UNLEASH THE UNTOLD

Tag: family

இயல்பாகிப் போயிருக்கும் ஆணாதிக்கச் சிந்தனைகள்…

பெண்ணை அடிமைப்படுத்திய பின்னர் ஆண் தனது ஆதிக்கத்தை இதில்தான் என்றில்லாமல் எல்லா விஷயங்களிலும் ஏற்றி வைத்திருக்கிறான். மரபணுவிலேயே இத்தகைய சிந்தனைகள் ஊறிப் போய்விட்டன. முன்னேர் செல்வதையொட்டியே பின்னேர் செல்வது போல முன்னோர்கள் செய்த விஷயங்களையே…

பெண்களின் விருப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது யார்?

இந்தக் கேள்வியைக் கொஞ்சம் உங்களுக்கு நீங்களே கேட்டுப் பாருங்கள்; குறைந்தபட்சம் ஒரு நிமிடம் கண்ணைமூடி, உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை அல்லது உங்கள் வாழ்க்கையில் கடந்து சென்ற பெண்களின் விருப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது யாரால் என்று…

பெண்களும் தொ(ல்)லைக்காட்சி விளம்பரங்களும்

சமீபத்தில் பாசுமதி அரிசி விளம்பரம் ஒன்றைத் தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள்.  மாமனார் ஈஸிசேரில் அமர்ந்து நியூஸ் பேப்பர் படித்துக் கொண்டு இருப்பார், “லன்ச்க்கு தேங்காய் சாதம் ஓகேவா?” என்று மருமகள் கேட்க, “பாசுமதி அரிசியில தேங்காய்…

பெண்களும் பணியிடப் படிநிலைகளும்

ஒரு விளையாட்டு விளையாடுவோமா? டாக்டர் கலெக்டர் போலீஸ் இந்த மூன்று வார்த்தைகளையும் கண்ணை மூடிக்கொண்டு மனதிற்குள் சொல்லிப் பாருங்கள். உங்கள் மனக்கண்ணில் தெரிந்த உருவம் என்ன? ஆணா? பெண்ணா? நம் சமுதாயம் பெண்களுக்கென்றே சில…

பெண்களும் பாலினச் சமத்துவமும்

பெண் குழந்தைகள் என்றால் சீட்டுக் கட்டி நகை சேர்த்து வைப்பது மட்டுமே அம்மாவின் கடமை, அதற்குள்ளாக மட்டுமே உள்ள அதிகாரத்தை நினைத்து மகிழ்ந்து கொண்டு இருக்காமல், பெண் குழந்தைகளின் கல்விக்காகவும் வேலை வாய்ப்புக்காகவும் எந்தத் தடையையும் சொல்லாமல் ஊக்கப்படுத்தி முன்னேற்றிச் செல்வதே ஒட்டுமொத்த சமூகத்துக்கான பங்களிப்பு என்று உணரும்போது, இந்தப் பாலினச் சமத்துவ இடைவெளி அடுத்து வரும் தலைமுறைகளில் நாம் நிலவுக்குச் செல்லும் முன்னரேவாவது சரி செய்ய வேண்டும்.

இசை எதைத் தேர்ந்தெடுத்தாள்?

தன்னுடைய தேவை என்ன என்கிற தெளிவும் தீர்வும்தான் இலக்கே தவிர அது தான் யோசித்த வழியில் மட்டுமே இருக்க வேண்டும் என்கிற பிடிவாதம் இல்லா நெகிழ்வுத் தன்மை, எதிரில் இருப்பவரையும் சவாலுக்குள் சேர்த்துக் கொள்ளும் அறிவுத்திறன், எந்தச் சூழ்நிலையிலும் வேலையைவிடப் போவதில்லை என்கிற திட சிந்தனையும், அதை வெளிப்படுத்தத் தயங்காத திட மனதும் எல்லாம் சேர்ந்துதான் இசையின் வெற்றிக்குக் காரணம்.

XXL சைஸில் தொடரும் பிரச்னைகள்

பருமனாக இருக்கும் பெண்கள் ஜவுளிக்கடையில் தங்களுக்கான உடைகள் கேட்கக் கூச்சப்படுவதை நாம் பார்த்திருக்கிறோம். அவர்கள் பருமனாக இருப்பதாலேயே அவர்களுக்குப் பிடித்தமான ஆடைகளைக்கூடத் தேர்ந்தெடுக்க முடியாமல் போகும் சூழல் சில நேரம் ஏற்படுகிறது. “சாரி மேடம். உங்க சைஸ்க்கு கிடைக்கல” என்று பணியாட்கள் தயங்கியபடி சொல்லும் போது அவர்களுக்கு உறுத்தலாகத்தான் இருக்கும். ஆனால், இவையனைத்தும் நம் உடல் பருமனாகும் வரை நமக்குப் புரிவதில்லை.

 கல்யாண அகதிகள்

இந்தக் கல்யாணங்கள் ஏற்படுத்தப்பட்டதன் நோக்கம் தனக்கென்று ஒரு பாதுகாப்பு வேண்டும். அது உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும், பொருளாதார நிலை சரியில்லாமல் இருந்தாலும் ஒருவருக்கு இன்னொருவர் உதவிக் கொண்டு அனுசரணையாக இருந்து, உறவுச் சங்கிலியின் கண்ணிகள் அறுந்து போகாமல் காத்துக் கொள்ள வேண்டிதான் திருமணங்கள் தோற்றுவிக்கப்பட்டன.

இசையின் முரட்டுத்தனத்தால் என்ன ஆனது?

ஒரு ஞாயிற்றுக் கிழமை நிதானமாக  எழுந்து வந்த இசையை, “ என்னம்மா, மாமா காபிக்காகக் காத்திருந்து அலுத்துட்டார், என்னதான் ஞாயிறு என்றாலும் எட்டு மணிக்கா எழுவது?” என்று மாமியார் கேட்டார். இன்னும் தூங்கிக்கொண்டிருக்கும் பிரபுவைப் பற்றிப் பேசவே மாட்டார்கள் எனக் கடுப்புடன் நினைத்தவாறே, “எனக்காக ஏன் காத்திருக்கணும்? நீங்க போட்டுத் தாங்க, இல்லாட்டி மாமாவே போட்டுக்கலாமே? நான் இந்த வீட்டுக்கு வர்ற்துக்கு முந்தி நீங்க காபியே குடிக்காமயா இருந்தீங்க? “ என்று குரலை உயர்த்தி கத்தினாள்.

 'நோ' சொல்லுங்க...

சரியான திட்டமிடல் இல்லாதவர்கள் வெகு எளிதாக மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். செய்ய இயலாத வேலைகளுக்கு நோ சொல்லுபவர்கள் மனச் சிதைவு நோய்களுக்கு ஆளாவதில்லை. எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்பவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். மனதை நேர்மறை எண்ணங்களால் லகுவாக வைத்துக் கொள்ள வேண்டும்