UNLEASH THE UNTOLD

Tag: women isssues

The Girlfriend

பெண் உணர்வுகள் பிரச்னைகள் சார்ந்து பல மொழிகளிலும் திரைப்படங்கள், வலைத்தொடர்கள் வந்துகொண்டு இருக்கின்றன. அவற்றில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய படம் ’கேர்ள் பிரண்ட்.’ காரணம், இதில் இருக்கும் யதார்த்தம். அம்மாவும் உடன் பிறந்தவர்களும் இல்லாத, அப்பாவிடம்…

எல்லாம் தெரிந்தவர்களா ஆண்கள்?

“ஆண்கள் இப்போதெல்லாம் மாறிவிட்டார்கள். முன்புபோல் இல்லை. அவ்வளவு விட்டுக்கொடுத்துப் போகிறார்கள். எதையுமே பெரிதுபடுத்துவதில்லை. வீட்டில் ஏற்படுகிற பல பிரச்னைகளுக்குப் பெண்களே காரணம்.” இவைதானே சமூகத்தின் குரல். இந்தக் குரலின் உண்மைத்தன்மையைப் பரிசோதித்துப் பார்க்கலாம். நம்…

குழந்தையுடன் ஓர் உலா

முகத்தில் அத்தனை சுவாரசிய சிரிப்பு. அவள் பார்த்து வியப்பதைக் கண்டு நானும் வியந்தேன். பூங்கா ஒன்றிற்கு நண்பர்களின் குடும்பத்துடன் நானும் என் கணவரும் எங்கள் ஒரு வயது மகளுடன் சென்றோம். மாற்று உடைகள், டயபர்,…

அம்மாவின் பொறுப்பு

“நீயேன் இதெல்லாம் பண்ற… எழுந்திரி குழந்தையோட ஆயை நீ எதுக்குத் தொடைக்கிற.. விடு நாங்க பண்ணிட்றோம்.” எட்டு மாதக் குழந்தை தரையில் மலம் கழித்துவிட, அதைச் சுத்தம் செய்யச் சென்ற என் கணவரை என்…

பெண்களும் பணியிடப் பாதுகாப்பும்

வனங்களுக்கு அருகில் இருக்கும் நிலப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அடிக்கடி வனவிலங்குகளால் தொல்லை எழுவது தினசரி நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. அந்த மக்கள் விலங்குகளிடம் இருந்து காப்பாற்றக் கோரி அரசாங்கத்திடம் கோரிக்கை வைப்பதும், அரசாங்கம் அதற்குத் தக்க…

பெண்களும் சமூகக் கட்டமைப்புகளும்

பெண்கள் எவ்வாறு சமூகமயமாக்கப் படுத்தப்படுகிறார்கள் என்பதை அறிந்துகொள்ள, அவர்கள் தங்களை எப்படிப் பார்க்கிறார்கள் அல்லது சமூகம் அவர்களை எப்படிப் பார்க்கிறது என்பதைப் புரிந்தகொள்வது அவசியமாகிறது. டைரக்டர் சசி இயக்கத்தில் வெளியான ’பூ’ திரைப்படத்தில் ஒரு…

இயல்பாகிப் போயிருக்கும் ஆணாதிக்கச் சிந்தனைகள்…

பெண்ணை அடிமைப்படுத்திய பின்னர் ஆண் தனது ஆதிக்கத்தை இதில்தான் என்றில்லாமல் எல்லா விஷயங்களிலும் ஏற்றி வைத்திருக்கிறான். மரபணுவிலேயே இத்தகைய சிந்தனைகள் ஊறிப் போய்விட்டன. முன்னேர் செல்வதையொட்டியே பின்னேர் செல்வது போல முன்னோர்கள் செய்த விஷயங்களையே…

10. பருவமெய்தல்

பேதை (1-8 வயது), பெதும்பை (9-10 வயது), மங்கை (11-14 வயது), மடந்தை (15-18 வயது),  அரிவை (19-24 வயது), தெரிவை (25-29 வயது), பேரிளம் பெண் (30 வயதுக்கு மேல்) எனத் தமிழ்…

காதலின் வெற்றி எது?

“நீ கேக்குறதெல்லாம் சரிதான், ஆனா ஒண்ணு புரிஞ்சிக்க, எங்க காலத்திலேயும் நாங்க வேலைக்குப் போனோம். ஆனா  வேலை நேரம் உங்களைப் போல இல்லை. இன்னொரு விஷயம் அப்போ எங்க வருமானம் வீட்டுக்குத் தேவை. அதனால புருஷன்களும் ஏதோ ஒரு சமையல் பண்ணாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டாங்க, அதுக்கு மேல வகை வகையா செய்யவும் எங்களுக்கு வசதி இல்லை. புருஷன்களும் எங்களுக்குக் கொஞ்சம் உதவின்னு செஞ்சாங்க. இப்போ எல்லாருக்கும் சம்பளம் நல்லா வர்றதால குடும்பத்துக்கு உங்க வருமானம் எக்ஸ்ட்ரா தான். அதனால் உன்னைப் புரிஞ்சிக்கவோ உனக்கு உதவி செய்யவோ அவசியம் பிரபுவுக்கு இல்லை. இப்போ நிறைய பசங்க பொண்டாட்டி கஷ்டம் புரிஞ்சிக்கிறாங்க. பொறுப்பைப் பகிர்ந்துக்குறாங்க. ஆனா இதெல்லாம் வளர்ப்புல வர விஷயம். பிரபு வீட்டு ஆளுங்க கொஞ்சம் பழைய டைப், அதனால் இதைப் புரிஞ்சிக்கிற பக்குவம் அவருக்கு இல்லை. ஆனா சந்தேகமே இல்லாத உன் மேல ரொம்ப அன்பு இருக்கு. நீ அதைப் பிடிச்சுக்கிட்டு பிரபுவுக்குப் புரிய வை.“