UNLEASH THE UNTOLD

<strong>காடு யாருக்குச் சொந்தம்?</strong>

கிராமப்புற ஏழை எளிய மக்கள் சூழலையெல்லாம் கண்டுகொள்ள மாட்டார்கள் என்ற உலகளாவிய பொது புத்தியையும் சிப்கோ இயக்கம் மாற்றியமைத்தது. வளங்கள் மற்றும் சூழலைப் பாதுகாப்பதற்கான மக்களின் இயக்கம் வெற்றி பெறும் என்பதற்கு சிப்கோ இயக்கம் உலகளாவிய முன்னுதாரணமாக விளங்கியது. சுற்றுச்சூழல் பிரச்னைகளைக் கையிலெடுத்துப் போராடுவது பணம் படைத்தவர்களின் பொழுதுபோக்காக இருந்த காலட்டத்தில், சூழலைப் பாதுகாப்பது ஏழைகளின் வாழ்வாதாரத்தை மீட்டுத் தரும் என்ற ஒரு புரிதலை சிப்கோ இயக்கம் ஏற்படுத்தியது. உலகளாவிய சூழல் லட்சியங்களில் சிப்கோவுக்கு இருந்த தாக்கம் அளப்பரியது.

மூடநம்பிக்கைகளும் மகப்பேறும்

‘கொடி சுற்றிப் பிறத்தல்’. தாய்க்கும் சேய்க்கும் தொடர்பைக் கொடுப்பது இந்தத் தொப்புள்கொடி. இந்தத் தொப்புள்கொடி வழியாகத்தான் கர்ப்பப்பையில் உள்ள குழந்தைக்கு ரத்த ஓட்டம் சீராகச் செல்கிறது. தாயிடம் இருந்து நல்ல ரத்தத்தை வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும், வயிற்றில் இருக்கும் குழந்தையின் கெட்ட ரத்தத்தை தாயிடமும் சென்று சேர்க்கும் ஓர் உறவுப்பாலம்தான் தொப்புள்கொடி. பனிக்குட நீரில் ஒரு நாணல் தண்டு போல் இக்கொடி வளைந்து நெளிந்து மிதக்கும். குழந்தை பிறக்கும்போது குழந்தையின் தொப்புள்கொடி குழந்தையின் கழுத்தைச் சுற்றி இருந்தால் அது குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. கழுத்தை இறுக்கும்போது அது மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை பாதிக்கிறது. சுவாசக்குழாயை இறுக்குவதால் சுவாசம் தடைபடுகிறது. இதனால் குழந்தைக்குத்தான் பிரச்னை வருமே தவிர, தாய்மாமாவுக்கு வராது.

குங் ஃபூ பௌத்த பிக்குணிகள்

காத்மாண்டுவில் உள்ள துருக் கவா கில்வா மடத்தில் பௌத்த பிக்குணிகளுக்கு குங் ஃபூ தற்காப்புக் கலைகள் கற்பிக்கப்பட்டன. குங் ஃபூ , தற்காப்புக்காகவும் அவர்களது உள் மற்றும் வெளிப்புற வலிமையை வளர்ப்பதற்காகவும், தியானத்தில் கவனம் செலுத்தவும், வலுவாக இருக்கவும், மற்றவர்களுக்காகக் கடினமாக உழைக்கவும் உதவியது.

சலனம்

அறைக்குள் வந்தேன். அனைவரும் உறங்கி இருந்தனர். உடைமாற்றி உறங்கத் தயாரானேன். கண்களை மூடினால் இன்று காலை முதல் நடந்தவை கண்முன் அரங்கேறின. முதலில் என்னைப் பற்றி அஃதர் அளித்த கருத்து. நான் என்னை அழைப்பாரென்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. நாம் வந்து இரண்டு மாதங்கள்கூட ஆகவில்லை. அதற்குள் என்ன சொல்லமுடியும் என்று சற்று அசட்டையாக இருந்துவிட்டேன்.

சக மனிதனை மதிக்கக் கற்றுக் கொடுப்போம்!

உங்களுக்கும் உங்கள் உறவுகளுக்கும் இடையே மனக்கசப்பு, முரண்பாடுகள் இருக்கும் பட்சத்தில் அதைக் குழந்தைகளிடம் கூறி, “நீங்க அவங்ககூடப் பேசக் கூடாது. நமக்கும் அவங்களுக்கும் சண்டை” என்று உறவினர்களைப் பற்றிய உங்கள் கண்ணோட்டத்தை குழந்தைகளிடம் திணிக்காதீர்கள்.

தட்டை மாத்திக்கலாமா?

