UNLEASH THE UNTOLD

Top Featured

அம்மாவின் சேட்டைகள்

பஜாஜ் எம்80 பைக்கை ஓட்டிக்கொட்டு இருக்கும்போது பிருந்தாவுக்கு முன்னாடி போய்க்கொண்டு இருந்த பஸ் திடீரென நின்றது. பிருந்தா தோழரால் பிரேக் அடிக்க முடியவில்லை. வண்டி இன்னும் ஸ்மூத்தாக போய்க் கொண்டிருந்தது. என்னவென்று பார்த்தால், அவர் கியரைப் பிடித்துக் கொண்டு இருந்ததால், அவரால் பிரேக் பிடிக்க முடியவில்லை. அப்பொழுது அங்கு நின்று கொண்டிருந்த சில ஆட்டோக்காரர்கள் ‘கால்ல பிரேக்கைப் பிடி’ என்று கத்த, தோழர் பிரேக்கைப் போட, ஆட்டோக்காரர்கள் பைக்கைப் பிடிக்க – சரியாக இருந்தது.

சௌந்தரா

” நீ அன்னிக்கி தாத்தாவ பாக்க வந்தன ..அப்ப ஒன்னப் பாத்தாராம்…அப்பிடியே அவரு மவன உரிச்சு வெச்ச மாறி இருக்குறியாம்….ஹஹா ஹ..வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்தாள்.புளுவு…புளுவு…மண்ட கொண்ட புளுவு… ராஜேந்திரன் மவளா நீ…சௌந்தரத்த அச்சுல எடுத்தவன்னுதான ஆத்தா சொல்லும்…ஆத்தாவ விடு, நம்ம தெருக்காரவுங்க யார வேணும்னாலும் கேக்கட்டுமே….” சரி…இதில் சிரிக்க என்ன இருக்கிறது என்று ஆனந்திக்குப் புரியவில்லை. என்னவோ போகட்டும் என்று சௌந்தரத்தின் மேல் காலைப் போட்டபடி உறங்கிப் போனாள். ஆனால், தன் உரிமை கோரலை அவள் அங்கீகரித்து முத்திரை குத்திவிட்டதுபோன்ற நிறைவில் சௌந்தரத்துக்கும் நல்ல உறக்கம் வந்தது.

இயற்கை எனும் சொர்க்கம்

மழை பிடித்தது. நிலா பிடித்தது. “நிலாச்சோறு மாற்றுதல்” என்று ஒரு விளையாட்டு 15 நாட்களுக்கு நடக்கும். வாசலில் முக்காலியில் சாணத்தால் செய்த பிள்ளையார் வைத்து, அன்று மாலை வீட்டில் சமைத்த உணவை எச்சில் படாமல் அவரவர் வீட்டில் இருந்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வந்து அந்த முக்காலியைச் சுற்றிலும் வைத்துக் கும்மிப் பாடல் பாடி விளையாடுவார்கள். கும்மி முடிந்து நிலவொளியில் நிலவுக்குப் படைத்த உணவைப் பகிர்ந்து உண்ணுவார்கள். அது முடிந்து தூக்கம் வரும் வரை விளையாட்டுகள் தொடரும். 15ஆவது நாள் மாவிடித்து உலக்கை வைத்து அந்த நிலாச்சோறு மாற்றும் வைபவம் முடியும்.

கடவுள் படைத்த முதல் பெண் ஏவாள் அல்ல, லிலித்!

கடவுள் படைத்த முதல் ஆண், ஆதாம். முதல் பெண்? ஏவாள் அல்ல, லிலித். தரையில் கிடந்த தூசிகளைச் சேகரித்து ஆதாம், லிலித் இருவரையும் உருவாக்கிய கடவுள் அவர்களுக்கு சுவாசத்தை வழங்கி உயிர் வாழச் செய்தார். இருவரையும் ஒன்றாக, ஒரே விதத்தில்தான் கடவுள் படைத்தார் என்றாலும் இருவரும் சிறிது காலம்தான் ஒன்றாக வாழ்ந்தனர். நீ எனக்கு சரிசமானமான உயிர் அல்ல என்றான் ஆதாம். உண்மைதான், நான் உன்னைவிடப் புத்திசாலி என்றார் லிலித். ஆதாமால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை.

தைரியமா இருங்கம்மா, நான் இருக்கேன்...

இப்போது மகனுக்கு 8 வயது. தன் தந்தையைப் போலோ, கணவனைப் போலோ மகன் இருக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தாள் பூங்குழலி. மகனுக்குப் படிப்புடன் அன்பு, அக்கறை, கஷ்டம், வாழ்க்கை போன்றவற்றைக் கற்றுக் கொடுத்தாள்.

