UNLEASH THE UNTOLD

ரம்யா சுரேஷ்

வணிகத் துறையில் பெண்கள்

கடந்த காலங்களில் பெண்கள் தொழில் தொடங்குவதற்கான சட்டங்கள் மிகக் கடுமையாகவே இருந்துள்ளன. குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகளில்கூடப் பெண்கள் தொழில் தொடங்க அவர்களது கணவர்களின் கையொப்பம் கட்டாயமாக்கப்பட்டது. பிறகு 1988இல் புதிய சட்டம் இயற்றப்பட்டு பெண்கள் சுதந்திரமாகத் தொழில் தொடங்கவும் மேலும் அரசாங்க ஒப்பந்தங்களில் விண்ணப்பிக்கவும் புதிய சட்டத் திருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டது.

எகிறும் விலைவாசி; பதறும் நடுத்தர மக்கள்

அதிகரித்துள்ள பல தனியார் வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களைக் கவர கடன் அட்டைகளையும் லோன்களையும் தாராளமாக வாரி வழங்கிவருகிறது. இதனால் மக்களின் வாங்கும் திறன் அதிகரித்துள்ளது. எல்லாக் கடைகளிலும் உணவகங்களிலும் மக்கள் தாராளமாகச் செலவு செய்து கொண்டிருக்கிறார்கள். கிரெடிட் கார்டுகளின் வருகையால் நடுத்தர மக்கள் தாங்கள் வாங்கும் சம்பளத்தைவிட வசதியான ஒரு வாழ்க்கைத் தரத்தை வாழ்ந்து பழகிவிட்டார்கள்.

பாக்கெட் உணவுப்பொருட்களில் குழந்தைகளை எச்சரிக்கும் வாசகங்கள் இடம்பெறுமா?

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (FSSAI) பாக்கெட் உணவுகளுக்கான நெறிமுறைகளை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி சர்க்கரை மற்றும் கொழுப்பின் அனுமதிக்கப்பட்ட அளவை மீறும் உணவுகள், உணவுப் பாதுகாப்பு ஆணையத்தின் விதிகளின்படி, அவை எந்த அளவிற்குக் குறிப்பிடுகின்றன என்பதைக் காட்டும் சிவப்பு மற்றும் பச்சை அடையாளங்கள் பாக்கெட்டின் வெளியில் அச்சிடப்பட வேண்டும் என்ற விதிகள் ஏற்கெனவே அமலில் உள்ளன. ஆனால், உணவு நிறுவனங்கள் சர்க்கரைக்கு உள்ள மாற்று பெயர்களான கார்ன் சிரப், பிரக்டோஸ், லாக்டோஸ், மால்டோஸ் என்று சாமர்த்தியமாக பாக்கெட்டுகளில் குறிப்பிட்டுவிடுகின்றன.

சென்னையில் தண்ணீர்ப் பஞ்சம்

நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்துவதன் மூலமாகவும், பருவநிலை சார்ந்திடாத நீர் வளங்களான கடல் நீர் சுத்திகரிப்பு, கழிவுநீர் மறுசுழற்சி போன்றவற்றை விரிவு படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும். மக்களும் தங்களது வீடுகளில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.