பெண்ணியம் ஆண்களுக்கு எதிரானதல்ல...
ஓர் ஆணை சமூகம் நிர்பந்திக்கும் இன்னோர் இடம் வாகனங்கள் ஓட்டுதல். ஆணுக்கு இரு சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனம் கண்டிப்பாக ஓட்டத் தெரிய வேண்டும் என்று ஒரு பொதுபுத்தி நிலவுவதால் கற்றுக்கொள்ள விருப்பமில்லாத ஆண்களும் வாகனம் ஓட்ட கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். வாகனம் ஓட்டுதல் ஒரு வாழ்க்கைத் திறன், ஆனாலும் அது ஆண்மையோடு தொடர்புடையதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. வாகனம் வேகமாக ஓட்டுவதையும் திறமையாக ஓட்டுவதையும் ஆண்மையோடு தொடர்புபடுத்தி இருப்பதால்தான் சாலையில் வாகனம் ஓட்டி வரும் சகப் பெண் தன்னைத் தாண்டிப் போகிறபோது பல ஆண்களால் அதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அவர்களைத் துரத்திச் சென்று, அவர்களைவிட வேகமாக முந்திக்கொண்டு செல்ல வேண்டும் என்கிற அவசியம் அவர்கள் மனதில் ஏற்படுகிறது.