இந்தியாவின் முதல் சர்க்கஸ் சாகசப் பெண்- சுசீலா சுந்தரி

04.01.1902 அன்று வெளிவந்த ‘முசுலிம் கிரோனிக்கில்’ எனும் நாளேடு இன்னும் ஒரு படி மேலே போய், “புடவை கட்டி, செருப்பு அணிந்து, வீடுகளுக்கு வெளியே எங்கும் தலைகாட்டாத மெல்லிய மனம் கொண்ட வங்காளப் பெண்களில் ஒருவர், இத்தனை துணிவுடன் ஆள்-தின்னும் புலிகளை வீட்டு நாய்களைப் போல் பாவித்து விளையாடுவது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாதது” என்று சுசீலா பற்றி எழுதியது.

சும்மா கிடைக்குமா சான்ஸு?

தமிழ்நாட்டில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் எண்ணிக்கை 5,65,639 என்கிறது அரசு புள்ளி விபரம். இது தவிர தனியார் பள்ளி ஆசிரியர்கள் இரு மடங்கு அதிகம். “இத்தனை ஆசிரியர்கள் இருக்கும் போது உங்களுக்கு மட்டும் எப்படி ஐநா வாய்ப்பு? எது உங்களை ஐ.நா. ஹெவியா லைக் பண்ண வெச்சுது? அரசியலா? பணமா? குடும்பமா? யாரோட சப்போர்ட்ல உங்களை தேர்ந்தெடுத்தாங்க? என்ன பின்புலம்?”, ஐந்தாண்டுகளாக தொடரும் கேள்விக் கணைகள். ஆனா ஒரு புலமும் இல்லை என்பது தான் நிஜம்.

தேவரடியார்கள் யார்-3

குலோத்துங்கச் சோழனின் மனைவி ஏழிசை வல்லபி தேவரடியாராக இருந்தவள். ஆய்குல இளவரசி முருகன்சேந்தியை, பாண்டிய நாட்டின் சிற்றரசன் ஒருவன் திருமணம் செய்து கொண்டு அவளுக்கு நிலதானம் செய்துள்ளான். முருகன்சேந்தி பார்த்திபசேகரபுரம் கோயிலின் தேவரடியாராக இருந்தவள். அவளை மணம் செய்து கொண்ட சிற்றரசன் யாதவ குலத்தைச் சேர்ந்தவன். சைவ சமயக் குரவர் நால்வரில் ஒருவரான சுந்தரர் மணம் செய்து கொண்டது பரவை நாச்சியார் என்ற திருவாரூர் பதியிலார் மரபில் வந்த தேவரடியாரை. கோழிக்கோட்டின் அரசனான குலசேகர ஆழ்வார் தன் மகள் நீலாதேவியை ஸ்ரீரங்கத்து இறைவனுக்குச் சேவை செய்வதற்காக நேர்ந்துவிட்டிருக்கிறார்.

எங்களுக்கு உணவில் சமத்துவம் வேண்டும்

“எல்லா குடும்பத்துலயும் எப்பவும் உணவு சம பங்கீட்டை வகுப்புல பண்ற உணவுத்திருவிழா மாதிரி தினம் தினம் கொண்டாடணும். ஆண், பெண் இருவர்கிட்டயும் பேசி புரிய வைப்போம். இருவரும் சேர்ந்துதான் மாற்றத்தைக் கொண்டுவர முடியும்”, என நம்பிக்கையூட்டினான் உதயா.
குழந்தைகளுக்குச் சத்தான உணவு கிடைக்க வழிவகைகள் செய்ய வேண்டியது அரசாங்கம் மற்றும் ஒவ்வொரு குடும்பத்தின் பொறுப்பும் கடமையும் கூட. குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு கொடுக்கற மாதிரி சத்துணவு திட்டத்தை மேம்படுத்தி இன்னும் வேறு திட்டங்களை அறிவிச்சா நல்லா இருக்கும். பெண் குழந்தைகள் மீதான உணவு பாகுபாடு நீங்கி சமத்துவம் துளிர்க்கட்டும் சமூகத்தில்”, என்று முடித்தது டுமாங்கி.

ஜென்னி மார்க்சின் கடிதங்கள்-3

அந்த அயோக்கியன் என்ன பண்ணினான் தெரியுமா?அவன் எனக்கு நன்றி சொல்லிவிட்டு எல்லாவற்றையும் பாக்கெட்டில் போட்டுக்கோண்டு எனது ஆறு பென்னிகளையும் சேர்த்து எடுத்துக்கொண்டு போய் விட்டான். நான் இப்பொழுது அதற்காக ஏங்க வேண்டியதாகிவிட்டது. நான் இன்னும் அதற்காக அவனை திட்டிக்கொண்டிருக்கிறேன். ஆனால் அவன் என்னை கண்டுகொண்டதாகவோ, என் பேதலிப்பை உணர்ந்தவனாகவோ தெரியவில்லை. அம்மாவும் எனக்கு ஆறுதல் சொல்லவில்லை. சுருக்கமாகச்சொல்லவேண்டுமானால் நல்ல பொருள்களெல்லாம் போனது மாதிரி இந்த ஆறு பென்னியும் போய்விட்டது. அது ஒரு ஏமாற்றமே!