயி அப்பாவை வரச் சொல்லிட்டாங்க. ஆண்களைச் சமமா மரியாதையா நடத்துறவங்க. அவங்க வாழ்க்கை போய் இப்படி ஆயிடுச்சே. ரொம்பத்தான் திமிரு அவங்க புருசனுக்கு.” – வருண்

பெண்களைப் பாதுகாக்கத்தான் ஆண் படைக்கப்பட்டானா?

ஒருத்திக்கு ஒருவன் என்றும் ஆண்களுக்குப் பலதாரம் என்றும் ஆணாதிக்க மரபு வேரூன்றியபோது பெண்ணுடல் ஆண்களுக்குப் பயன்படாத நாட்களில் (மாதவிடாய், கருவுற்றிருக்கும் / பிரசவித்த காலம்) பெண்களை உறைவிடத்திலிருந்து விலக்கி வைக்கப் பழகினர். ஆண் தனது முறையற்ற காமத்திற்காக முன்பைப் போல பரத்தையர் உறைவிடம் நோக்கிச் செல்லாமல், மாதவிடாய் இல்லாத மற்ற மனைவியுடன் கூடும் வாய்ப்பைப் பலதார மணமுறை ஏற்படுத்திக் கொடுத்ததால் மாதவிடாயான தீண்ட வசதியற்ற பெண்ணைத் தீட்டென்று ஒதுக்கி வைப்பது இயல்பு வழக்கானது.