UNLEASH THE UNTOLD

Tag: india

நான் எப்படி வந்தேன் அம்மா?

உறுப்புகள் பற்றிய புரிதலையும் அவை வேலை செய்யும் விதத்தையும் தெளிவுபடுத்தினாலும்கூட மனித உணர்வுகளை மனிதனால் மட்டுமே உணரவும் கடத்திவிடவும் முடியும். குறிப்பாக குழந்தைகளுக்கு இத்தகைய பாதுகாப்பான உணர்வை பெற்றோரால் மட்டுமே கற்றுக் கொடுக்க முடியும்.

கல்வியே சமநிலையை உருவாக்கும்!

அறிவாற்றலால் தன்னை உறுதிப்படுத்திக்கொள்ளும் ஒருவரை வெல்லும் சக்தி வேறெதற்கும் இல்லை. ஆக, ஒரு பெண்ணிற்குக் கிடைக்கும் கல்வி என்பது அவளது எதிர்காலத்தை கட்டமைப்பதோடு, ஆரோக்கியமான சமுதாய மறுமலர்ச்சிக்கும் வழிவகுக்கும்.

விவாகரத்து நாள் வாழ்த்துகள்!

சமீபத்தில் (2022) இந்தியக் குடும்பங்களில் ‘நேஷனல் ஃபேமிலி ஹெல்த் சர்வே (NFHS)’ நடத்திய பெரிய அளவிலான பல சுற்றுக் கணக்கெடுப்பில் ‘திருமணமான 18 – 49 வயதுடைய 29.3% இந்தியப் பெண்கள் குடும்ப வன்முறை அல்லது பாலியல் வன்முறையை எதிர்கொண்டுள்ளனர். 18 – 49 வயதுக்குட்பட்ட கர்ப்பிணிப் பெண்களில் 3.1% பேர் அவர்களின் கர்ப்ப காலத்தில் உடல் ரீதியான வன்முறையை அனுபவித்திருக்கிறார்கள். உடல் ரீதியாக வன்முறைக்கு உட்படுத்தப்பட்டும்கூடப் பெரும்பான்மையான பெண்கள் தங்கள் திருமண உறவில் இருந்து விவாகரத்து பெறுவது குறித்துச் சிந்திக்காமல் இருக்கக் காரணம் என்ன?

மலக்குழி மரணங்கள்...

கடந்த 2022 ஆம் வருடம் ஜூலை மாதம் 19 ஆம் தேதி மழைக்கால கூட்டத் தொடரின் போது மலக்குழி சுத்தம் செய்பவர்களுக்கு நிகழும் மரணங்கள் குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி வைக்கப்பட்ட போது மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் வீரேந்திர குமார், ‘கடந்த  5 ஆண்டுகளில்  இந்தியா முழுவதும் 347 மலக்குழி மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 51, தமிழ்நாட்டில் 48, டெல்லியில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரபிரதேசம், தமிழ்நாடு, டெல்லி ஆகிய 3 மாநிலங்களில் மட்டுமே 40 சதவீத மலக்குழி மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்கிற புள்ளிவிவரத்தைத் தெரிவித்திருக்கிறார்.

நெய்தல் பெண்களின் வாழ்க்கை

தமிழ்நாட்டில் பல மீன்பிடித் துறைமுகங்களில் போதுமான கழிப்பறை வசதி இல்லை என்று பெண்கள் என்னிடம் வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார்கள். “அதிகாலையில் இருந்து இங்குதான் இருக்கிறோம், எப்படிச் சமாளிப்பது?” என்று நாகப்பட்டினத்தில் ஒரு பெண் கேட்டது இன்னமும் நினைவிருக்கிறது. பல பொதுப் போக்குவரத்துகளில் மீன்கூடைகளோடு வரும் பெண்களை நடத்துநர்கள் அனுமதிப்பதில்லை. ஆகவே பெண்கள் தங்களுக்கான வாகன வசதிகளை ஏற்படுத்திக்கொள்ளவேண்டியிருக்கிறது. ஆண்களைக் கைகாட்டி,”அவங்கள மாதிரி டூ வீலர்ல நம்மால போக முடியாது, அப்போ என்னதான் செய்யுறது?” என்று என்னிடம் ஒரு மீன் விற்பனை செய்யும் பெண் கேட்டார். இந்தியாவில் பல துறைமுகங்களில் இதே நிலைமைதான் இருக்கிறது.

