UNLEASH THE UNTOLD

Tag: Society

திருமணத்துக்குப் பிறகும் வேலை செய்வாயா சுரேஷ்?

“சாரி, எங்கள் கம்பெனியில் பல ஆண்களும் இப்படித்தான் திருமணமானதும் பொறுப்பின்றி வேலையை விட்டுவிடுகிறார்கள். We have least attrition rate with women… அதனால் இந்தப் பதவிக்கு நாங்கள் ஒரு பெண்ணைத்தான் தேர்வு செய்ய இருக்கிறோம். Very sorry!”

தங்கமே வெற்றி...

மாலதிக்கும் வெற்றிக்கும் அப்படியொரு சிரிப்பு அவர்கள் ஜாதகதப் பொருத்தம் போல பொருந்திக் கிளம்பியது. இரண்டும் மகள்களாகப் போய்விட்டதே என்று மாலதியும் சோர்ந்ததில்லை. வெற்றியும் மகனுக்கு முயற்சிக்கவில்லை.

உலகத் தாய்ப்பால் வாரமும் உள்ளூர் அலப்பறைகளும்

குழந்தை பராமரிப்பில் தந்தை பங்கெடுக்கிறபோது குழந்தைக்கும் தந்தைக்குமான பிணைப்பு வலுப்பெறும். தேவைகள்தாம் இங்கு உறவுகளை உருவாக்குகின்றன; குழந்தையின் பசித் தேவையைப் போக்கும் தாயை, குழந்தை தன்னுடைய உறவாக நம்புகிறது. அழுதல், சிணுங்கல், சிறுநீர் கழித்தல் போன்ற எதைச் செய்தாலும் உடனே வந்து நிற்கும் தாயை மட்டுமே அதிகமா உள்வாங்கும் குழந்தை எதற்கெடுத்தாலும் தாய்தான் தனக்கு வேண்டுமென்று எதிர்பார்க்கப் பழகிவிடுகிறது.

மாற்றங்களை வரவேற்போம்!

நாம் மாற வேண்டும் எனத் தோன்றுவது இல்லை. அடுத்தவரை மாற்ற வேண்டும், அடுத்தவர் மாற வேண்டும் என்றே தோன்றுகிறது.
மாற்றம் ஒன்றே மாறாதது எனச் சொல்லிக்கொள்வது எளிதாக இருக்கிறது. ஆனால், அதை நமக்குள் செயல்படுத்துவதுதான் கஷ்டமாக இருக்கிறது.

சிபி, ஒரு டீ...

அயர்ந்து உறங்கும் சிபியின் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டுவிட்டு, அதைவிட மென்மையான குரலில், “சிபி, டீ தாப்பா!” என்று எழுப்பிவிட்டு விட்டு மொட்டை மாடிக்கு வந்தாள்.

இனியும் தொடர்ந்து விளையாடுவீர்களா?

நெ: சிறப்பான முடிவு. தந்தைமையின் புனிதம் எவ்வளவு உயர்வானது என்று நிரூபித்துவிட்டீர்கள். புகழ் மிக்க விளையாட்டு வீரராக இருப்பது, பொறுப்பான அன்புத் தந்தையாக இருப்பது, ஓர் ஆணுக்கு எது முக்கியம் என்று கருதுகிறீர்கள்?

பெண் கல்வி பொருளாதார இழப்பா?

“இந்தா பாருங்க, என்னை எடுத்துக்கோங்க… நான் பொண்ணுன்னு என்னை 12 ஆவதோட நிறுத்திருந்தா நீங்க சொல்ற மாதிரி நல்ல டாக்டர்ன்னு பேர் வாங்கிருப்பேனா? இப்படி வைத்தியம் பார்க்கத்தான் என்னால முடிஞ்சிருக்குமா? உங்க பொண்ணு நல்லா படிக்கும்ன்னு சொல்றீங்க. நல்லா படிக்க வைங்க. உங்களால முடிலைன்னா அரசாங்கம் உதவித்தொகை குடுக்குது. சமூகத்துல பல நல்ல உள்ளங்கள் இருக்கு. அவங்க உதவியை நாம எடுத்துக்கலாம்.”

ஹிஜாப்: மத நம்பிக்கையா? தனிநபர் சுதந்திரமா?

நான் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாவது வரை ஹிஜாப் அணிந்து சென்றிருக்கிறேன். பள்ளியில் என்னுடன் படித்த சக தோழிகள் புர்கா அணிந்தும் வந்திருக்கின்றனர். ஹிஜாபோ புர்காவோ சக மாணவர்களுடன் பழகுவதற்கோ பேசுவதற்கோ எங்களது ஒற்றுமையிலோ எந்தவொரு குந்தகத்தையும் ஏற்படுத்தவில்லை. சக தோழிகள் அதை அணிந்து பார்த்து மகிழ்ந்திருக்கின்றனர். புர்காவை மற்ற மாணவர்கள் விரும்பியதைப் போல புர்காவிலிருந்து வெளிவர நான் விரும்பினேன். கால மாற்றம், சமூக சூழல், வாசிப்பு, புர்கா அணிய வேண்டும் என்கிற வலியுறுத்தல்கள் என எல்லாம் அந்த மாற்றத்திற்குக் காரணங்களாகின.

பெண்களைப் படிக்க வைப்பது, பொருளாதார இழப்பா?

“என்ன சொல்றது? நம்ம குடும்பத்துலதான் பொண்ணுகளை ப்ளஸ்டூக்கு மேல படிக்க வைச்சதில்லையே… பாட்டி படிக்கல. நான் ரெண்டாவதுதான் படிச்சிருக்கேன். நீ இப்போ ப்ளஸ் டூ படிக்கற. அதுவே பெருசு.”

ஒப்பிடலாமா?

நாமெல்லாம் பொருளாதாரத்துல யாரையும் சார்ந்திருக்காம இருக்கோம்ங்கிறதும் நமக்கான விசயங்களை நாம் செஞ்சுக்கணும்ங்கிற எண்ணம் இருக்கறதும் நம்மிடம் இருக்கும் நேர்மறை விசயங்கள். இது போல பெண்கள் தன் விருப்பங்கள் சார்ந்த வெளியை உருவாக்கிக்கணும். பல பெண்களுக்கு நம்மைப் போல இருக்கணும்னு ஆசை இருக்கு. இதெல்லாம் இந்தச் சமூகத்தில் இயல்பாக்கப்படணும்.