இளமை திரும்புதே...
தாமரை இலைத் தண்ணீர் போல எதிலும் அதிகப் பற்றுடன் இல்லாமல் இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும். இன்பம், துன்பம், நல்லது, கெட்டது என்று எல்லாவற்றையும் சமமாக எடுத்துக்கொள்வது மனரீதியாக நல்லது. மனதில் படும் விஷயங்களை அப்படியே வெளியே அனுப்பிவிட வேண்டும். அதை மூளைக்கு எடுத்துச் சென்று அவதிப்படக் கூடாது. முகத்தில் புன்னகையைப் படர விட்டுக்கொண்டால் முதுமை அதைத் தாண்டி நம்மிடம் வரவே வராது.