2020 பிப்ரவரி

2019 டிசம்பர், சைனாவில் கொரோனா பரவல் என்று நியூஸ் பேப்பரில் படிச்சேன். அப்போது நான் ஒன்பதாம் வகுப்பில் இருந்தேன். பிப்ரவரி மூன்றாவது வாரத்திலிருந்தே ஸ்கூல் போக வேண்டாமென்று பிருந்தா சொன்னாங்க. நான் சொன்னேன் , “அதெல்லாம் முடியாது; நான் ஸ்கூல் போய்த்தான் ஆவேன். இல்லை என்றால் எல்லாம் pending ஆகிடும்.”

அப்ப பிருந்தா, “கொரோனா எப்படி பரவுது தெரியலை ; எதைச் செய்வதற்கும் முதல்ல நாம் உயிரோட இருக்கணும் அது ரொம்ப முக்கியம்”, என்று சொன்னார். பிருந்தா sideல இருந்து சிந்தனை செய்து பார்த்தேன். “சரி”, என்று சொன்னேன். நான் ஸ்கூலில் என்னவெல்லாம் நடந்துச்சு என்று ஃப்ரெண்ட்டுக்கு call பண்ணி கேட்டேன். அவள் சொன்னாள், “எதுவுமே நடக்கல. சில ஆசிரியர்கள் மட்டும் வகுப்புக்கு வந்துட்டுப் போறாங்க. அவ்வளவுதான்.”

கொரோனா வைரஸ் காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. அப்பொழுது எனக்கு எல்லா நாளிலும் காலையில் Maths Tuition. வீட்டில் இருந்தபடியே பாடங்கள் நடத்தப்பட்டன. Maths Tuitionனுக்கு மாஸ்டர் வீட்டிற்கு வந்திட்டு இருந்தார். அதற்குள் மார்ச் 2nd Week இந்தியாவில் கவர்ன்மெண்ட் லாக்டவுன் போட்டங்க.

அதனால், மாஸ்டர் IMO app ல டியூஷன் எடுக்க ஆரம்பிச்சார். நான் எப்போதுமே செய்தித்தாள் எடுக்க கீழே போவேன். அப்ப ஹௌஸ் ஓனர் அங்கிள் என்கிட்ட கேட்டார், “ஏன் மேத்ஸ் மாஸ்டர் வர்றது இல்லை?” நான் “online class போகுது”, என்று சொன்னேன்.

ஜூன் 2020
நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அதனால் எனக்கு பொதுத்தேர்வு இருக்கும். எல்லா நாளும் பள்ளியிலும் தேர்வு இருக்கும்.
ஜூன் 3rd week-ல் தான் ஸ்கூல் ஆரம்பித்தது. ஆசிரியர்கள் வந்து முதல்ல அவங்க நடத்துறதை whatsappபில் வீடியோவா அனுப்ப ஆரம்பித்தார்கள். ஜூலைலதான் Zoom classes. ஸ்கூல் வந்து link அனுப்பிடுவாங்க.
ஜூம்ல நிறைய பிரச்சினைகள் இருந்தன. ஒருநாள் Biology miss வந்து mendels pea plant expriment ஸ்கிரீனில் share பண்ணி காட்டிட்டு இருந்தார். அப்ப யார்னே தெரியாத ஒருத்தர் ஷேர் ஸ்க்ரீன்ல கிறுக்கினாங்க. அப்ப மிஸ்சுக்கு கோபம் வந்து என்ன பண்றதுனே தெரியலை. அப்புறம் மிஸ், “யார் கிறுக்கறீங்க?”, என்று நிறைய வாட்டி கேட்டாங்க. வேற பேஜ் மாத்தினாங்க. அப்பவும் அது தொடர்ந்துட்டேதான் இருந்தது.

இதே மாதிரி நிறைய பீரியட்ல, நிறைய நாள் ஆயிட்டிருந்தது. அது ஒரு fake id. அந்த ‘காந்தகண்ணம்மா உனக்கு என்னம்மா’ என்கின்ற fake id ரொம்ப நாள் இருந்திச்சு. கடைசிவரை அது யார்னு ஸ்கூல் கண்டுபிடிக்கலை.
பயாலஜி மிஸ் வந்து ‘நீங்க யாரோ unknown நம்பருக்கு link கொடுத்துருக்கீங்க’, என்று சொல்லிட்டே இருந்தாங்க.

ஜியோ ( geography) மிஸ், அவங்க நிறைய தேவையில்லாத விசயங்களைப் பற்றித்தான் பேசிக்கிட்டே இருப்பாங்க. அதனால வீடியோ யாருமே ஆன் பண்ண மாட்டாங்க. அதுவும் அவங்க பீரியட்ல சிலபேர்தான் இருப்பாங்க.

