UNLEASH THE UNTOLD

படைப்பாளர்கள்

பொருளாதாரச் சுதந்திரமும் பெண்விடுதலையும்

திருமணத்திற்குப் பிறகு எத்தனை பெண்களால் தன் பெற்றோர்களுக்குப் பிறந்த வீட்டிற்குப் பொருளாதார உதவியைத் தொடர்ந்து செய்துவிட முடிகிறது? பாலின சமத்துவத்தில் மிக முக்கியமானது பெண்களின் பொருளாதாரச் சுதந்திரமே.

இந்தியாவைப் பொருத்தவரை 24 சதவீதப் பெண்கள் மட்டுமே ஊதியம் பெறும் பணிகளில் இருக்கிறார்கள் என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. நுட்பமாகச் சிந்தித்தால் பல பெண்களும் பணிபுரிகிறார்கள். ஆனால், சிலருக்கு மட்டுமே முறையான ஊதியம் வழங்கப்படுகிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள இயலும்.

வள்ளியக்காவின் காதல்

இந்த வயதில் காதல் வர காரணங்கள் ஆயிரம் இருப்பினும் தனக்குப் பிடித்த நபர்கள் காதலிப்பதைப் பார்த்து தானும் காதலித்தாக வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுவதுதான் ஆகச் சிறந்த வேதனை. தேவையா, அவசியமா இவற்றையெல்லாம் தாண்டி ஒரு காதல் நிச்சயமாக வேண்டியிருக்கிறது.

உலகின் மிகச் சிறந்த தீவு!

செல்வத்தின் கடவுளான குபேரனுக்காக, விசுவகர்மா என்ற தேவ சிற்பியால் உருவாக்கப்பட்ட லங்கா என்ற ராச்சியம்’ என்று குறிப்பிடுகிறது ராமாயணம். “கற்பில் சிறந்தவள் சீதையா, மண்டோதரியா” போன்ற, இந்தியா வல்லரசாவதற்குத் தேவையான அதி முக்கியப் பட்டிமன்றங்கள் நிகழக் காரணமாக இருந்த, ராமாயணக் (கட்டுக்)கதைகளைத் தவிர்த்துப் பார்த்தாலும்கூட, இலங்கையும் தமிழகமும் இலக்கியத்தால், வரலாற்றால் பின்னிப் பிணைந்திருந்ததற்கான ஆதாரங்களைக் காலந்தோறும் பார்க்க முடிகிறது.

கண்ணீருக்கு விடைகொடுப்போம் கண்மணிகளே!

அன்றாட  வாழ்க்கையில் பிரச்னைகளையும் வலிகளையும் எதிர்கொள்ளும் சூழல் பெண்களுக்கே அதிகம். இந்தச் சூழலை நமது சமூகம் பெண்கள் குழந்தைகளாக வளரும் போதிருந்தே இயல்பாகவே அறிமுகப்படுத்துவதோடு, அதை நியாயப்படுத்தவும் செய்கிறது. 

இடப்பெயர்கள்: மனித நினைவுகளின் எச்சங்கள்

மனிதன் நடந்த இடத்திற்கெல்லாம் இடப்பெயர்களும் நகர்ந்தன. அதாவது, மனிதர்கள் இடம் பெயர்ந்தபோது, அவர்கள் தங்கள் இடப் பெயர்களை எடுத்துச் சென்றனர் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அரசுப் பள்ளிகள் வெற்றிநடை போடுமா?

“அரசுப் பள்ளிகளை நவீனப்படுத்தவும், அவற்றின் தரத்தை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளமல்ல, அவற்றைப் பெருமையின் அடையாளமாக மாற்றுவோம்”

உடை அனைவருக்கும் பொதுவாகட்டும்!

ஓ, இதுதான் பிரச்னையா? உடை என்பதில் ஏன் இப்படி உயர்வு, தாழ்வு வந்துச்சுன்னு பேசுவோம். ஆதிமனிதர்கள் உடை போட்டிருந்தாங்களா? இன்னும் சில பழங்குடி மக்கள் முதன்மை வாழ்க்கை முறையில் உடை இல்லாம இருக்காங்க. ஆதிமனிதர்கள் தொடக்கத்தில் உடை போடாமத்தான் இருந்தாங்க. நாமதான் குரங்குல இருந்து பல கோடி வருசமா பரிணாமம் அடைஞ்சு மனிதனா வளர்ந்திருக்கோம்னு அறிவியல் அறிஞர் டார்வின் சொன்னார்ல்லயா…” எனத் தொக்கி நின்றது வாக்கியத்தோடு நிறுத்தினார் ஆஷா.

மண்ணும் பெண்ணும்

வரலாற்றுப் பெருமைமிக்க, பௌதீக வசீகரமிக்க, பன்முகக் கலாச்சாரம் கொண்ட ஓர் அழகிய மாங்கனி வடிவ தேசத்தை போர், தீவிரவாதம், இனக்கலவரம் எனப் பிரச்னை கொண்ட கண்ணீர்த்துளி தேசமாக மட்டுமே உலகின் கண்களுக்குக் காட்டிக்கொண்டிருக்கும் சமீபக்கால பதிவுகளிலிருந்து மாறுபட்ட, இலங்கையின் சிறப்புகள், தொன்மைகள், வாழ்வியல் முறை குறிப்பாகப் பெண்கள் குறித்து நானறிந்த, நான் உணர்ந்த சில துளிகளைப் பதிவுசெய்ய விரும்புகிறேன்.

இளம்வயதினரிடம் என்ன கேட்கலாம்?

குழந்தைகளாக இருந்தால், “என்ன பாடம் பிடிக்கும்?”, “உன் நண்பர்கள் யார்?”, “என்ன விளையாடப் பிடிக்கும்?” என்று பிரச்னை இல்லாமல் எதையோ கேட்கலாம். வளர்ந்தவர்களிடம் என்ன பேசுவது?

உயிர், அதிகாரம்: நிலத்தின் இரு முகங்கள் 

ஒரு சமுதாயத்தில், நிலத்தை அதிகாரமாக கருதுபவர்கள் அந்த சமுதாயத்தின் ஆதிக்க சக்திகளாகவும் நிலத்தை உயிராக கருதுபவர்கள் அந்த   சமுதாயத்தின் ஒடுக்கப்பட்ட மக்களாகவும் இருக்கிறார்கள்