16.11.18 அன்று எழுத்தாளர், செயற்பாட்டாளர் திரு. சாலை செல்வம் அவர்களின் ‘அம்மாவின் சேட்டைகள்’ புத்தக வெளியீட்டு தினத்தில் நடைபெற்ற குழந்தைகளுக்கான எழுத்தாளர் பயிற்சி முகாமில், கலந்துகொண்டு ரித்திகா எழுதியது.

ஒருநாள் பிருந்தா தோழருக்கு மாலையில் பஜாஜ் எம்80 பைக் ஓட்டணும் என்று இருந்தது. அதனால் பக்கத்து வீட்டாருடைய பஜாஜ் எம்80 பைக்கை வாங்கி, அரைமணி நேரத்தில் கொடுத்திடுவேன் என்று பிருந்தா தோழர் சொன்னார். அப்போது பக்கத்து வீட்டார் பிருந்தா தோழரை நம்பி பஜாஜ் எம்80 பைக்கை கொடுத்துவிட்டார்.

youtube

பஜாஜ் எம்80 பைக்கை ஓட்டிக்கொட்டு இருக்கும்போது பிருந்தாவுக்கு முன்னாடி போய்க்கொண்டு இருந்த பஸ் திடீரென நின்றது. பிருந்தா தோழரால் பிரேக் அடிக்க முடியவில்லை. வண்டி இன்னும் ஸ்மூத்தாக போய்க் கொண்டிருந்தது. என்னவென்று பார்த்தால், அவர் கியரைப் பிடித்துக் கொண்டு இருந்ததால், அவரால் பிரேக் பிடிக்க முடியவில்லை.

அப்பொழுது அங்கு நின்று கொண்டிருந்த சில ஆட்டோக்காரர்கள் ‘கால்ல பிரேக்கைப் பிடி’ என்று கத்த, தோழர் பிரேக்கைப் போட, ஆட்டோக்காரர்கள் பைக்கைப் பிடிக்க – சரியாக இருந்தது.

பிருந்தா தோழருக்கு பள்ளிக்குச் செல்லும் வயதாகிவிட்டது. அப்பொழுது பிருந்தா தோழருடைய தந்தை அவரை பள்ளியில் விட்டுச் செல்லும்போது, அவர் தந்தை வீட்டை அடைவதற்கு முன்பு, பிருந்தா தோழர் வீட்டில் இருப்பார். காதி க்ராஃப்ட் பிருந்தா வீட்டில் வாடகைக்கு இருந்தார்கள். யாருக்கும் தெரியாமல் காதி க்ராஃப்ட் மேஜைக்கு அடியில் பிருந்தாவும் பக்கத்து வீட்டுத் தோழியும் ஒளிந்து விளையாடுவார்கள். ஒருநாள் பிருந்தாவையும் அவர் தோழியையும் பிருந்தா அம்மாவுக்குத் தெரிந்துவிட்டது, பள்ளிக்குப் போகாமல் இங்கு ஒளிந்திருந்தார்கள் என்று. பிருந்தாவை ஒரே திட்டு. ‘அப்பா வந்ததும் நீ என்ன பண்ணினே என்று சொல்றேன் பாரு’.

தந்தை அடுத்த நாள் பள்ளிக்குச் சென்று விடும்பொழுது, ‘நான் போகமாட்டேன்’ என்று சொல்ல, ஏன் என்று கேட்க, ‘அவங்களைப் பார்க்கவே பயம்; அவங்க நீட்ட கத்திரிக்கோலால தலைல ஒரு குட்டு கொடுக்குறாங்க எல்லாருக்கும்’ என்று சொன்னார். அப்பா வந்து சரி அந்த க்ளாஸில் வேண்டாம் என்று சொல்லி, ஒண்ணாம் வகுப்பில் விட்டார். பிருந்தா நினைத்தார், அப்ப பார்த்த ஆசிரியர் போலத்தான் இவங்களும் இருப்பாங்க என்று. ஆனால் அப்படி இல்லை. பிருந்தா தோழர் பயந்துகிட்டு இருந்தார்.

அப்ப அந்த ஆசிரியர் பிருந்தாவைப் பார்த்து, ‘வா, எதற்குப் பயப்பிடுற, நான் பார்த்துக்கறேன்’, என்று சொன்னாங்க. அவங்கதான் பிருந்தாவிற்குப் பிடித்தமான ஆசிரியர் ரஸியா பேகம். அன்னிக்கு இருந்து பிருந்தா தோழர் பள்ளிக்குப் போகாமல் இருக்கவே மாட்டார்.

முந்தைய சுட்டீஸ் பக்கங்கள்:

கட்டுரையாளர்:

ரித்திகா

ரித்திகா (18.06.2005) வயது பதினாறு, ‘சாவித்ரிபாய் ஃபுலே பெண்கள் பயணக்குழு’ உறுப்பினர். ரித்திகா தனது ஒன்பதாவது வயதில் கராத்தே (இஷின்ட்ரியு ஸ்டைல்) ப்ளாக் பெல்ட் மற்றும் பதின்மூன்றாவது வயதில் ‘டேக்வொண்டோ’வில் ப்ளாக் பெல்ட் பெற்றுள்ளார். ட்ரம்ஸ் வாசிப்பதில் –லண்டன் ட்ரினிட்டி காலேஜ் நடத்தும் தேர்வில், ஐந்தாம் நிலையில் உள்ளார். பள்ளியில் 10ஆம் வகுப்பு முடித்துள்ளார்.