UNLEASH THE UNTOLD

Month: February 2023

பேரைச் சொல்லவா, அது நியாயமாகுமா?

போதும் பொண்ணு, மங்களம், பூர்ணம், போதும் மணி, வேண்டா வரம், வேண்டாமிர்தம், வேம்பு இவையெல்லாம் பெண் குழந்தைகள் போதும் என்று நினைப்பவர்கள் வைக்கும் பெயர்கள். அந்த ஊரில் இருக்கும் வரை இது சரி. வெளியூருக்கு படிக்கச் செல்லும் போது, பணிக்குச் செல்லும் போது அவர்கள் எப்படியெல்லாம் கேலிக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று இத்தகைய பெயர் வைப்பவர்கள் நினைத்துப் பார்ப்பார்களா?.

உயிரைப் பணயம் வைக்க வேண்டுமா?

முன்பு அக்கம் பக்கத்தினரும் உறவினர்களும்தாம் தங்களின் பேறுகால அனுபவத்தைக் கூறி குழப்பி அடித்து, பீதியை உருவாக்கினார்கள் என்றால், இன்று அதனை இணையம் எடுத்துக் கொண்டுள்ளது. தேவை இல்லாததை கூகுள் செய்து கண்டதையும் கற்பனை செய்துகொண்டு, சின்ன விஷயங்களுக்குப் பூதாகரமாக பயந்து, மன நலம் தொலைத்து, யூ டியூபில் அரைகுறை வைத்தியர்கள் கூறும் ஆலோசனைகளை, டிப்ஸ்களைப் பின்பற்றுகிறேன் என உடல் நலத்தைக் கெடுத்துக்கொள்கின்றனர். அவர்களுக்கு நான் கூற வருவது ஒன்றே தான், உங்கள் உடல்நிலை குறித்து கூகுளிலில் விடை தேட முயற்சிக்காதீர்கள். நல்ல கைனாகாலஜிஸ்டிடம் சரணடைந்து விடுங்கள். அவர்கள் சொல்வதை முழுமையாகப் பின்பற்றுங்கள்.

கற்றுக் கொடுக்கும் செயலிகள்

மனித மூளை அபார ஆற்றல் உடையது. மூளையின் பத்து சதவீதத்தைதான் நாம் பயன்படுத்துகிறோம் என்றொரு கருத்தும் உண்டு. நினைவுத்திறன், கணிதம், மொழி என தினமும் கொஞ்சம் பயிற்சி கொடுத்தால் இன்னும் கூர்மையாக வேலை செய்யும் என்கிறார்கள் சிலர். உடற்பயிற்சி போல மூளைக்கும் பயிற்சி கொடுக்கலாம்.

இனிமே நான் உனக்கு வேண்டாமா, நிலா?

வருண் மௌனமாக அவள் விட்டெறிந்த பிரஷ்ஷை எடுத்து அதிலிருந்த முடிக்கற்றைகளைக் குப்பைத் தொட்டியில் போட்டான்.

“இல்ல, வர வர என்னை நீ ரொம்ப இக்னோர் பண்ற மாதிரி இருக்கு.”

“ஆரம்பிச்சிட்டியா? எனக்கு இன்னிக்கு நிறைய வேலை இருக்கு. டார்ச்சர் பண்ணாதே” என்று அவசரமாகக் கிளம்பத் தொடங்கினாள். சிரித்துக்கொண்டிருந்த முகத்தில் லேசான எரிச்சல்.

வருணுக்கு அழுகை வந்தது. தன் உணர்வுகளை மதிக்கவே மாட்டேன் என்கிறாளே. இவளுக்காகப் பார்த்துப் பார்த்து எல்லாம் செய்தும் அலட்சியப்படுத்துகிறாளே.

சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் பைபிள்

தடை செய்யப்பட்டாலும் அப்போதைய பயன்பாட்டின் நச்சு எதிரொலி இன்று வரை தொடர்கிறது என்பதையே ஆய்வுகள் தெரிவிக்கின்றன. டிடிடி பயன்பாடு அதிகமாக இருந்த நாற்பதுகளில் குழந்தைகளாக இருந்தவர்களிடம் ஆரம்பித்த பாதிப்பு, அவர்களது மூன்றாம் தலைமுறை வரை தொடர்கிறதாம். “நான் குறிப்பாகப் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பைத் தெரிந்துகொள்ள விரும்பினேன். 40களில் குழந்தைகளாக இருந்தவர்களின் மூன்றாம் தலைமுறை, அதாவது அந்தப் பாட்டிகளின் பேத்திகளை ஆராய்ந்து வருகிறேன். இவர்களுக்கு மார்பகப் புற்றுநோய், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், நாளமில்லா சுரப்பிகளின் பாதிப்பு ஆகியவை அதிகமாக இருக்கின்றன” என்று கூறுகிறார் ஆராய்ச்சியாளர் பார்பரா கோன்.

