UNLEASH THE UNTOLD

சிறப்புக் கட்டுரைகள்

அடிமைப் பெண் கண்ணகியும் புதுமைப் பெண் மாதவியும்

கற்பே சிறிதும் இல்லாத பரத்தனான கோவலன் காவிரியைப் புகழ்வது போலக் கற்பைப் பற்றி பேசுவதைப் பரத்தைக் குலத்தில் பிறந்தாலும் கற்பறம் பேணிய மாதவியால் எப்படி தாங்கிக் கொள்ள இயலும்?

காகிதப் பூக்கள்- அனுஷ்யா

நெறைய புறக்கணிப்புகளை பாக்க வேண்டியதா இருக்கும். அதுல துவண்டு போகாம அடுத்து என்ன வழின்னு யோசிக்கணும். திருநங்கைகள் சமுதாயப்பணிகளிலும் தங்களை ஈடுபடுத்திக்கணும்.

தொலைந்த தொழில்கள்

வளையல்காரர்கள், மனைவி தவிர அனைவரையும் தாய், சகோதரியாய் நினைப்பேன் என்று குலசாமி கோவிலில் சத்தியம் செய்வார்கள் என கி.ரா. சொன்னதாக எங்கோ படித்த நினைவு.

பெண்ணுக்கும் உடற்பயிற்சி அவசியம்

பெண்கள் உடலளவில் பலவீனமானவர்கள் என்பது ஆணாதிக்கத்தின் கற்பிதமே. முறையாகப் பயிற்சி செய்தால் அபாரவலிமை கிடைக்கும் என்பதற்குப் பளுத்தூக்கும் வீராங்கனைகளே சாட்சி.

விதிகளை உடை நமக்கென்ன தடை?

எந்த ஒன்றையும் இறுதியில் பெண்ணின் நடத்தையில் கொண்டு வந்து சேர்ப்பதில் ஆண்களை விட ஆணாதிக்கச் சிந்தனையில் இருக்கும் பெண்களே வேகமாக இருக்கிறார்கள். ஏற்றுக் கொள்ளச் சங்கடமாக இருந்தாலும் இதுதான் உண்மை.

வரதட்சணையும் பெண் வெறுப்பும்

பெண்களைப் பெற்ற பெற்றோர்கள் பெருமைக்குப் பெற்று எருமைக்குக் கட்டிக் கொடுத்தோம் என்றில்லாமல் பெண் குழந்தைகளைப் பாலினச் சமத்துவத்துடன் வளர்த்து சுயசார்புடையவர்களாக ஆக்க வேண்டும்.

நம்பிக்கைத் தாரகை அமண்டா கோர்மன்

சமூக அக்கறைகொண்ட கவிதைகளை எழுதுவதோடு அந்த அக்கறைக்கும் பொறுப்புக்கும் செயல்வடிவம் கொடுப்பவராகவும் இருக்கிறார். லாபநோக்கமில்லா நிறுவனமொன்றைத் தொடங்கி, அதன்மூலம் எழுத்துப் பணிமனைகளை நடத்துகிறார்.

காணாமல் போனவர்கள்

அம்மி, ஆட்டு உரல் கொத்த வருபவர்கள் ‘ஆட்டு உரல், அம்மி கொத்தறது’ என்று கூவிக் கொண்டே வருவார்கள். இவர்கள் பெரும்பாலும் பெண்களாகவே இருப்பார்கள்.

திருமணத்துக்குப் பின் வேலைக்குச் செல்வது அவசியம்

வேலை என்பது ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து அதில் நமது அறிவையும் உழைப்பையும் செலுத்தி இந்தச் சமுதாயத்திற்கு பங்களித்து, அடுத்த தலைமுறைக்கான மேம்பட்ட உலகத்தை உருவாக்கவும்தான்.