UNLEASH THE UNTOLD

படைப்பாளர்கள்

மோதலும் காதலும்

உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று திரும்பும் தாத்தாவின் எடையும், பாட்டியின் எடையும் சமமாகவே இருக்கும். வலியோ வேதனையோ அவர்களுக்குள்ளாகவே பகிர்ந்து கடந்து விடுவார்கள். அன்பான வார்த்தைகளால் பேசியோ, அருகருகில் அமர்ந்தோ கூட அவர்களை கீதா பார்த்ததில்லை.

'டி' போட்டவரை 'டா' போட்டு அழைத்த முதல் பெண்ணிய போராளி!

மாபெரும் கவிஞர் ஒருவர் ‘டி’ போட்டு அழைத்ததாகவும் அதற்குப் பதிலாக ‘டா’ போட்டு பேசியது மட்டுமல்லாமல், வாய்க்கு வந்தபடி வசை பாடிய மிகவும் சுவாரசியமான பெண் ஒருவர் இருந்திருக்கிறார்! அப்படிப் பட்ட புரட்சிப் பெண்ணாக வலம் வந்தவர் கூழுக்கும் கஞ்சிக்கும் கவி பாடிய ஒளவையார். ‘டி’ போட்டு பேசியவர் யார்? சோழ மன்னனின் அவைப் புலவரான கவிச்சக்கரவர்த்தி கம்பர் தான்!

எங்களுக்கும் பாக்கெட் வேணும் டீச்சர்

பெண்களின் உடைகள்ல பாக்கெட் இல்லாததால பொருள்கள், பணம் போன்றவற்றை கையிலோ, தனிப்பையிலோ கொண்டுபோக வேண்டியிருக்கு. அதனால அது மேலயே கவனம் செலுத்த வேண்டியிருக்கு.

ஒரு மனுஷி ஒரு வீடு ஓர் உலகம்

என்ன வசதி இருந்தாலும் வேலைக்குப் போறதை மட்டும் விட்டுடாத. அதுதான் பெண்பிள்ளைங்களுக்கு அஸ்திவாரம் மாதிரி. எந்த சூழ்நிலையிலும் அது காப்பாற்றும்.

பெண் ஓவியம்

“தெருக்களில் வியாபாரம் செய்யும் பெண்களை தொடர்ந்து கவனித்து வருகிறேன். சேலையை வரிந்து கட்டுவது தொடங்கி பொது இடங்களில் தனக்கான இடத்தை லாவகமாக எடுத்துக் கொள்வது வரை என அவர்களிடம் உள்ள இயல்பான துணிவு, எதையும் எதிர்கொள்ளும் சமயோசிதம் கண்டு வியக்கிறேன். அதிலும் முதிய பெண்கள் காலை நீட்டியும், ‘அசால்ட்டாகவும்’ அமர்வதை ரசிக்கிறேன். ‘பெண் பார்வையில்’ அவர்கள் குறித்து நாம் அதிகம் தெரிந்துகொள்ள வேண்டும்.”

திகைப்பு

தொலைக்காட்சியை இயக்கி பென் டிரைவை செருகினாள். அவளுக்குப் பிடித்த பாடல்களின் தொகுப்பைத் திறந்தாள். புட்ட பொம்மா பாட்டை ஓட விட்டு, வீட்டின் கதவு சாளரங்களை அடைத்தாள். வசிப்பறையின் மையத்தில் நின்றபடி அந்தப் பாட்டுக்கு ஆனந்தமாகக் கூத்தாடினாள். இது தான் அசைவு, அடவு என்றெல்லாம் இல்லாமல் மனம் போல கை கால்களை வளைத்து நெளித்து, குதித்து சரி ஆட்டம் ஆடினாள். பாடல் முடியும் தருவாயில் மீண்டும் அதே பாடல். நான்கைந்து முறை ஆடியதில் வியர்த்து கொட்டியது. வேகவேகமாக மூச்சு வெளியேறியது. பெரிய சாதனை நிகழ்த்திவிட்டது போன்ற மிதப்பில் இருந்தது செண்பகத்தின் உள்ளம்.