குடும்பங்கள் கொண்டாடும் படம்?

டிரைவர் ஜமுனா, ராங்கி, செம்பி போன்ற படங்கள் மாஸ் ஹீரோக்களின் படத்தை ஒப்பிடுகையில் நல்ல கதை அம்சத்தைக் கொண்ட படங்களே. இன்னும் பொதுச்சமூகம் ஏன் கதாநாயக பிம்பத்தையே கொண்டாடிக் கொண்டிருக்கிறது. பெண்ணுக்குப் பிரச்னைனாலும் அங்கு மீட்பராக கதாநாயகனைத்தான் தேடுகிறது. பெண்ணே அவளுக்கான நீதியைக் கேட்கும்போது ஆண் மனம் அதை ஏற்கத் துணிவதில்லை.

தேமாக்காதல்

பத்து நாள்களாகவும் வேம்பின் தலையணையும் விஜியின் தலையணையும் ஒன்றாக ஆகியிருந்தது. இரவில் மொட்டை மாடியில் படுத்தபடியே நட்சத்திரங்களை இணைத்து வேண்டுமானதை வரைந்துகொண்டார்கள் இருவரும். தனது இருபத்தி நான்கு வருடக் கதையையும் வேம்பிடம் சொல்லியிருந்தாள் விஜி.

ஜாலி டூர் போவானா சிபி?

வெள்ளிக்கிழமை மாலை ட்ரெயின். ஒரு வாரமாகப் புறப்படத் தயாராகிக்கொண்டிருக்கிறான் சிபி. தான் வீட்டில் இல்லாத நான்கு நாளைக்கும் ஆதிக்குத் தேவையான உடைகளை அயர்ன் பண்ணி வைத்தாயிற்று. குழந்தைக்கான ஸ்னாக்ஸ் என்ன கொடுக்க வேண்டும், லஞ்ச் என்ன கொடுக்க வேண்டும் என்று எழுதி ஃப்ரிஜ்ஜின் மீது ஓட்டி வைத்தான். என்னென்ன பொருள் எங்கெங்கு இருக்கிறது என்பது உட்பட. தோசை மாவு, அடை மாவு அரைத்து வைத்து சேஷாத்ரியின் உதவியுடன் வீடு முழுவதும் பளிங்கு போல் துப்புரவு செய்து, அழுக்குத் துணிகளை எல்லாம் துவைத்து மடித்து வைத்து, மாமா அத்தைக்குத் தேவையான மாத்திரைகள் எல்லாம் இருக்கிறதா என்று சரிபார்த்து இல்லாததை வாங்கி வைத்து, அப்பப்பா…

<strong>கருப்பைக்குள் படியும் நச்சுப்புகை</strong>

காற்று மாசுபாடுகளிலேயே மிகவும் கவலையளிக்கும் ஒரு வகைமை என்பது உட்புறக் காற்று மாசு (Indoor Air Pollution). அதாவது ஒரு வீட்டுக்குள்ளோ கட்டிடத்துக்குள்ளோ இருக்கும் காற்று மாசு இது. காற்று மாசு என்றதுமே நமக்கு வானுயர தொழிற்சாலைக் கட்டிடங்களில் இருந்து வெளியாகும் புகைதான் நினைவுக்கு வரும். ஆனால், இந்தியா போன்ற வளரும் நாடுகளைப் பொறுத்தவரை, வெளிப்புறக் காற்று மாசுக்கு ஈடான பாதிப்பு வீட்டுக்குள்ளும் இருக்கிறது என்கின்றன ஆய்வுகள்.

<strong>திருமணமும் தாய்மையும்</strong>

ஓர் ஆண்/பெண் திருமணத்துக்குப் பெற்றோர் மட்டும்தான் காரணமா? இல்லை. நாகரிகமான சமூகம் என்று பீற்றிக்கொள்ளும் நம் சமூகத்தின் மறைமுக அழுத்தமும் காரணம். குறிப்பிடதக்க வயதில் வீட்டில் பெண் அல்லது ஆண் இருந்தாலே, ‘என்ன இன்னும் உங்க பிள்ளைக்குத் திருமணம் செய்யவில்லையா?’ எனப் பலர் முன்னிலையில் கூச்சமே இல்லாமல் அந்தப் பெற்றோரையும் பிள்ளைகளையும் கேட்டு சங்கடப்படுத்துவார்கள். இது அநாகரிகம் என்ற சுரணை இன்றுவரை நமது பொது சமூகத்துக்கு இல்லை.