UNLEASH THE UNTOLD

Top Featured

இடைவெளிகள்

மரபணு பற்றிய விழிப்புணர்வு இல்லாததுதான் சொந்தத்திற்குள் திருமணம் செய்துகொள்வது போன்ற நிகழ்வுகளுக்குக் காரணம். காலம் காலமாக நம் குடும்பங்களில் பின்பற்றப்பட்ட வழக்கத்தைத் தவறென்று சொல்வதா என்கிற கேள்வி இன்றும் பலரிடம் விவாதத்திற்குரியதாக இருக்கிறது. இது தவறா, சரியா என்பதைப் பற்றி விவாதிப்பதைத் தாண்டி இதனால் ஏற்படக்கூடிய விளைவுகளைப் பற்றி யோசிப்பதுதான் சாமர்த்தியம்.

முடிவில்லா விளையாட்டு...

துன்பம் வரும் போது இதை நினைவுகூர்ந்தால் வாழ்வு இந்தத் துன்பத்தோடு முடியப் போவதில்லை என்பது மனதிற்குப் புரியும். இந்த நிகழ்வு தந்த அனுபவத்தை மனதில் இருத்தி, அடுத்து வரும் இன்பத்தை எதிர்கொள்ள மனம் தயாராகும்.

எப்படி இருந்தாலும் குத்தமா?

பெண்களின் முன்னேற்றத்தின் மீது அதீத அக்கறை கொண்ட சமூகம், பெண்கள் வேலைக்குச் சென்றால் மட்டும் சும்மாவா விடப் போகிறார்கள்? கணவன், குழந்தையைவிட அவளுக்குக் காசுதான் முக்கியம் என்று அடுத்த அம்பைப் பாய்ச்ச தயாராகவல்லவா இருக்கிறார்கள்.

அலுவல் பணிச் சுமையின் காரணமாக, மாதத்தில் என்றாவது ஒரு நாள் ஹோட்டலில் வாங்கிச் சாப்பிடும் விஷயம் மட்டும் வெளியே தெரிந்துவிட்டால் போதும், ஒரு நாள்கூட வீட்டில் அந்தப் பெண் சமைக்கிற பழக்கமே கிடையாது என்று அடுத்த கதை கட்டத் தொடங்கிவிடுவாார்கள்.

ஓர் அறிவியலாளரை வரையுங்கள் பார்க்கலாம்!

“உங்களுக்குத் தெரிந்த பத்து விஞ்ஞானிகளைச் சொல்லுங்கள்” என்று நாம் பொதுவெளியில் கேட்டால், அந்தப் பத்துப் பேரில் எத்தனை பெண் விஞ்ஞானிகள் இருப்பார்கள்? இந்தக் கேள்வியைக் கொஞ்சம் மாற்றி, “உங்களுக்குத் தெரிந்த பத்துப் பெண் விஞ்ஞானிகளைச் சொல்லுங்கள்” என்று சொன்னால் எத்தனை பேரால் பத்துத் தனி பெயர்களைச் சொல்லமுடியும்? மேரி க்யூரியைத் தவிர, அவரது மகள் ஐரீன் க்யூரிக்கு அப்பால் ஏன் நமக்குப் பெண் விஞ்ஞானிகளைப் பற்றி அதிகம் தெரிவதில்லை?

மந்திரி குமாரி

திருடும் பார்த்திபன் வில்லில் இருந்து புறப்படும் அம்பு எத்தனையோ உயிர்களைக் குடிக்கிறது. வில்வித்தை என்கிற பெயரால், கொலை அங்கே கலையாகிறது. ஓவியக் கலைஞன் பெண்ணின் அங்கங்களை வரைந்து காட்டுகிறான். காமம் அங்கே கலையாகிறது. அதுபோல கொள்ளை அடிப்பதும் ஒரு கலைதான்!” என்கிறான்.

பொம்மி திம்மி வம்பி

மறுநாள் வம்பி அவரிடம் வந்தாள். “எசமானியம்மா, பூங்குளம் ஊரில் பயிர் விதைகள் மிகக் குறைந்த விலைக்குக் கிடைப்பதாக ஊரில் சொல்கிறார்கள். பலரும் அங்கு வண்டி கட்டிக் கொண்டு செல்கிறார்கள். நாம் சீக்கிரமே போனால் நல்ல பேரம் கிடைக்கும். வாருங்கள்“ என்று அழைத்தாள்.

