இசக்கிமுத்து
“எனக்காகப்பா ப்ளீஸ். இன்னைக்கு ஒரு நாள் ராத்திரி இங்க தங்கிக்கயேன். பாவம் அவருக்கு மேலுக்கு முடியலங்குறதால தானே கேக்குறேன். நீ அவரைப் போய்ப் பார்க்க வேண்டாம், ஏதும் பேசிக்கக்கூட வேண்டாம். டீவி ரூம்ல கிடக்குற கட்டில்ல படுத்துக்க போதும் ஏதும் அவசரம்னா” என்று இழுத்தவளுக்குத் தெரியும். அவசரம் என்றால்கூட கண்டிப்பாக அவனை அழைக்க மாட்டார் என்று. ஆனால் அதற்காக இந்த அடைமழையில் சளி, காய்ச்சல் வந்து கிடக்கும் அவரைத் தனியாக வைத்து விட்டுப் போக அவளுக்கு மனமில்லை.