ஜியோ மிஸ் lesson எடுக்க ஆரம்பிப்பாங்க. 1st para படிச்சிட்டு நம்ம நாட்டுக்குள்ள நடக்குற பொலிட்டிக்ஸ்குள்ள போய்டுவாங்க. இவங்க இப்படி இருக்கக்கூடாது, அவங்க அப்படி இருக்கணும் இப்படி எல்லாம்.
ஹிஸ்ட்ரி மிஸ் பீரியட் ஒருநாள் அவங்களோட வாய்ஸ் யாருக்கும் கேட்கல்ல. எல்லாரும் சொன்னாங்க ‘மிஸ் உங்க வாய்ஸ் கேட்கல்ல’. மிஸ் வந்து எல்லாரும் வெளையாட்டா சொல்றோம் என்று நினைச்சிட்டாங்க. மிஸ் லெஸன் கன்ட்டினியூ பண்ணி, ஃபுல்லாவே முடிச்சிட்டாங்க. அப்புறம் எல்லாருக்கும் கோபம் வந்துடுச்சு. கேட்கல்லேனு நிஜமாவே கத்த ஆரம்பிச்சிட்டாங்க. மிஸ் வந்து, ‘Its ok. Children I’ll take it again’ என்று சொல்லி முடிச்சிட்டாங்க.

Books:
இந்த லாக்டௌனில் நான் நிறைய புத்தகங்கள் படித்தேன். Harry potter part 5, 6, 7, ஜென் கதைகள், The Diary of a young Girl, My husband and other animals… அப்புறம் நிறைய பெயிண்டிங்ஸ் செய்தேன். எல்லாம் நீர் வண்ண ஓவியங்கள். நிலா, மலை, கடல், வானம் எல்லாம்.

Exercise:
எக்ஸெர்ஸைஸ் தினமும் எப்பொழுதும் காலையில் செய்வேன். சிலசமயம் ஸ்கூல் டேஸில் செய்ய முடியாம போய்விடும். லாக்டௌனில் எல்லா நாளும் செய்ய முடிகிறது.

Kitchen:
இந்த லாக்டௌனின்போதுதான் கிச்சனுக்கு சென்றேன். என்ன எல்லாம் செய்தேன் என்றால், காய் சீவினேன்; காய் நறுக்கினேன்; நூடுல்ஸ் செய்தேன்; ஆம்லெட் செய்தேன்; Butter milk ; Bread Toast. எனக்கு செய்யத் தோணும்போதும், அப்புறம் பிருந்தா மகிழ்ச்சியாக சொல்லிக்கொடுக்கிற மனநிலையில் இருந்தால் மட்டும்தான் கிச்சன் போவேன்.

31.10.2020
அன்று மாலை ஏழு மணிக்கு ‘சாவித்ரி பாய் ஃபுலே பெண்கள் பயணக்குழு’ நடத்திய ஜூம் மீட்டிங்கில் நான் ‘பெண் பயணம்’ பற்றி எனது அனுபவத்தை அறிமுகம் செய்தேன். அது செய்து முடித்தவுடன் ஒரு மிகப் பெரிய மகிழ்ச்சி தந்தது.

Before Trekking நான் வீடு மட்டும்தான் வரைவேன்; பிருந்தாவுடைய ஒரு புத்தகத்தில் கூட அது அட்டைப்படமாக வந்தது. After Trekking, கடல், வானம், நிலா என நிறைய நீர்வண்ண ஓவியங்கள் வரைந்தேன்.

என் ஓவியத்துடன் பிருந்தாவின் புத்தகம்

என் ஓவியங்கள்- தோட்டம், அருவி, பனிவிழும் இரவு, கடல்…

ஜூம் மீட்டிங்கின்போது கடைசியில் கலந்துரையாடல் நடந்தது; அப்போது ஒருத்தர் ‘நீங்கள் மலை உச்சியில் one feet அகல பாதையில் நடந்து இருக்கீங்க. அப்ப உங்களுக்கு விழுந்திடுவோம் என்று பயமாக இல்லையா?’ என்று கேட்டார். நான் சொன்னேன், “விழுந்துடுவோம்னு ஏன் நினைக்கணும்? அது நடக்கும்போது பார்த்துக்கலாம். இப்படி விழுந்து விடுவோம் என்று அஞ்சினால், வாழ்க்கையில் சாகசம் புரிய முடியாது”, என்று!

ஆசிரியர் குறிப்பு:

கட்டுரையில் இடம்பெற்றுள்ள படங்கள் எல்லாம் ரித்திகா வரைந்தவை.

கட்டுரையாளர்:

ரித்திகா

ரித்திகா (18.06.2005) வயது பதினாறு, ‘சாவித்ரிபாய் ஃபுலே பெண்கள் பயணக்குழு’ உறுப்பினர். ரித்திகா தனது ஒன்பதாவது வயதில் கராத்தே (இஷின்ட்ரியு ஸ்டைல்) ப்ளாக் பெல்ட் மற்றும் பதின்மூன்றாவது வயதில் ‘டேக்வொண்டோ’வில் ப்ளாக் பெல்ட் பெற்றுள்ளார். ட்ரம்ஸ் வாசிப்பதில் –லண்டன் ட்ரினிட்டி காலேஜ் நடத்தும் தேர்வில், ஐந்தாம் நிலையில் உள்ளார். பள்ளியில் 10ஆம் வகுப்பு முடித்துள்ளார்.