பண்ணையாரும் பேராசைப்பட்டு அவளுடன் போகச் சம்மதித்தார். வம்பி தானே வண்டியை ஓட்டுவதாகச் சொல்லித் தாறுமாறாக மாடுகளை விரட்டினாள். வண்டி காடுமேடுகளில் இஷ்டத்துக்கும் ஓடிற்று. பண்ணையாருக்குக் குண்டு உடல். மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, “அடியே மெதுவாடி, மெதுவாடி” என்று கெஞ்சிக் கொண்டு குலை நடுங்க அமர்ந்திருந்தார்.

இலக்கணம் மாறுதே... 6

எதிரே தெரிந்த கண்ணாடியில் அவளைப் பார்க்க அவளுக்கே பிடிக்கவில்லை. தர்மசங்கடமாக இருந்தது. வாரப்படாத தலைமுடி. சாயம் போன ஒரு நைட்டி. அதுவும் பின்னால் கிழிந்து தொங்கியது. பார்க்கவே அவளுக்கு வெறுப்பாக இருந்தது. அவளுக்கே அவளைப் பார்க்க பிடிக்கவில்லை. கையில் குழந்தையையும் தலை சாயக்கூட இடமற்று நிற்கும் தன்னையும் பார்க்க அழுகை முட்டிக் கொண்டு வந்தது.

உணவுப் பொருள்களின் உருமாற்றம்!

தாவரங்களின் வளர்ச்சிக்குப் பயன்படும் வளங்களை அப்படியே உணவு உற்பத்திக்குத் திசை திருப்பியதுதான் அதிக விளைச்சலுக்கான காரணம். தாவரங்களில் சிலவற்றிக்கு இயற்கையாகவே சில குணங்கள் உண்டு. உதாரணமாக நெல் சாகுபடியில் அதிக உயரம் வளராத, ஆனால் அதிக விளைச்சலைத் தருகின்ற ஒரு ரகம் உண்டு என்றால் அந்த ஒரே ஒரு வகை நெல்லை மட்டும் தொடர்ந்து சாகுபடி செய்வது, அந்த நெல்லின் மரபணுவைப் பரிசோதனை செய்து, அதை எடுத்து பிற நெல் வகைகளில் இணைத்து, பிற நெல் வகைகளையும் இந்த ஒரு குறிப்பிட்ட நெல் வகையைப் போல் மாற்றுவது போன்றவற்றால்தாம் உற்பத்தி அதிகரித்தது. இந்த முறையைக் கண்டுபிடிப்பதற்காகப் பல ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்தனர். உணவு முறையில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தியது இந்தப் பசுமை புரட்சி தான்.

ஒவ்வொரு பள்ளியிலும் இருக்க வேண்டிய புத்தகம்!

பெண்கள் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதில் இருக்கும் பிரச்னைகளையும் மனச்சிக்கல்களையும் அலசி உள்ளார் ஆசிரியர். சிறுநீரை அடக்குவதில் உள்ள சிக்கல்கள் தெரிந்தும் இயற்கைக்கு மாறாக இருப்பினும் அதை இயல்பாக கடந்து வந்தவர்களை என்னவென்று கூறுவது! இந்த மாதிரி நெருக்கடிகளை ஏற்றுக்கொள்வதற்குப் பெண்களை இந்தச் சமூகம் நன்றாகப் பயிற்றுவிக்கிறது. இனி வரும் தலைமுறைகள் இத்தகைய சூழ்நிலைகளை விழிப்புணர்வோடு மனச்சிக்கல்களையும் களைந்து சமுதாய மாற்றங்களுக்கு அடிக்கோலிட வேண்டும்.          நாங்கள் பள்ளியில் பயிலும் பொழுது a sound mind in a sound body என்று ஏட்டில் சொல்லிக் கொடுத்தார்களே ஒழிய பண்பாடு என்கிற போர்வையால் பெண்கள் விளையாடாமல் வீட்டில் அடங்கி இருக்கப் பழக்கி விட்டார்கள்.

குழந்தைகளை பள்ளி சுற்றுலாவுக்கு அனுப்புங்கள்!

அன்று பள்ளி முடித்து வந்தும், அடுத்த வாரம் ஒருநாள் வெளியே கூட்டிட்டுப் போகிறார்கள் என்று அப்பாவிடம் சொன்னேன். பெரும்பாலான நாட்கள் பள்ளி முடிந்து வரும் போது அப்பாதான் வீட்டில் இருந்து சிற்றுண்டி, பால் தயார் செய்து தருவார். அப்படி இல்லை என்றால் பக்கத்து வீட்டில் சாவி இருக்கும். நானும் அக்காவும் அங்கே இருப்போம். அப்பா, அம்மா வந்ததும் பேசிட்டுச் சொல்றேன் என்றார். இருவரும் போகலாம் என்று அனுமதி கொடுத்ததும் மறுநாள் பள்ளியில் என் பெயர் கொடுத்து விட்டேன்.