UNLEASH THE UNTOLD

Tag: Venba

வலி நல்லது

வலியைக் குணப்படுத்துவது பற்றி யோசிக்காமல் வலியின் காரணத்தைக் குணப்படுத்துவதுப் பற்றி யோசிப்பதுதான் சாமர்த்தியம். அதுதான் நிரந்தர தீர்வும்கூட.

அரச நோய்

இது தவிர குடும்பத்தில் யாருக்கேனும் ஹீமோஃபிலியா இருப்பின் அந்தக் குடும்பத்தில் இருக்கும் பெண்கள் கேரியர் டெஸ்டிங் செய்துகொள்வதும் கேரியராக இருப்பின் திருமணத்திற்கு முன்பும், குழந்தைக்காகத் திட்டமிடும் போதும் மகப்பேறு காலத்திலும் மரபணு ஆலோசகர்களின் ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் கேட்டு நடப்பது அவசியம்.

தடுப்பூசி ப்ளீஸ்

தடுப்பூசிகளால் இவ்வுலகின் ஜனத்தொகை மீது ஆதிக்கம் செலுத்திய சில நோய்கள் அறவே நீக்கப்பட்டன. மக்களின் அவசரப் பயன்பாட்டிற்காகத் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் சில பக்கவிளைவுகள் உள்ளன. அதன் பின்னால் இருக்கும் அறிவியலைப் புரிந்துகொண்டு, யார் அந்தத் தடுப்பூசிகளைப் பயன்படுத்த வேண்டும், யார் பயன்படுத்தக் கூடாது என்பதற்கான விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட வேண்டும். கேன்சர், எச்ஐவி போன்ற நோய்களுக்கான தடுப்பூசிகளைக் கண்டுபிடிப்பதற்காகப் பல ஆராய்ச்சிகள் உலகெங்கும் நடந்த வண்ணம் இருக்கின்றன. இந்த ஆராய்ச்சிகள் வெற்றி பெற்றால் மருத்துவ உலகில் மற்றும் ஒரு புரட்சி ஏற்படும்.

டவுன்சிண்ட்ரோம்

டவுன்சிண்ட்ரோம்கூட குரோமோசோம்களின் எண்ணிக்கை மாற்றத்தால் ஏற்படக் கூடியதுதான். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் டவுன்சிண்ட்ரோம் உடைய நபரின் உடலிலுள்ள ஒவ்வொரு செல்லிலும் இருக்கும் நாற்பத்தாறு குரோமோசோம்களில் இருபத்தோராவது குரோமோசோம் ஜோடியில் ஒன்று கூடுதலாக இருக்கும். அதாவது அந்த நபருக்கு இரண்டுக்குப் பதிலாக மூன்று இருபத்தியோராவது க்ரோமோசோம் இருக்கும். இதைத்தான் ‘21 ட்ரைசோமி’ என்று குறிப்பிடுவர். இதனால் அவரின் மொத்த குரோமோசோம்களின் எண்ணிக்கை நாற்பத்தியேழாக உயர்ந்திருக்கும்.

ஆட்டிசத்தைப் புரிந்துகொள்வோம்

இந்தக் குறைபாடு நிறைய காரணங்களால் ஏற்படலாம், அதில் மரபணு மாற்றங்களும் அடங்கும். இந்தக் குறைபாடு ஏற்படுவதற்கான வேறு சில காரணங்கள் என்று சொல்லப்படுபவை சுற்றுச்சூழலும் உயிரியல் காரணிகளும். அவர்களால் மற்ற குழந்தைகளைப் போல் பிறரிடம் நட்பு பாராட்டவோ சகஜமாகப் பேசிப் பழகவோ முடியாது. அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு அவர்களுக்கான தனிப்பட்ட உலகில் வாழ்வர். இந்தக் குறைபாடுள்ள குழந்தைகளை ஒரு வயதிற்குள்ளாகவே கண்டறிய முடியும். சில குழந்தைகளுக்கு இரண்டு வயதிற்கு மேல்தான் இந்த அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரிய ஆரம்பிக்கும். அதுவரை மற்ற குழந்தைகளைப் போல் அவர்களும் சாதரணமாகவே அந்தந்த நேரத்திற்குரிய வளர்ச்சியோடு இருப்பர்.

வீட்டில் என்ன விசேஷம்?

தாமதமாக இந்தச் சிகிச்சை முறையை மேற்கொள்வதின் பிண்ணனியில் இருப்பது அறியாமையும் அலட்சியமும். ஆனால், இதை மட்டும் காரணமாகச் சொல்லிவிட முடியாது. உடலளவில் ஏதோ பிரச்னை இருக்கிறது என்பதை உணர்வதற்கே சில ஆண்டுகள் ஆகிவிடுகிறது. அதன் பிறகு மருத்துவ ஆலோசனை, உடல் பரிசோதனை என்று மேலும் தாமதமாகி விடுகிறது. கடைசியாக ஐவிஎஃப் தவிர வேறு வழி இல்லை என்பதை ஏற்றுக்கொண்டு, சிகிச்சைப் பெறுவதற்குள் பல ஆண்டுகள் கடந்துவிடுகின்றன. அதற்குள் வயது ஓடிவிடுகிறது. காலம் யாருக்காகவும் நிற்காது என்பதற்கு இதுவே சான்று.

