UNLEASH THE UNTOLD

தொடர்வோம்

இயற்கையும் பெண்ணுடலியலும் - 2

மேற்கத்திய பெண்கள், சுற்றி வளைக்காமல், ‘ இன்று நான் தயார்நிலை காலகட்டத்தில் இருக்கிறேன்’, ‘Why don’t we have a good time today..?’ ‘இன்று நாம் படுக்கையில் நெருக்கமாயிருப்போமா..?’ என்று நேரடியாக விஷயத்திற்கு வந்துவிடுவார்கள். 

'தலித் சினிமா' எவ்வாறு அடையாளப்படுத்தப்படுகிறது?

ஒடுக்கப்பட்ட மக்களின் கதைகளைக் கூறும் ‘அசுரன்’, ‘ஜெய் பீம்’ போன்ற திரைப்படங்களை ‘தலித் சினிமா’ என்று அடையாளப்படுத்தப்படுவதில்லை. அதாவது, தலித் அல்லாத மற்ற சமூகத்தைச் சேர்ந்த இயக்குநர்களால் உருவாக்கப்படும் ஒடுக்கப்பட்ட மக்களின் கதைகளைக் கூறும் திரைப்படங்கள் பொது நீரோட்ட சினிமா என்றுதான் பார்க்கபடுகின்றன. இதில், இருக்கும் அரசியல் யாதென்றால் ஒடுக்கப்பட்டவர்களால் ஒடுக்கப்பட்டவர்களின் பிரச்னைகளைப் பேசி உருவாக்கப்படும் திரைப்படங்கள் மட்டும் தலித் சினிமா என்று அடையாளப்படுத்தி தனிமைப்படுத்தப்பட்டு, ‘சாதிய சினிமா’ என்று திரித்து சித்தரிக்கப்படுகிறது.

இயற்கையும் பெண் உடலியலும்

தன்னுடைய உணர்ச்சி வற்றி விடுவதற்குள், தன் வேலையை முடித்து விடவேண்டும் என்ற சுயநலத்துடன் அவளை ஆக்ரமித்து செக்ஸ் வைத்துக் கொள்ளும்போது ஏற்படும் மரண வலியில் எப்படி அவளுக்கு அந்த ஆணின் மீது காதலும் கூடலி ல் ஆர்வமும் ஏற்படும்..? 

உச்சுக் கொட்டும் நேரத்துல உச்ச கட்டம் தொட்டவளே... அப்படியா?

திரைப்படக் காட்சிகள் கொடுக்கும் பொய்யான கற்பனைகளால் தூண்டப்பட்டு எதையோ எதிர்பார்த்துத் திருமண வாழ்வைத் தொடங்கும் பல பெண்களுக்கும் ஆண்களுக்கும் முதலிரவில் தொடங்கி எல்லா இரவுகளிலும் கிடைப்பதென்னவோ பெரிய ‘பல்பு’தான்!

மாதவிடாய் தீட்டா?

மாதவிடாயை அறிவியலாகப் பார்க்கும் சமூகத்தை உருவாக்க வேண்டுமே தவிர, ஆன்மிகத்தைத் தடுக்கும் செயலாகப் பார்க்க வேண்டாம் என்றே தொடர்ந்து கூற வேண்டிய அவசியம் இன்றும் இருக்கிறது.

பெண் - உணர்வுகளின் பொதியல்!

‘சிந்துபைரவி சுஹாசினிபோல் ஒரு காதலி வேண்டும். ஆனால், சுலோச்சனா போல் ஒரு மனைவி வேண்டும்’ என்று எதிர்பார்ப்பார்கள். அதிலும் ‘அப்படி’ ஒரு மனைவியை வைத்துக் கொண்டு, ‘இப்படி’ ஒரு பெண்மேல் ஆசைப்படுவதும், சதா தன் மனைவியை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அவளோடு ஒப்பிட்டுப் பேசுவதும் தனது கலவியல் உணர்வுகளைத் தூண்டாதது இந்த ‘அப்பாவி மனைவியின்’ தவறுதான் என்றும் தங்களுக்குத் தாங்களே காரணங்களைக் கற்பித்துக் கொள்வார்கள்.

இலவசப் பேருந்துப் பயணமும் ஆண்களின் மனநிலையும்

கிராம, நகர பாரபட்சமில்லாமல் அனைத்துப் பெண்களுக்கும் இலவசப் பேருந்துப் பயணம் இலகுவாக கிடைக்கிறதா என்றால்? இல்லை என்றே நிதர்சனம் பேசுகிறது. கண் முன்னாடி பல சண்டைகளை ஓட்டுநருக்கும் பெண்களுக்குமிடையே நிகழ்த்திக் காட்டுகிறது. சில இடங்களில் ஆங்காங்கே எப்படி எல்லாம் அந்த இலவசத்தை வீணடிக்க முடியுமோ, அப்படி எல்லாம் சில டிரைவர், கண்டக்டர் தெளிவாகச் செய்கிறார்கள்.

ஜொலிக்கும் முகங்கள் - ஜோ, திரிஷா

லைம்லைட்டில் வேலை பார்க்கும் பெண்களுக்கு திருமணமானதும் துறைரீதியாக வாய்ப்புகள் இல்லை, காதல் கிசுகிசுக்களில் சிக்கினால் வாய்ப்புகள் குறையும் எனவும் நம்பக்கூடிய பொய்களாக மக்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

இறைமறுப்பாளராக ஒரு பெண் வாழ முடியுமா?

பெரும்பாலான மதங்கள் பெண்களை இரண்டாம் தர மக்களாகவே பாவிக்கின்றன. கடவுளர்களாகப் பெண்களை வழிபடுவதாகச் சொன்னாலும், அவர்களுடைய கோட்பாடுகளுக்கு அடங்கி நடக்கும் பெண்ணே வழிபாட்டுக்குரியவர்; அடங்காத பெண் கொல்லப்பட்டு வேண்டுமானால் சிறு தெய்வமாகலாம் என்பதே நடைமுறை. மதங்கள் பெண்ணை ஒரு வீட்டில் இருந்து இன்னொரு வீட்டுக்கு தாரைவார்க்கப்படும் பொருளாகவே பார்க்கின்றன. ரத்தமும் சதையும் உள்ள சக உயிரினமாக மதிப்பதில்லை. ஒன்று புனிதப்படுத்தப்பட்டு தெய்வமாக வேண்டும். இல்லையேல் கேடு கெட்டவளாக மிதிக்கப்பட வேண்டும். சுய சிந்தனையோடு செயல்பட முடியாது.

<strong>மகளிர் தினம் – மகளிரின் விருப்பம்</strong>

ஒவ்வொரு பெண்கள் தினச் சிறப்பு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளும் பெண் சாதனையாளரிடம், “தனிப்பட்ட வாழ்வையும் சாதனையையும் எப்படிச் சமன் செய்தீர்கள்?” என்ற கேள்வி தொடர்ந்து கேட்கப்படுகிறது. இது பெண் சாதனையாளர்களிடம் கேட்கப்பட்டு, ஆண்களிடம் கேட்கப்படாததே இலைமறை காயாக ஓர் அழுத்தத்தைப் பெண் மீது திணிக்கிறது. என்ன சாதனை புரிந்தாலும் குடும்பச் சுமைகளை நீ சுமந்தே தீர வேண்டும் என்பதாக அந்தக் குரல் ஒலிக்கிறது. இத்தகைய மறைமுக அழுத்தங்கள் பெண் ஆண்மைய சமூகத்தில் வெற்றி பெற விரும்பினால் இரட்டை உழைப்பைத் தர வேண்டும் என்று கோருகிறது.