UNLEASH THE UNTOLD

தொடர்வோம்

வாழ்தல் இனிது; உறவுகளோடு வாழ்தல் இனிதினும் இனிது!

உணர்வுகளைப் பொறுத்தவரை, உங்கள் உணர்வுகளுக்கு நீங்களே பொறுப்பு. உணர்வுகள் மொத்தமும் உங்களுடையவையே. உங்களால் உணரபட்டவை. உங்களுக்குள்ளாகவே ஓடிக்கொண்டிருப்பவை. இது உறவுகளால் ஏற்படும் உணர்வுகளுக்கும் பொருந்தும்.

தொடரும் பெண் குழந்தைகளின் தற்கொலைகள்...

உலகத்தில் ஒரு வருடத்தில் 8 லட்சம் பேர் தற்கொலை செய்துகொள்வதாக ஐ.நா. அறிக்கையின் புள்ளிவிபரம் கூறுகிறது. கடந்த 50 ஆண்டுகளில் 60 சதவீதம் அளவுக்குத் தற்கொலை செய்யக்கூடிய எண்ணிக்கைக் கூடிக்கொண்டே போயிருக்கிறது. அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் இருபத்தைந்து மடங்கு அதிகமாக யோசித்தால்தான் குறைக்க முடியும் என உளவியல் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேரியின் ஆட்டுக்குட்டி பாடல்

1830ம் ஆண்டு சாராவின் நூல் வெளியாகி உலகமெங்கும் மேரியின் ஆட்டுக்குட்டி பிரபலமானது. எந்த அளவுக்குப் பிரபலம் என்றால், உலகின் முதல் ஒலிப்பதிவுக் கருவியான ஃபோனோகிராஃபை உருவாக்கிய தாமஸ் ஆல்வா எடிசன், தன் சொந்தக் குரலில் அதில் முதலில் பதிவு செய்தது ‘மேரியின் ஆட்டுக்குட்டி’ பாடலைத்தான்!

உங்களுக்காகவும் பேசுங்கள்!

மற்றவர்களுக்கான உதவிகளைச் செய்வதற்கு முன்னால், உங்களுக்கு நீங்கள் உதவி செய்யக் கற்றுக்கொள்ளுங்கள். அவரவர்களின் செயல்களுக்கான நியாயங்கள் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கும். அதைக் கருத்தில் கொள்வதற்கு முன்னால், உங்கள் நியாயங்களைக் கருத்தில் வையுங்கள்.

சாதி வேற்றுமைக்கு நிறம் காரணமா?

இந்தியாவில், உண்மையில் நிறம் அடிப்படையில் சாதியப் பிரிவினை தோன்றவில்லை. அனைத்து சாதிய படிநிலையிலும் மக்கள் அனைத்து நிறத் தோற்றத்தில் இருப்பதை எளிதில் காணமுடியும். இருப்பினும் இந்தக் கண்ணோட்டம் எப்படித் தோன்றியது?

உறவுகளில் மகிழ்ச்சியை அதிகரிக்கலாம், வாங்க!

இவர்கள் எல்லாரிடமும் ஒரே தன்மைதான். அது தாங்கள் காயப்படுவோம் என்று தெரிந்தேதான், அவர்கள் தங்கள் உறவுகளுக்காகச் செய்கின்ற செயல்களைச் செய்து வருகிறார்கள். தன்னுடைய மகிழ்ச்சிக்காக அவ்வளவு வாய்ப்புகள் இருந்தும் தேர்ந்தெடுப்பது இதையே.

பெண் குழந்தைகளின் உண்மை நிலை என்ன ?

வகுப்பறைகளிலும் இந்தச் சமூகத்திலும் பெண் குழந்தைகள் நடத்தப்படும் பாங்கு குறித்து நாம் வெளிப்படையாகப் பேசுவது ஏன் தவிர்க்கப்படுகிறது? இது ஒரு பிரச்னையாகப் பார்க்கப்படுவதும் இல்லை. இதுபோன்ற பிரச்னைகளின் நீட்சிதான் பெண் குழந்தைகளது அடுத்தடுத்த நகர்வுகள், திருமண உறவில் வன்முறை, குடும்ப வன்முறை என அனைத்திற்கும் காரணமாக அமைகிறது.

உணர்வுகள் வெங்காயம் போன்றவை...

உணர்வுகள் வெங்காயம் போன்றவை. நீங்கள் உணர உணர, ஏற்றுக்கொள்ள ஏற்றுக்கொள்ள, வெங்காயம் போன்று ஒவ்வோர் அடுக்காக உரிந்து ஒன்றுமில்லாமல் ஆகிவிடும். அதன் பின்னர் பிரச்னைகளைக் கையாளுவதற்கான வழிமுறைகளும் எடுக்க வேண்டிய தீர்மானங்களும் அழகாகத் தெரியவரும்.

இனவாதமும் சாதியமும்

காதலிப்பவரிடம் வெட்கப்பட்டுக் கூனிக்குறுகி முத்தம் கேட்பது போல் சாதி கேட்பதை மாற்றியதால் வெளிப்படையாகப் பிறரைச் சாதி ரீதியாகப் பாகுபாடு காட்டி ஒடுக்குவது போன்ற செயல்கள் தமிழ் மண்ணில் பெரும்பாலும் நடப்பதில்லை.

வாய்ப்புகளின் தொகுப்பே வாழ்க்கை!

நம்மை அன்பு செய்கிற, கொண்டாடுகிற பல நபர்களைக் கணக்கில்கொள்ளாமல், நம்மை நிராகரித்த ஓர் உறவைப் பற்றி மிகவும் வருத்தப்பட்டுக் கொண்டிருப்போம்.

வேலைக்கான தேர்வில் தகுதி இழந்தால், அதைவிட அதிக ஊதியமும் மனநிறைவும் தரக்கூடிய வேலைகள் இந்த உலகில் நிறைய இருக்கின்றன என்பதை மறந்து வருத்தப்படுகிறோம்.