ஒரு தேசம்... ஒரு மொழி... ஒத்து வருமா?
பேச்சு மொழி ஓடும் நதி போன்றது. எழுத்து மொழியோ அந்த நதியில் மிதக்கும் பனிக்கட்டி போன்றது என்பது அறிஞர் கூற்று. குளிரால் நதிநீர் உறைந்து பனிக்கட்டியானது போல் அடுத்த கட்டத்துக்கு மொழி நகர்ந்த போது பேச்சு மொழி இறுகி எழுத்து வடிவம் உண்டானது. இலக்கணங்களும் இலக்கியங்களும் தோன்றின. இப்படித்தான் ஒவ்வோர் இனக்குழுவுக்கும் ஒரு மொழி உண்டானது. அது வெறும் மொழியல்ல. அந்தக் குழுவினரின் வாழ்வியல் முறை, அவர்களின் உணவுகள், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், அன்றாடச் செயல்கள், அவர்கள் உபயோகித்த பொருள்கள், அவற்றின் குணங்கள் என்று நீண்டுகொண்டே போகும்.
