UNLEASH THE UNTOLD

Tag: relationships

அந்த உறவுக்குப் பெயரென்ன?

தம்பதியர் தங்களுக்குள் ஒரு மௌனம் கலந்த பனிப்போர் ஆரம்பிக்கும்போதே உஷாராகிவிட வேண்டும். ஒருவருக்கு இன்னொருவர் மனம் விட்டுப் பகிர்ந்துகொள்ள வேண்டும். வெளியே எங்கேயோ யாரிடமோ மனம்விட்டுப் பேசுவதைத் தனது இணையரிடம் பேசினால் பிரச்னைகள் எழாது. பேசிச் சிக்கல்களைத் தீர்த்த காலம் போய், பேசினாலே சிக்கல்கள் வரும் காலத்தில் உள்ளோம் என்பதையும் மறுக்க முடியாது. எல்லாருமே சாய்வதற்கு ஒரு தோளைத் தேடுகிறார்கள். அந்தத் தோள் ஆறுதல் மட்டுமே தரும் என்று உறுதியாகச் சொல்ல இயலாது.

உறவை ஆரோக்கியமாக அணுகுவது எப்படி?

நானும் நீயும் சமமானவர்கள், இருவரும் இந்த உறவில், வேலையில், வியாபாரத்தில் முக்கியம் என்கிற எண்ணத்தோடு உங்களின் நிலைபாட்டில் உறுதியாகவும், அடுத்தவரின் கருத்தையும் அதே மரியாதையோடு கணக்கில் கொள்ளும் உறுதியான நிலைபாடு (Assertive). இந்த அணுகுமுறையில் இருவரும் சமமாக மதிக்கபடும்போது, அங்கே ஆரோக்கியமான கருத்து மோதல் வரலாம், ஆனால் வெறுப்போ சலிப்போ பகைமையோ வருவதில்லை.

அன்புக்கு என்ன தகுதி வேண்டும்?

யோசித்து பாருங்கள், அன்பைப் பெற அல்லது அன்பைக் கொடுக்க தகுதி வேண்டுமா என்ன? உண்மையில், அன்பைப் பெறுவதற்கும், எல்லா இன்பங்களைத் துய்ப்பதற்கும், இந்தப் பூமியில் இருப்பது ஒன்றே போதுமானது. இங்கு நாம் வாழ்வது ஒன்றே போதுமானது. நாமாக இருப்பதே போதும்.

பள்ளத்தில் விழுவது, உயரத்துக்குச் செல்வதற்கே!

சில உருளைக்கிழங்குகள், அப்படியே இருந்து அழுகியும் போகலாம். எல்லாம் ஒரே கிழங்குகள் என்றாலும், அவற்றின் பயன்பாடுகள் வெவ்வேறானவை. முடிவில் அவற்றின் வடிவமும் அவற்றின் பக்குவமும் ருசியும் அவற்றுக்கான விலையும் வேறு. ‘நம் வாழ்க்கையிலும் நாம் சந்திக்கும் ஒவ்வொரு சவாலும் இப்படித்தான், நம்மை வடிவமைத்துக்கொண்டே, நம்மை பக்குவப்படுத்திக்கொண்டே இருக்கின்றன.

வேண்டியதைக் கொடுத்தால் என்ன?

ஒருவர், தண்ணீரைக் கேட்டால் தண்ணீரைக் கொடுக்க வேண்டியதுதானே?. அதற்குப் பின், வேண்டுமானால் உங்களுக்குப் பிடித்ததையும் கொடுக்கலாம். ஆனால், அவர்கள் கேட்பதைக் கொடுக்காமல் போவது, அலட்சியம் செய்வதுபோல்தானே?

அன்யோன்ய உறவு முக்கியமானது!

ஏனென்றால் மனிதர்களுக்குக் காதலிப்பது, காதலிக்கப்படுவது, அன்யோன்யமான உறவில் இருப்பது, இளமையிலும் முதுமையிலும் எல்லாப் பருவ வயதுகளிலும் பிடித்தே இருக்கிறது. ஆக இந்த அடிப்படையான உயிரியல் தூண்டுதலும் அன்யோன்யத்தின் மீதான ஆசையும் ஒருபுறம் இழுக்க, மறுபுறம் நம் மூளை சொல்லும் வேண்டாம் என்ற தீர்வுக்கும் இடையே எழும் குழப்பம்தான்.

கேள்விசூழ் உலகில் வாழ்கிறோம்!

கணவன் மனைவி உரையாடல் வெறும் கேள்வி பதில்களாக இல்லாமல் சிறிது நேரமாவது இயல்பாக, மனப்பூர்வமாக இருந்தால் வாழ்வு இனிமையாகக் கழியும்.

பிரியமான புரிதல்

அன்பு காட்டிக் கூட ஒருவரை நாம் அடக்கியாள நினைக்கக் கூடாது. அவரவருக்கான இடைவெளியையும், சுதந்திரத்தையும் நாம் தட்டிப் பறிக்கக் கூடாது.

தண்ணீர் மேல் மிதக்கும் எண்ணெய்த் துளிகள்

பணக்கார வீட்டுக்கு மருமகளாக வரும் ஏழைப் பெண்கள் எல்லோரும் இப்படித்தான் என்ற முத்திரையை நான் குத்தவில்லை; இப்படியும் இருக்கிறார்கள் என்ற ஆதங்கத்தைச் சொல்கிறேன்.