UNLEASH THE UNTOLD

Top Featured

சனாதனம், சிறுதெய்வ உயிர்ப்பலிக்கு எதிரான அருள்நூல் - 2

கிறிஸ்தவ தோழிக்கு நாட்டு தெய்வங்களின் மீது வெறுப்போ அவநம்பிக்கையோ கிடையாது. நாட்டு தெய்வக்கோயில்களை கடந்து செல்லும்போது அவளும் சிலுவை போட்டுக் கொள்கிறாள். கோயில் கொடை விழாவின்  சமபந்தியில் கலந்து கொண்டு வில்லுப்பாட்டு ரசிக்கிறாள்.

சிந்தித்துச் செயல்படுவோமா?

இன்றைய அவசர உலகில் அனைவருமே ஏதோ ஒன்றை நோக்கி ஓடுகிறோம். அதில் வெற்றி பெற முடியாவிடில் மற்றொன்றை நோக்கி ஓடுகிறோம். ஏன் வெற்றி பெற முடியாமல் போனதென்று யோசித்து சரி செய்ய நமக்கு நாம் நேரமே கொடுப்பது இல்லை.

ஆப்பிரிக்காவின் மண முறைகள்

ஒன்றுக்கும் மேற்பட்ட  வாழ்க்கைத் துணை கொண்டிருத்தலைக் குறிக்கும் பலதுணை மணம், திருமணம் எனும் நிறுவனத்துக்குள் மதம் சார்ந்து பேணப்படும் ஒரு பண்டைய திருமண முறையாகும். இவை ஓரினச்சேர்க்கை மணங்களை பொதுவாக உள்ளடக்கியதில்லை. இவ்வாறான மணங்கள் இன்றைய…

சமத்துவத்துக்காகப் போராடும் பிரியா

கல்வியும்  ஓரளவு   அரசியலும்  இருக்கும்  நானும் மக்களுக்காக  இயங்கவில்லை  என்றால்  கல்வியையும் அரசியலையும்  நுகரமுடியாத  விளிம்புநிலை  மக்களை  எப்படி  எழுச்சிப் பெறச்  செய்வது?  ஆதலால்  இயங்குகிறேன்  என்கிறார்  பிரியா. 

அங்கீகாரம் கிடைக்காத லீஸ் மைட்னர்

1917ஆம் ஆண்டு ஒரு புதிய தனிமத்தைக் கண்டுபிடித்தார். அதன் பெயர் புரோடாக்டினியம். (proactinium). அவர் யூதர் என்பதால் அதிலும் ஒரு சிக்கல் வந்தது. 1933ஆம் ஆண்டு அடால்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் சான்சலரானார். அவர் ஆட்சி வலுப்பெற்றதும் யூதர்களைப் பணிகளில் இருந்து நீக்கினார். எப்படியோ 1938 வரை ஜெர்மனியில் தாக்குப்பிடித்தார் லீஸ்.

மணமகள்

மணமகள், 1951ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்.  ‘என்.எஸ்.கே பிலிம்ஸ் மணமகள்’ என படத்தின் தலைப்பைப் போட்டதும், நடிகர்கள் பெயர் போடுகிறார்கள். என்.எஸ். கிருஷ்ணன் எஸ்.வி. சஹஸ்ரநாமம் டி.எஸ். பாலையா டி.எஸ். துரைராஜ் புளிமூட்டை ராமசாமி…

காளீஸ்வரி

When I was a baby You would hold me in your arms என்று தொடங்கிய அந்த ஆங்கிலப் பாடலை சாரதா டீச்சர் விவரித்துக் கொண்டிருக்க, கண்ணிசைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் காளீஸ்வரி. காளீஸ்வரிக்கு…

புலம்பெயர் தமிழர்களின் அடையாளச் சிக்கல்கள்

இந்தத் தனிமைதான் நாம் இந்தச் சமூகத்தில் யார் என்கிற கேள்வியை உருவாக்கும். அடுத்து இந்த அந்நிய சமூகத்தில் நமக்கு என்ன அங்கீகாரம் என்று கேள்வி கேட்கவைக்கும். இந்தக் கேள்வி அடுத்ததாக எந்த அடையாளம் மூலம் நாம் அங்கீகாரம் பெற முடியும் என்று யோசிக்க வைக்கும். அப்போது நாம் எது நமக்குப் பெருமை தரும் அடையாளம் என்று நம்புகிறோமோ அந்த அடையாளத்தை முன்நிறுத்தி பேசுவோம். பெரும்பாலும் இந்தியாவில் இருந்து புலம்பெயர்பவர்கள் மொழி வழியில் தங்களை அடையாளப்படுத்திக்கொள்வர். குறிப்பாக, உலகின் பழமையான மொழி என்கிற பெருமையைக் கொண்டுள்ள தமிழர்கள் மொழிப் பற்றின் அடிப்படையில் தங்களை முன்னிருத்திக்கொள்வர்.படைப்பாளர்:

தீபிகா தீனதயாளன் மேகலா

தமிழகத்தைச் சேர்ந்த தீபிகா, தற்போது கனடாவின் மக் ஈவன் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் பட்டப்படிப்பு பயின்றுவருகிறார். தான் கற்றுவரும் மானுடவியல் கோட்பாடுகளை தமிழ் நிலப்பரப்புக்கும், அமெரிக்கக் கண்டத்துக்கும் பொருத்திப் பார்த்து கட்டுரைகளை எழுதத் தொடங்கியுள்ளார். வரலாறு மற்றும் தமிழ் மேல் தீவிர பற்று கொண்டவர். இவரது யூடியூப் செய்தி சேனலின் சுட்டி: https://www.youtube.com/channel/UCyNXWPShwgZG4IsyjP7BnAQ

இசக்கிமுத்து

“எனக்காகப்பா ப்ளீஸ். இன்னைக்கு ஒரு நாள் ராத்திரி இங்க தங்கிக்கயேன். பாவம் அவருக்கு மேலுக்கு முடியலங்குறதால தானே கேக்குறேன்.  நீ அவரைப் போய்ப் பார்க்க வேண்டாம், ஏதும் பேசிக்கக்கூட வேண்டாம். டீவி ரூம்ல கிடக்குற கட்டில்ல படுத்துக்க போதும் ஏதும் அவசரம்னா” என்று இழுத்தவளுக்குத் தெரியும். அவசரம் என்றால்கூட கண்டிப்பாக அவனை அழைக்க மாட்டார் என்று. ஆனால் அதற்காக இந்த அடைமழையில் சளி, காய்ச்சல் வந்து கிடக்கும் அவரைத் தனியாக வைத்து விட்டுப் போக அவளுக்கு மனமில்லை.

அர்த்தமுள்ளதா இந்த மதங்கள்?

பெண்கள் அதிகளவில் சாமியார் மடங்களிலும், கோயில்களிலும் குவியக் காரணம் என்னவென்றால் மூச்சுமுட்ட வைக்கும் வீட்டுச் சிறையில் இருந்து கொஞ்ச நேரமேனும் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றுதான். சக பெண்களைப் பார்க்கவும், கொஞ்சம் வெளிக் காற்றைச் சுவாசிக்கவும், சிறிது நேரமேனும் தனிமையில் இருக்கவுமே பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்கள். அது புரியாமல் இந்தச் சாமி சமாச்சாரங்களை எல்லாம் பெண்களின் தலையில் ஆண்கள் கட்டக் காரணம் என்னவென்றால் பெண்கள்தாம் எந்த ஒரு விஷயத்தையும் அடுத்த தலைமுறைக்கு எளிதில் கடத்துகிறார்கள் என்பதால் தான்.