"பொண்ணுங்க எப்படி வேணா இருப்பாங்க; நாமதான் மனசைக் கட்டுப்படுத்திக்கணும்.”
“அவ உன்னை வேற ஏதாச்சும் பண்ணி இருந்தா? அவளை யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க. அழகான பொண்டாட்டி, குழந்தைங்கன்னு ஒரு நல்ல வாழ்க்கை உனக்கு இருக்கு. ஏன் இப்படிப் புத்தி போகுதுன்னு உன்னைத்தான் கேட்பாங்க.”