பன்னிரண்டு மணி உச்சி வெயிலில் ஒரு மணி நேரம் நின்றால் மேனி ஒரு வாரத்தில் கறுத்துவிடும் என்று யாரோ சொன்னதைக் கேட்டு, மொட்டை மாடியில் மகனை நிற்க வைத்தார் அப்பா பரமசிவன். அருண் மயங்கி விழுந்து அக்கம்பக்கத்தினர் தூக்கிக்கொண்டு வந்ததும் பரமசிவனின் மனைவி பார்வதி, “என் புள்ளைய இனிமே இப்படிக் கொடுமைப்படுத்துன, நடக்குறதே வேற” என்று கணவனை நையப்புடைத்ததும் வரலாறு.

புத்தகங்களின் எதிர்காலம்

அமேசானில் வாங்காத புத்தகங்களையும் கிண்டிலில் படிக்க முடியும். வை.மு.கோதைநாயகி, ராஜம் கிருஷ்ணன், தொ.பரமசிவம் போன்ற பல எழுத்தாளர்களின் நூல்கள் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளன. அனைத்துத் தரப்பினருக்கும் இவர்களின் எழுத்து போய்ச் சேரவேண்டும் என்ற நல்ல நோக்கில் அரசு பணம் கொடுத்து நூல்களின் உரிமையை வாங்கி மக்களுக்கு அளிக்கிறது. இந்த எழுத்தாளர்களின் புத்தகங்கள் இணையத்தில் பி.டி.எஃப், வேர்ட், இபப் எனப் பல வகையில் கிடைக்கின்றன. அச்சில் இல்லாத பழந்தமிழ் நூல்களும் ஸ்கேன் செய்யப்பட்டோ, தட்டச்சு செய்யப்பட்டோ புத்தகவடிவில் இணையத்தில் உலாவுகின்றன. உலக நாடுகளில் நாட்டுடைமை ஆக்கப்பட்ட பிற மொழிப் புத்தகங்களும் இலவசமாகக் கிடைக்கின்றன.

<strong>சூழலும் பெண்களும்</strong>

ஓர் இடத்தின் சுற்றுச்சூழல் கெட்டுவிட்டால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்களாகத்தான் இருக்கிறார்கள். இன்னொருபுறம், சீரழிந்த சுற்றுச்சூழலை யார் பாதுகாக்கவேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது. சூழல் பாதுகாப்புக்காகக் குரல் கொடுக்கும் பெண்களைப் பாராட்டும் அதே நேரம், பச்சை மையில் கையெழுத்துப் போட்டு இந்த முடிவுகளை எடுக்கும் இடங்களில் அவர்களுக்கான பிரதிநிதித்துவம் இருக்கிறதா என்பதையும் கேள்வி கேட்க வேண்டும். இவற்றைத் தவிர, சாதி, வர்க்கம் போன்ற வெவ்வேறு சமூகப் படிநிலைகள் இந்தப் பிரச்னைகளுக்குள் எப்படி இயங்குகின்றன என்பதையும் கவனிக்கவேண்டும்.

வந்தியத்தேவன் வழித்தடத்தில் ஆனையிறவு

2000இல் ‘ஓயாத அலைகள் 3’ என்று பெயரிடப்பட்ட இரண்டாம் ஆனையிறவு சண்டையின் போது விடுதலைப்புலிகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மிக நீண்டதும், கடினமானதுமான சமர் அது. 35 நாட்களுக்குப் பின் ஏப்ரல் 22 ஆம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் வசமானது கோட்டை. ஆனால், இறுதி யுத்தத்தின்போது, 2009 ஜனவரி 10 ஆம் நாள் இலங்கை ராணுவம் மீண்டும் இப்படைத்தளத்தைக் கைப்பற்றியது. ஆனையிறவுக்கான ஈழப்போராட்டத்தில் ஏறத்தாழ 3000 புலிவீரர்கள் களமாடி வீரச்சாவடைந்ததாக விடுதலைப் புலிகளின் குறிப்பு கூறுகிறது. ஈழப்போராட்டத்தில் ஆனையிறவு மீட்பே மிகப்பெரிய வெற்றியாக வெளி உலகுக்குத் தோன்றியது.

சிலந்தி வலை சின் பெண்கள்!

பச்சைக் குத்தல் ஊசிகள் பழங்கால நடைமுறையில், மூன்று கூர்மையான மூங்கில் துண்டுகளை ஒன்றாகக் கட்டியோ மூங்கில் முட்களாலோ செய்யப்படுகின்றன. மாட்டுப் பித்தம், புகைக்கரி, இலைகள், புல் தளிர்கள் மற்றும் பன்றிக் கொழுப்பு ஆகியவற்றின் கலவையை வைத்து பச்சைக் குத்தும் மையைத் தயாரிக்கிறார்கள். இலைகள் நிறத்தைக் கொடுக்கின்றன, புகைக்கரி கிருமிநாசினியாகச் செயல்படுகிறது. புல் தளிர்கள் இறுதியில் சேர்க்கப்படுகின்றன. இது இயற்கையாகக் குணப்படுத்தும் முகத்தின் மறைப்பாகச் செயல்படுகிறது.