UNLEASH THE UNTOLD

தொடர்வோம்

ஓச்ச மாட்டுப் பள்ளியிலிருந்து கல்லூரிக்கு

“இன்னா பாரு பொறவூரா பேத்தியே போறாளே”, என்று கீழத்தெருவிலிருந்து ஃபைரோஸ் லாத்தாவையும் சைபுன்னிஸாவையும் அவரவர் வீட்டினர் அனுப்பி வைக்க, அது அப்படியேத் தொடர்ந்து ஏரல் முஸ்லிம் பெண்களின் படிப்பு பெரிய பத்து எனப்படும் எஸ்.எஸ்.எல்.சி வரை என்று ஆனது.



புலம்பெயர் தமிழர்களின் அடையாளச் சிக்கல்கள்

இந்தத் தனிமைதான் நாம் இந்தச் சமூகத்தில் யார் என்கிற கேள்வியை உருவாக்கும். அடுத்து இந்த அந்நிய சமூகத்தில் நமக்கு என்ன அங்கீகாரம் என்று கேள்வி கேட்கவைக்கும். இந்தக் கேள்வி அடுத்ததாக எந்த அடையாளம் மூலம் நாம் அங்கீகாரம் பெற முடியும் என்று யோசிக்க வைக்கும். அப்போது நாம் எது நமக்குப் பெருமை தரும் அடையாளம் என்று நம்புகிறோமோ அந்த அடையாளத்தை முன்நிறுத்தி பேசுவோம். பெரும்பாலும் இந்தியாவில் இருந்து புலம்பெயர்பவர்கள் மொழி வழியில் தங்களை அடையாளப்படுத்திக்கொள்வர். குறிப்பாக, உலகின் பழமையான மொழி என்கிற பெருமையைக் கொண்டுள்ள தமிழர்கள் மொழிப் பற்றின் அடிப்படையில் தங்களை முன்னிருத்திக்கொள்வர்.படைப்பாளர்:

தீபிகா தீனதயாளன் மேகலா

தமிழகத்தைச் சேர்ந்த தீபிகா, தற்போது கனடாவின் மக் ஈவன் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் பட்டப்படிப்பு பயின்றுவருகிறார். தான் கற்றுவரும் மானுடவியல் கோட்பாடுகளை தமிழ் நிலப்பரப்புக்கும், அமெரிக்கக் கண்டத்துக்கும் பொருத்திப் பார்த்து கட்டுரைகளை எழுதத் தொடங்கியுள்ளார். வரலாறு மற்றும் தமிழ் மேல் தீவிர பற்று கொண்டவர். இவரது யூடியூப் செய்தி சேனலின் சுட்டி: https://www.youtube.com/channel/UCyNXWPShwgZG4IsyjP7BnAQ

பிள்ளை பெத்த வீடு

அணியாரத் துண்டுகள் காயும் மணம், இஞ்சி தட்டிய மணம்; உள்ளிப்பாலும் காயமும் மொளவாணமும் காய்ச்சிய மணம்; புதிதாய் தாயானவள் மஞ்சளும் எண்ணெயும் சீயக்காயும் தேய்த்து நீராடிய மணம்; இவை எல்லாவற்றுக்கும் மேல் தாய்ப்பாலும் பாலூட்டிய மணம் வெளித் தெரிந்துவிடக்கூடாதெனப் பூசப்பட்ட பவுடரும் சேர்ந்து மணக்கும் பச்சைப் பிள்ளை மணம்; இவை எல்லாம் கலந்து கவிந்த வாசனையோடிருக்கும் ‘பிள்ளை பெத்த வீடு’.

அடையாளத்தில் பெருமை இருக்கிறதா, இல்லையா?

பொதுவில், சுயமாக உழைத்து தனக்கென ஓர் அடையாளத்தைச் சம்பாதிக்க திராணி இல்லாதவர்கள்தாம், பிறப்பு அடிப்படையில் சமூகம் சூட்டும் அடையாளங்கள் மூலம் பெருமையைத் தேடிக்கொள்கிறார்கள். இவ்வகை பெருமைகள், சமூகத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை அப்படியே தொடர வைக்கின்றன. மாறாக, ஒருவர் சொந்த முயற்சியினால் ஒப்பீட்டு அளவில் ஒரு சின்ன சாதனை செய்தால்கூட மற்றவரின் பெரிய சாதனைக்குச் சற்றும் சிறுமை ஆகாது. இங்கு நேர்மையாக உழைத்து, சுயமாக உருவாக்கப்படும் ஒவ்வோர் அடையாளமும் சமமே. எனவே, நம் சொந்த முயற்சியால் நம்மால் நமக்காக உருவாக்க முடிந்த அடையாளங்களைக் கொண்டு பெருமைப்பட்டுக் கொள்வோம்.

உணர்வுகளின் எரிமலை - உச்சக்கட்டம் அடையாததால் ஏற்படும் பாதிப்புகள்

நிறைவான, முழுமையான உடலுறவு இல்லாத பட்சத்திலும், அல்லது பாலுறவே இல்லாமல் போகும்போதும் என்னென்ன உளவியல், உடலியல் பாதிப்புகள், உளவியல் சார்ந்த உடல் பாதிப்புக்கள் ஏற்படுகின்றன என்பதைப் பற்றி பேசலாம்.

நிழலும் நிஜமும் - நீலப்படங்கள்

திரையரங்கை விட்டு வெளியே வந்ததும் ‘ஸ்பைடர் மேனைப் போல’ கட்டிடத்தின் மேலேயிருந்து கீழே குதித்து விடுகிறோமா என்ன? இல்லைதானே? அது சினிமா. அதே போல்தான் நீலப்படங்கள் பார்ப்பதும்.

நிழலும்  நிஜமும் -  திரைப்படங்கள்

நமது தமிழ்த் திரைப்படங்களும் நம் காதல் மற்றும் கூடல் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள நமக்காற்றிவரும் தொண்டைப்(?) பற்றி இங்கே கட்டாயம் பேசியாக வேண்டும்.

பெண்கள் உடலுறவைத் தவிர்க்கும் தருணங்கள்

“என் மனைவிக்கு உடலுறவு வைத்துக் கொள்ளவே பிடிப்பதில்லை… தினம் தினம் ஏதாவது ஒரு காரணம் சொல்லி தவிர்த்து விடுகிறாள்” என்று குற்றம் சாட்டும் கணவர்கள், முதலில் கீழேயுள்ள இந்தக் கேள்விகளை உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.

தீண்ட... தீண்ட... தொடத் தொட மலரும் காமம்…

மென்மையாக முத்தமிடுதல், கொஞ்சுதல், மென்மையாகவும் இறுக்கமாகவும் கட்டிப்பிடித்தல் இவற்றைச் செய்யும் போதே பெண்களின் உடலில் ‘ஆக்ஸிடோசின்’ மற்றும் ‘டோபமைன்’ சுரப்பு அதிகரிக்கத் தொடங்கி மகிழ்ச்சியுணர்வைத் தூண்டிவிடும்.

சில உறவுகள் - பல தீர்வுகள் 

வாய் நிறைய மிளகாய்ப்பொடியை அள்ளிப் போட்டுக்கொண்டிருக்கும் ஒருத்தியிடம், சர்க்கரை சாப்பிட்டுக்கொண்டிருக்கும் நீங்கள், “என் வாய் இனிக்கிறது, உனக்கேன் எரிகிறது?” என்று கேட்பதுபோலத்தான் இந்த செயலும்.