UNLEASH THE UNTOLD

படைப்பாளர்கள்

பெண்ணியம் ஆண்களுக்கு எதிரானதல்ல...

ஓர் ஆணை சமூகம் நிர்பந்திக்கும் இன்னோர் இடம் வாகனங்கள் ஓட்டுதல். ஆணுக்கு இரு சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனம் கண்டிப்பாக ஓட்டத் தெரிய வேண்டும் என்று ஒரு பொதுபுத்தி நிலவுவதால் கற்றுக்கொள்ள விருப்பமில்லாத ஆண்களும் வாகனம் ஓட்ட கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். வாகனம் ஓட்டுதல் ஒரு வாழ்க்கைத் திறன், ஆனாலும் அது ஆண்மையோடு தொடர்புடையதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. வாகனம் வேகமாக ஓட்டுவதையும் திறமையாக ஓட்டுவதையும் ஆண்மையோடு தொடர்புபடுத்தி இருப்பதால்தான் சாலையில் வாகனம் ஓட்டி வரும் சகப் பெண் தன்னைத் தாண்டிப் போகிறபோது பல ஆண்களால் அதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அவர்களைத் துரத்திச் சென்று, அவர்களைவிட வேகமாக முந்திக்கொண்டு செல்ல வேண்டும் என்கிற அவசியம் அவர்கள் மனதில் ஏற்படுகிறது.

ஆலயப் பிரவேசமும் ஐஸ்வர்யாவும்

“கடவுளுக்கு ஆண், பெண் என்கிற வித்தியாசமெல்லாம் இல்லை. மேலும், என் கோயிலுக்கு இவர்கள் வரக் கூடாது, அவர்கள் வரக் கூடாது என்று எந்தக் கடவுளும் சொல்லவில்லை. அதேபோல, இதைச் சாப்பிடக் கூடாது, இது தீட்டு என்று எந்தக் கடவுளும் சொன்னதில்லை. இவையெல்லாம் நாம் உருவாக்கின சட்டங்கள்தாம்.

‘லட்சியம்’ கெட்ட வார்த்தையா?

திருமணத்தின் போது கணவரின் பணியிடம் செல்ல வேலையைவிட நேரும் பெண்கள், குழந்தைப்பேறுக்கான நேரத்தைத் திட்டமிட, தீர்மானிக்க உரிமை மறுக்கப்படும் பெண்கள், குழந்தை வளர்ப்பில் இணையர் சிறிதும் பங்கெடுக்காத பெண்கள், குழந்தை வளர்ப்பை முழு நேரமாகச் செய்யாததற்கு குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கப்படும் பெண்கள், குழந்தை வளர்ப்பிற்காக எடுக்கும் விடுப்புகளுக்கு பணியிடங்களிலும் சமூகத்திலும் தண்டிக்கப்படும் பெண்கள் தங்கள் கனவுகளை எப்படிப் பின்தொடர முடியும்?

<strong>கானல்நீர்ப் பெண்டிர்</strong>

ஏற்கெனவே திருமணமாகியிருந்தும், தண்ணீர் சேகரிக்க ஆள் போதவில்லை என்பதற்காக மட்டுமே இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளும் நடைமுறை இது! சில சமயங்களில் இரண்டாவது மனைவியும் நீர் சேகரிக்கப் போதாமல் மூன்றாவதாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட ஆண்களும் இருக்கிறார்கள்.

<strong>வந்தியத்தேவன் வழித்தடத்தில் தொண்டைமானாறு</strong>

முந்நூறு வருஷத்துக்கு முன்னால் இளவரசனாகிய மானவர்மன் காஞ்சிபுரத்தில் வந்து சரண் புகுந்திருந்தான். அவனுக்கு ராஜ்ஜியத்தை மீட்டுத் தருவதற்காக மாமல்ல சக்கரவர்த்தி ஒரு பெரும்படையை அனுப்பினார். அவர் அனுப்பிய படைகள் இந்தப் பிரதேசத்தில்தான் வந்து இறங்கின. அச்சமயம் தொண்டைமான் ஆறு உள்ள இடத்தில் ஒரு சிறிய ஓடைதான் இருந்தது. கப்பல்கள் வந்து நிற்பதற்கும், படைகள் இறங்குவதற்கும் சௌகரியமாவதற்கு அந்த ஓடையை வெட்டி ஆழமாகவும் பெரிதாகவும் ஆக்கினார்கள். பிறகு அந்த ஒடை தொண்டைமானாறு என்று பெயர் பெற்றது.

