இடப்பெயர்கள்: மனித நினைவுகளின் எச்சங்கள்
மனிதன் நடந்த இடத்திற்கெல்லாம் இடப்பெயர்களும் நகர்ந்தன. அதாவது, மனிதர்கள் இடம் பெயர்ந்தபோது, அவர்கள் தங்கள் இடப் பெயர்களை எடுத்துச் சென்றனர் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மனிதன் நடந்த இடத்திற்கெல்லாம் இடப்பெயர்களும் நகர்ந்தன. அதாவது, மனிதர்கள் இடம் பெயர்ந்தபோது, அவர்கள் தங்கள் இடப் பெயர்களை எடுத்துச் சென்றனர் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
என் அப்பா என் அம்மாவை கொடுமை செய்தார். மனமுடைந்த என்னுடைய அம்மா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். என் அம்மாவினுடைய இறுதி சடங்கில் கலந்து கொள்ள கூட என்னை அனுமதிக்கவில்லை.
பல வீடுகளில் பெண்கள் தொடர்கதைகளை ஒரே புத்தகமாக வைத்திருப்பார்கள். இவ்வாறும் பல கதைகள் வாசிக்கக் கிடைக்கும். அவற்றிக்கு எடுத்துக் காட்டாக, ஜாவர் சீதாராமன் எழுதிய ‘மின்னல் மழை மோகினி’, ‘உடல் பொருள் ஆனந்தி’, கல்கியின் ‘சிவகாமியின் சபதம்’, ‘பொன்னியின் செல்வன்’ போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
“அரசுப் பள்ளிகளை நவீனப்படுத்தவும், அவற்றின் தரத்தை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளமல்ல, அவற்றைப் பெருமையின் அடையாளமாக மாற்றுவோம்”
ஓ, இதுதான் பிரச்னையா? உடை என்பதில் ஏன் இப்படி உயர்வு, தாழ்வு வந்துச்சுன்னு பேசுவோம். ஆதிமனிதர்கள் உடை போட்டிருந்தாங்களா? இன்னும் சில பழங்குடி மக்கள் முதன்மை வாழ்க்கை முறையில் உடை இல்லாம இருக்காங்க. ஆதிமனிதர்கள் தொடக்கத்தில் உடை போடாமத்தான் இருந்தாங்க. நாமதான் குரங்குல இருந்து பல கோடி வருசமா பரிணாமம் அடைஞ்சு மனிதனா வளர்ந்திருக்கோம்னு அறிவியல் அறிஞர் டார்வின் சொன்னார்ல்லயா…” எனத் தொக்கி நின்றது வாக்கியத்தோடு நிறுத்தினார் ஆஷா.
வரலாற்றுப் பெருமைமிக்க, பௌதீக வசீகரமிக்க, பன்முகக் கலாச்சாரம் கொண்ட ஓர் அழகிய மாங்கனி வடிவ தேசத்தை போர், தீவிரவாதம், இனக்கலவரம் எனப் பிரச்னை கொண்ட கண்ணீர்த்துளி தேசமாக மட்டுமே உலகின் கண்களுக்குக் காட்டிக்கொண்டிருக்கும் சமீபக்கால பதிவுகளிலிருந்து மாறுபட்ட, இலங்கையின் சிறப்புகள், தொன்மைகள், வாழ்வியல் முறை குறிப்பாகப் பெண்கள் குறித்து நானறிந்த, நான் உணர்ந்த சில துளிகளைப் பதிவுசெய்ய விரும்புகிறேன்.
குழந்தைகளாக இருந்தால், “என்ன பாடம் பிடிக்கும்?”, “உன் நண்பர்கள் யார்?”, “என்ன விளையாடப் பிடிக்கும்?” என்று பிரச்னை இல்லாமல் எதையோ கேட்கலாம். வளர்ந்தவர்களிடம் என்ன பேசுவது?
ஒரு சமுதாயத்தில், நிலத்தை அதிகாரமாக கருதுபவர்கள் அந்த சமுதாயத்தின் ஆதிக்க சக்திகளாகவும் நிலத்தை உயிராக கருதுபவர்கள் அந்த சமுதாயத்தின் ஒடுக்கப்பட்ட மக்களாகவும் இருக்கிறார்கள்
மிக மிக மோசமான தருணம் அது… பசியால் வாடும் ஒரு தாயையும் குழந்தைகளையும் இப்படிப் படம் எடுக்க வேண்டிய சூழல் வரும் என்று நான் நினைத்ததே இல்லை. கிழிந்த உடைகள்… அழுக்கான முகங்கள்… கைக் குழந்தை பாலுக்காக அழுதுகொண்டிருந்தது. என்னால் அவரின் பெயரைக் கூடக் கேட்க முடியவில்லை. அந்தப் பெண்ணும் எந்தக் கேள்வியையும் கேட்கவில்லை.
குடும்ப மரம் என்பது குடும்ப நபர்களின் வம்சாவளி அல்லது பரம்பரையைச் சேர்ந்தவர்களின் பெயர்களைக் குறிக்கும் ஒரு வரைபடம். அதில் ஆண்களை முன்னிறுத்தி ஓர் ஆணின் தந்தை, அவரின் தந்தை, அவரின் தந்தை என்று தந்தைவழி உறவு முறைகளாக ஒவ்வொருவரின் தந்தைப் பெயரும் குறிக்கப்பட்டிருக்கும். ஆணின் மகன் பெயர் கொடுக்கப்பட்டிருக்கும். மகள் இருக்கும் கொடி, குடும்ப மரம் அதிகமாக இருப்பதில்லை.