முப்பது வயதுக்குள்ளே குழந்தையா?

சரி, ஆண்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லையா? ஆண்களின் விந்தணுக்கள் கருமுட்டைகளைப் போல் அல்லாமல் புதுப்பித்துக்கொள்ளும் திறன் கொண்டவை. ஓர் ஆணின் உடலில் தினமும் பல லட்சக்கணக்கான விந்தணுக்கள் உருவாக்கப்படுகின்றன. அதேபோல ஒரு விந்தணுவின் சுழற்சி முடிவதற்கு இரண்டரை மாதங்கள் வரை ஆகும். இதனால்தான் கருமுட்டைகளில் ஏற்படும் பிரச்னைகளைவிட விந்தணுக்களில் ஏற்படும் பிரச்னைகளைக் குணப்படுத்துவது சுலபம். சரியான உணவு, முறையான உடற்பயிற்சி, மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் இவை அனைத்தும் பெரும்பான்மையான விந்தணு பிரச்னைகளைக் குணப்படுத்த போதுமானவை.

மனிதனுக்குப் பால் ஒவ்வாமை ஏன்?

“ஆதி மனிதன் தோன்றின காலத்தில், மனிதர்களால் ஒரு குறிப்பிட்ட வயசுக்கு மேல பால் செரிமானம் பண்ண முடியாது. அதுக்குக் காரணம் அவன் உடம்பில் பால் செரிமானம் ஆவதற்குப் உற்பத்தி ஆகுற லாக்டோஸ்னு சொல்லக்கூடிய நொதியின் அளவு குறையுறதுதான். இந்த லாக்டோஸ் பாலூட்டும் வயது முடியும் வரை சுரக்கும். அதுக்கப்புறம் அதோட அளவு குறைஞ்சிரும். அதனால பால்ல இருக்க லாக்டோஸ் எனப்படும் மூலப்பொருள் மனிதர்களால் செரிமானம் பண்ண முடியாது.”

கருப்பையும் உடல் சமநிலையும்

“யூ ஹெவ் மிஸ்டேக்கன். நான் அப்படிச் சொல்ல வரல. சர்ஜரி இல்லாம குணப்படுத்துற பிரச்னைய சர்ஜரி பண்ணாம சரி பண்ணிக்கலாம்னு சொல்றேன். சரி சொல்லு, ரமணி அம்மாக்கு ஹிஸ்டரக்டமி பண்ணிக்கிறதுக்கு முன்னாடி இந்த காம்பிளிகேஷன்ஸ் பத்திலாம் தெரிஞ்சிருந்தா ஆபரேஷன் பண்ணிருப்பாரா? இங்க பிரச்னையே பிரச்சனை என்னன்னு தெரியாம இருக்குறதுதான். இந்த ஒடம்புல தேவை இல்லாத உறுப்புன்னு எதுமே இல்ல, எல்லாத்துக்கும் ஒரு தனித்துவம் இருக்கு. வேற வழியே இல்லாம ஹிஸ்டரக்டமி பண்ணுறதுக்கும் பிரச்னை தீர்ந்தா போதும், அதான் குழந்த பொறந்திருச்சுல இதை ரீமூவ் பண்றதுனால என்ன ஆக போகுதுங்ற அறியாமைனால ஹிஸ்டரக்டமி பண்ணுறதுக்கும் நெறையா வித்தியாசம் இருக்கு கவி” என்று கீதா தன் உரையை முடித்ததும் கவிதாவிடம் கேட்பதற்குக் கேள்விகள் தீர்ந்திருந்தன.

குழந்தை யார் சாயல்?

தொலைக்காட்சியில் ஐபிஎல் தொடர் பார்த்துக் கொண்டிருக்கும் போது கிரிக்கெட் வீரர்களான போலார்டும், க்ரிஸ் கெயிலும் நம் கவனத்தை ஈர்ப்பதற்கான ஒரு காரணம் அவர்களின் தோற்றம். வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்தவர்கள் உயரமாகவும், தங்கள் உயரத்திற்கேற்ற எடை உடையவர்களாகவும் இருப்பார்கள் என்பது பொதுவான கருத்து. ஆனால், இதற்குப் பின்னால் இருப்பது தாயனையும் அது தாங்கி நிற்கும் மரபணுக்களும். ஜப்பானியர்களின் உயரமும் ஐரோப்பியர்களின் நிறமும் நேபாளியர்களின் தோற்றமும் சீனர்களின் கண்களும் மரபணுக்களால் தீர்மானிக்கப்பட்டவைதான்.