UNLEASH THE UNTOLD

Tag: Children

லிடியா

லிடியா, ”விருது முக்கியமானதுதான். இவ்விருதுக்கு என்னுடன் பயணிக்கும் நண்பர்களுக்கு உரிமையானது. விருது பெற்றபோது என்னிடம் ஆராவாரமில்லாத அமைதியான உணர்வே இருந்தது. என் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாத வார இறுதிநாட்களில் பெற்றோருடன் குப்பை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அப்போது எனக்காகக் குப்பையிலிருந்து பொம்மை எடுத்து, பத்திரப்படுத்தி, நான் செல்லும் போது கொடுப்பார்கள். அந்த சந்தோஷத்தை விட வேறு எதுவும் பெரிதில்லை” என்றார்.

கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுக்காதீர்கள்...

ஒரு பொருளை வாங்குவதற்கு முன் அந்தப் பொருள் பற்றிய பயன்பாட்டின் தேவையை அறிந்துகொள்ள முயற்சித்தாலே தேவையில்லாத பொருள்கள் வாங்குவதைத் தவிர்க்க முடியும். பணமும் வீட்டில் இடமும் மிச்சமாகும்.

உருவக்கேலி

குண்டாக இருக்கும் குழந்தைகளிடம் சொல்லுங்கள், யாரும் கிண்டல் செய்து சிரித்தால் நீங்கள் கஷ்டப்பட வேண்டாம். என்னுடைய உடல் நல்ல ஆரோக்கியத்துடனும் நோய் எதிர்ப்பு சக்தியுடனும் இருக்கிறது என்று சொல்லுமாறு அறிவுறுத்துங்கள்.

பெண்ணுடலை நேசிக்க விடுவோம்!

நம் உடல்வாகு மரபியல்படி நம்ம பாட்டி, அம்மாவுக்கு எப்படி இருக்கோ அப்படித்தான் நமக்கும் இருக்கும். அதுக்கெல்லாம் கவலைப்படக் கூடாது. இது நம் உடல், இயற்கை படைத்திருக்கு. சிறப்பா வைச்சுக்கணும்ன்னு நெனக்கணும். ஒருபோதும் நம் உடலை நாம் வெறுக்காம லவ் பண்ணணும்.

ஒப்பிடலாமா?

நாமெல்லாம் பொருளாதாரத்துல யாரையும் சார்ந்திருக்காம இருக்கோம்ங்கிறதும் நமக்கான விசயங்களை நாம் செஞ்சுக்கணும்ங்கிற எண்ணம் இருக்கறதும் நம்மிடம் இருக்கும் நேர்மறை விசயங்கள். இது போல பெண்கள் தன் விருப்பங்கள் சார்ந்த வெளியை உருவாக்கிக்கணும். பல பெண்களுக்கு நம்மைப் போல இருக்கணும்னு ஆசை இருக்கு. இதெல்லாம் இந்தச் சமூகத்தில் இயல்பாக்கப்படணும்.

பெண்களுக்கு நீண்ட முடிதான் அடையாளமா?

“நீங்க சொல்றபடி சாதித்த, சாதிக்க நினைக்கும் பெண்கள் முடியை நீட்டி முழக்கி அழகுன்னு பராமரிக்கறதில்லைதான். தங்களை வளர்த்துக்க எத்தனிக்கும்போது இதெல்லாம் கணக்கிலேயே வைக்க முடியாது. இதைக் கணக்கில் வைத்தால் அவர்கள் பணியில் சுணக்கம் ஏற்படும். நேரம் ஒதுக்க முடியாம போய்டும். நான் சொல்றது சரிதானே மேடம்?” என்றாள் பொன்னி.

பெண்களுக்கு முடிதான் அடையாளமா?

“நானும் ஒரு சாதாரண, விளையாட்டுப் பற்றியெல்லாம் அறிமுகம் இல்லாத குடும்பத்தில் பிறந்தவதான். எனக்கு முடியைக் குட்டையா வெட்டிக்கிட்டா பல விஷயங்களில் இருந்து பெண்கள் விடுபடலாம்ன்னு தோணுச்சு. ஒரு நாள் திடீர்ன்னு முடியைக் குட்டையா வெட்டிக்கிட்டு எங்க அம்மா முன்னாடி போய் நின்னேன். அவ்ளோதான், அன்னிக்கு என்னை அவங்க பேசினது ஒருபுறம்னா என் சொந்தக்காரங்க என்னென்னவோ பேச என்னைச் சமூக ஒதுக்கலுக்கே கொண்டு போய்ட்டாங்க தெரியுமா? அவங்க சொன்னதெல்லாம் கேட்டு என் நெஞ்சே வெடிச்சிருச்சு பொன்னி. மாற்றம் எளிதா வந்திடறதில்லதான்.”

குழந்தைகள் ஆளுமைகளாக வழிகாட்டுவோம்!

சிறுவயசுல சில விஷயங்களைத் தனித்துச் செயல்பட பழக்கலாம். தான் அணியும் துணிகளைத் தேர்ந்தெடுத்தல், வளரிளம் பருவத்துல தனித்துச் செயல்பட வழிகாட்டிட்டு, பிழை செய்யின் அப்பவே குறுக்கிடாம அதற்குப் பிறகு அந்தச் செயல் குறித்து உரையாடலாம். இந்த உரையாடல் அவர்களோட செயல்பாட்டை நெறிப்படுத்தும். அதைவிடுத்து நாம் அறிவுரை வழங்கிட்டே இருந்தோம்னா அவர்கள் அதை என்னவென்றுகூடக் கேட்க மாட்டார்கள். மாறாகத் தன்னை மனிதனாக அங்கீகரிக்காதது போல உணர்கிறார்கள். அவர்களை அங்கீகரித்து பொறுப்புகள் வழங்கி பெருமூளையை வலுப்படுத்துவோம்.

உங்கள் குழந்தைகள் உங்களுடையவர்கள் அல்லர்...

முயற்சி செய்தால் வெற்றி என்றாவது ஒருநாள் கிடைக்கும் என்பதை அவர்களுக்கு உணர்த்திய வண்ணமாகவே இருங்கள். உள்ளேயே பொத்தி வச்சு வளர்க்காமல், தானாக வளர விடுங்கள். மணலில் விளையாடட்டும்; மழையில் நனையட்டும்.

அரசியல் உரையாடலைப் வளரிளம் பருவத்தில் தொடங்குவோம்!

அரசியலுக்கும் அரசியல் கட்சி சார்ந்து பேசறதுக்குமான வித்தியாசத்தை அனைவரும் முதலில் உணரணும். பதின்ம வயதுல இந்த உலகத்துல நடக்கிற விசயங்களைக் கேள்வி எழுப்பும், கூடவே தனக்கான ரோல் மாடலைத் தேர்வு செய்து தனக்கான அடையாளத்தைக் கண்டடையத் தொடங்கும் தருணம் அது.