தனிக்குடித்தனம்
நிலாவுக்கு ஒரு மாதமாகவே தலையணை மந்திரம் போட்டுக் கொண்டிருந்தான் வருண். ஆரம்பத்தில் கோபப்பட்டு வருணை அடிக்கவே போய்விட்டாள் நிலா. ஆனால், வருண் திருப்பி அடிக்கவில்லை. கண்ணீரால் அடித்தான். அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் அல்லவா! வருணின் கண்ணீரும் கம்பலையும் பொறுக்க முடியாமல் இந்த ஞாயிறன்று பெற்றோருடன் பேசுவதாகச் சொல்லி இருந்தாள். கிரிக்கெட் விளையாடிவிட்டு மதிய உணவு நேரத்தில் பேசுவதாகச் சொல்லிப் போனவளை எதிர்பார்த்துக் கடிகாரத்தில் கண் வைத்துக்கொண்டே இருந்தான் வருண்.