<strong>காடு யாருக்குச் சொந்தம்?</strong>

கிராமப்புற ஏழை எளிய மக்கள் சூழலையெல்லாம் கண்டுகொள்ள மாட்டார்கள் என்ற உலகளாவிய பொது புத்தியையும் சிப்கோ இயக்கம் மாற்றியமைத்தது. வளங்கள் மற்றும் சூழலைப் பாதுகாப்பதற்கான மக்களின் இயக்கம் வெற்றி பெறும் என்பதற்கு சிப்கோ இயக்கம் உலகளாவிய முன்னுதாரணமாக விளங்கியது. சுற்றுச்சூழல் பிரச்னைகளைக் கையிலெடுத்துப் போராடுவது பணம் படைத்தவர்களின் பொழுதுபோக்காக இருந்த காலட்டத்தில், சூழலைப் பாதுகாப்பது ஏழைகளின் வாழ்வாதாரத்தை மீட்டுத் தரும் என்ற ஒரு புரிதலை சிப்கோ இயக்கம் ஏற்படுத்தியது. உலகளாவிய சூழல் லட்சியங்களில் சிப்கோவுக்கு இருந்த தாக்கம் அளப்பரியது.

மூடநம்பிக்கைகளும் மகப்பேறும்

‘கொடி சுற்றிப் பிறத்தல்’. தாய்க்கும் சேய்க்கும் தொடர்பைக் கொடுப்பது இந்தத் தொப்புள்கொடி. இந்தத் தொப்புள்கொடி வழியாகத்தான் கர்ப்பப்பையில் உள்ள குழந்தைக்கு ரத்த ஓட்டம் சீராகச் செல்கிறது. தாயிடம் இருந்து நல்ல ரத்தத்தை வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும், வயிற்றில் இருக்கும் குழந்தையின் கெட்ட ரத்தத்தை தாயிடமும் சென்று சேர்க்கும் ஓர் உறவுப்பாலம்தான் தொப்புள்கொடி. பனிக்குட நீரில் ஒரு நாணல் தண்டு போல் இக்கொடி வளைந்து நெளிந்து மிதக்கும். குழந்தை பிறக்கும்போது குழந்தையின் தொப்புள்கொடி குழந்தையின் கழுத்தைச் சுற்றி இருந்தால் அது குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. கழுத்தை இறுக்கும்போது அது மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை பாதிக்கிறது. சுவாசக்குழாயை இறுக்குவதால் சுவாசம் தடைபடுகிறது. இதனால் குழந்தைக்குத்தான் பிரச்னை வருமே தவிர, தாய்மாமாவுக்கு வராது.

<strong>சூழலும் பெண்களும்</strong>

ஓர் இடத்தின் சுற்றுச்சூழல் கெட்டுவிட்டால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்களாகத்தான் இருக்கிறார்கள். இன்னொருபுறம், சீரழிந்த சுற்றுச்சூழலை யார் பாதுகாக்கவேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது. சூழல் பாதுகாப்புக்காகக் குரல் கொடுக்கும் பெண்களைப் பாராட்டும் அதே நேரம், பச்சை மையில் கையெழுத்துப் போட்டு இந்த முடிவுகளை எடுக்கும் இடங்களில் அவர்களுக்கான பிரதிநிதித்துவம் இருக்கிறதா என்பதையும் கேள்வி கேட்க வேண்டும். இவற்றைத் தவிர, சாதி, வர்க்கம் போன்ற வெவ்வேறு சமூகப் படிநிலைகள் இந்தப் பிரச்னைகளுக்குள் எப்படி இயங்குகின்றன என்பதையும் கவனிக்கவேண்டும்.

வந்தியத்தேவன் வழித்தடத்தில் ஆனையிறவு

2000இல் ‘ஓயாத அலைகள் 3’ என்று பெயரிடப்பட்ட இரண்டாம் ஆனையிறவு சண்டையின் போது விடுதலைப்புலிகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மிக நீண்டதும், கடினமானதுமான சமர் அது. 35 நாட்களுக்குப் பின் ஏப்ரல் 22 ஆம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் வசமானது கோட்டை. ஆனால், இறுதி யுத்தத்தின்போது, 2009 ஜனவரி 10 ஆம் நாள் இலங்கை ராணுவம் மீண்டும் இப்படைத்தளத்தைக் கைப்பற்றியது. ஆனையிறவுக்கான ஈழப்போராட்டத்தில் ஏறத்தாழ 3000 புலிவீரர்கள் களமாடி வீரச்சாவடைந்ததாக விடுதலைப் புலிகளின் குறிப்பு கூறுகிறது. ஈழப்போராட்டத்தில் ஆனையிறவு மீட்பே மிகப்பெரிய வெற்றியாக வெளி உலகுக்குத் தோன்றியது.

பூக்கரு

“இங்க பாரு பூவு, ஒன்னு வச்சேன்னு வையி, வாய் கொட்டாவி விட்டுக்கும். எங்கம்மாவைப் பாத்தியா எப்டித் தவிச்சு நிக்குதுன்னு? அது ஆசைப்பட்டுச்சுன்னுதான் நான் உன்னை இங்க வச்சிக்க சம்மதிச்சேன். இப்ப உன்னால அதுக்கு எதுவும் ஆச்சுன்னு வையி வெளுத்துடுவேன்” என்று சட்டைக் கைகளை மடித்தான் சரவணன்.