ஆணாதிக்க வேர் பிடித்த பெண் சமூகம்

பெண்ணைப் போன்று ஆண்களுக்கும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற விதிக்கப்படாத வரையறை வகுக்கப்பட்டுள்ளது. எப்படிப் பெண் என்பவள் குனிந்த தலை நிமிராமல் செல்ல வேண்டும் என்கிற முட்டாள்தனமான பழக்கத்தை விதைத்ததோ, அதேபோல ஆண் என்பவன் அழாமல், அதிகம் பேசாமல், கண்பார்வையில் பெண்ணை அடக்கும் ஒருவனாக இருக்க வேண்டும் என்கிறது. அவனது நடை, உடை, பாவனையில் ஏதேனும் பெண் சாயல் தென்பட்டால் உடனே அதனை வைத்து அவனைத் தாழ்த்தி பேசுவது, அவனது பாலினத்தைக் கேள்வி கேட்பது போன்ற செயல்களில் இந்தச் சமூகம் ஈடுபடுகிறது.

நாற்பதுக்குப் பின்...

கணவர், குழந்தைகள்தான் வாழ்க்கை தனக்கென ஒரு வாழ்க்கை இல்லை என்பதான மாய வலையில் சிக்கிக்கொள்ளும் பெண்கள் தன் இளமைப் பருவம் முழுவதையும் குழந்தைகள் வளர்ப்பிலும், குடும்பத்தைக் கவனித்துக் கொள்வதிலும்தான் பெரும்பாலோனர் செலவிடுகின்றனர். குடும்பம் தாண்டி வேறு ஒன்றைச் சிந்திக்க முடியாத நிலை தானாக வாய்க்கப்பெற்றுவிடும். ஏனென்றால் நம் குடும்ப அமைப்பு பெண்களை அப்படியாகத்தான் வார்த்து எடுக்கிறது.

குடும்பக் கட்டுப்பாடு

மாத்திரை, ஊசி, சாதனம், அறுவை சிகிச்சை போன்ற அனைத்து விதமான சிகிச்சை முறைகளும் குடும்பக் கட்டுப்பாட்டில் உள்ளன. மாத்திரை, ஊசி, சாதனம் போன்றவை தற்காலிக குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை முறைகள் எனவும், அறுவை சிகிச்சை என்பது நிரந்தர குடும்பக்கட்டுப்பாடு முறை எனவும் அழைக்கப்படுகிறது.

ஆணுக்கு (ம்) அவசியம் பாலியல் கல்வி

ஆணுக்குப் பாலியல் கல்வி அளிப்பதன் மூலம் ஆணாதிக்கம், பாலியல் பாகுபாடு, பெண் அடிமைத்தனம் போன்றவை ஒழியும். பாலியல் கல்வி இல்லாத ஆண்பிள்ளை வளர்ப்பு இன்னோர் ஆணாதிக்கவாதியைத்தான் உருவாக்கும்.

இறைமறுப்பாளராக ஒரு பெண் வாழ முடியுமா?

பெரும்பாலான மதங்கள் பெண்களை இரண்டாம் தர மக்களாகவே பாவிக்கின்றன. கடவுளர்களாகப் பெண்களை வழிபடுவதாகச் சொன்னாலும், அவர்களுடைய கோட்பாடுகளுக்கு அடங்கி நடக்கும் பெண்ணே வழிபாட்டுக்குரியவர்; அடங்காத பெண் கொல்லப்பட்டு வேண்டுமானால் சிறு தெய்வமாகலாம் என்பதே நடைமுறை. மதங்கள் பெண்ணை ஒரு வீட்டில் இருந்து இன்னொரு வீட்டுக்கு தாரைவார்க்கப்படும் பொருளாகவே பார்க்கின்றன. ரத்தமும் சதையும் உள்ள சக உயிரினமாக மதிப்பதில்லை. ஒன்று புனிதப்படுத்தப்பட்டு தெய்வமாக வேண்டும். இல்லையேல் கேடு கெட்டவளாக மிதிக்கப்பட வேண்டும். சுய சிந்தனையோடு செயல்பட முடியாது.