UNLEASH THE UNTOLD

Tag: history

பூகோள எல்லைகளைத் தகர்த்த ஈழமும் தமிழகமும்

சமூகத்தைப் பிரதிபலிக்கக்கூடிய சினிமாவால் இரு நாடுகளுக்கிடையேயான இணக்கம் இன்னும் அதிகமானது. இலங்கை, தமிழ் சினிமாவுக்குத் தந்த ஒவ்வொருவரும் மாணிக்கப் பரல்கள்தாம். இலங்கையின் நாவல்பட்டியில் பிறந்து வளர்ந்த எம்ஜிஆரின் கையில் தன்னையே கொடுத்து மகிழ்ந்தது தமிழகம். (அதே நேரம், ஈழப்போருக்கு எம்ஜிஆர் அளித்த நிபந்தனையற்ற ஆதரவு உலகமே அறிந்தது). மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற கிராமத்தின் பாலுமகேந்திரா தென்னிந்திய திரைப்பட உலகின் தவிர்க்க முடியாத ஆளுமையானார். யாழ்ப்பாணம் அருகே நெல்லிப்பழையைச் சேர்ந்த சுஜாதாவின் திறமையைத் தமிழ், மலையாள சினிமாக்கள் பயன்படுத்திக்கொண்டன. கொழும்பில் பிறந்த ராதிகா தான் இன்றைக்குச் சின்னத்திரையின் ராணி. ஜே.ஜே திரைப்படத்தின் மூலம் அறிமுகமான பூஜா உமாசங்கரும் சிங்களத்துப் பைங்கிளிதான். மன்னாரில் பிறந்த கேத்தீஸ்வரன் தமிழ் சினிமாவின் போண்டாமணியாக உருவெடுத்தார். ஏன், சமீபத்திய லாஸ்லியாவும் தர்ஷனும்கூட பிக்பாஸ் வழியாகக் கிடைத்த இலங்கை வரவுகள்தாம்.

டிஜிட்டல் இந்தியாவின் கழிப்பறைகள்

உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான திறந்த வெளியில் மலம் கழிக்கும் மக்கள் (சுமார் 62 கோடி பேர்) இந்தியாவில் இருப்பதாக, குறிப்பாக இந்தியக் கிராமங்களில் இருப்பதாக யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் நடத்திய கணக்கெடுப்பின் அடிப்படையில், நவம்பர் 2019இல் வெளியான தேசியப் புள்ளிவிவர அறிக்கை கிராமப்புறங்களில் 29.7 % குடும்பங்கள் கழிப்பறை வசதியின்றி இருப்பதாகக் கூறுகிறது.

ஆசியாவின் முதல் வானொலிச் சேவை!

பொங்கும் பூம்புனல், நேயர் விருப்பம், நீங்கள் கேட்டவை, புது வெள்ளம், மலர்ந்தும் மலராதவை, இசைத் தேர்தல், பாட்டுக்குப் பாட்டு, இசையும் கதையும், இன்றைய நேயர், விவசாய நேயர் விருப்பம், இரவின் மடியில் எனத் தூயத் தமிழில் புதுமையான நிகழ்ச்சிகளைத் தொகுத்து அளித்ததன் மூலம், அறிவிப்பாளர்கள் தங்களது தேமதுரக் குரலால், தமிழ் ரசிகர்களை இலங்கை வானொலிக்காகத் தவம் கிடக்கச் செய்தனர்.

உலகின் மிகச் சிறந்த தீவு!

செல்வத்தின் கடவுளான குபேரனுக்காக, விசுவகர்மா என்ற தேவ சிற்பியால் உருவாக்கப்பட்ட லங்கா என்ற ராச்சியம்’ என்று குறிப்பிடுகிறது ராமாயணம். “கற்பில் சிறந்தவள் சீதையா, மண்டோதரியா” போன்ற, இந்தியா வல்லரசாவதற்குத் தேவையான அதி முக்கியப் பட்டிமன்றங்கள் நிகழக் காரணமாக இருந்த, ராமாயணக் (கட்டுக்)கதைகளைத் தவிர்த்துப் பார்த்தாலும்கூட, இலங்கையும் தமிழகமும் இலக்கியத்தால், வரலாற்றால் பின்னிப் பிணைந்திருந்ததற்கான ஆதாரங்களைக் காலந்தோறும் பார்க்க முடிகிறது.

பெண் என்னும் அபாயம்

குதிரையின் வாயை ஏன் பூட்டிவைத்திக்கிறாய் என்று எப்படி ஒருவரைப் பார்த்து உரிமையுடன் கேட்க முடியாதோ அவ்வாறே ஏன் உன் மனைவியை பிரிடிலுக்குள் சிறைபடுத்தியிருக்கிறாய் என்றும் ஓர் ஆணைக் கேட்க முடியாது.

தி கிரேட் கேம் – 18

பின்லேடனின் மரணத்தை அறிவித்த அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, “அல்-காய்தாவின் பயங்கரவாதத்தால் அன்பானவர்களை இழந்த குடும்பங்களுக்கு நீதி வழங்கப்பட்டது” என்று கூறினார்.

தி கிரேட் கேம் 17

ஆப்கானிஸ்தான் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதற்கும் அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ பிரச்சாரத்தை இலக்காக மாற்றினர்.

தி கிரேட் கேம் – 16

கம்யூனிஸ்ட் செல்வாக்கை உலகம் முழுவதும் அச்சுறுத்தலாகக் கருதிய அமெரிக்கா, இப்பிராந்தியத்தில் தங்கள் நலன்களைப் பாதுகாப்பதற்காக மிக முக்கியமான நட்பு நாடுகளில் ஒன்றாகப் பாகிஸ்தானை உருவாக்கியது. .

தி கிரேட் கேம் – 15

அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தபோது, முஜாஹிதீன் பிரிவுகள் மீண்டும் ஒருவருக்கொருவர் சண்டையிடத் தொடங்கின. ஆப்கானிஸ்தானில் அமைதி ஒருபோதும் வராது என்கிறளவு உள்நாட்டுப் போரின் தீவிரம் அதிகரித்தது.

தி கிரேட் கேம் – 14

ஹிக்மத்யார் இத்தகைய தாக்குதல்களுக்கு காரணமான ஒரே தலைவர் அல்ல. காபூலில் உள்ள ஒவ்வொரு முக்கிய ஆயுதப் பிரிவினரும் இந்தக் காலகட்டத்தில் காபூலில் நடந்த போர்களில் பயன்படுத்திய ஆயுதங்களைக் கொண்டிருந்தனர்.