UNLEASH THE UNTOLD

Month: March 2024

மர்மயோகி (1951)

எம்ஜிஆர் ஃபார்முலாவின் முதல் படம் எனச் சொல்லலாம். என்னைப் பொறுத்தவரை எம்ஜிஆர் ஃபார்முலா திரைப்படங்களில் மிகச் சிறந்த திரைப்படம் எனச் சொல்லலாம். மிகவும் இளம் வயது என்பதால், அவரது உடலும் இணைந்தே ஒத்துழைக்கிறது. மிகவும் இயல்பாக நன்றாக நடித்துள்ளார். சண்டைக்காட்சிகள், அரண்மனையின் உள்ளே இருக்கும் மேல் மாடியில் இருந்து மண்டபத்திற்கு கயிறு பிடித்து இறங்கி வரும் காட்சிகள் எல்லாம் அவ்வளவு அற்புதமாக இருக்கின்றன. வசனம்கூட அவ்வளவு அழகாக இருக்கிறது. அவரது திரையுலக வாழ்வின் மிகச் சிறப்பான திரைப்படங்களுள் இதுவும் ஒன்று.

பெண்கள் ஏன் அரசியல் பழக வேண்டும்?

பெண்கள் எத்தகைய உயர்பதவி வகித்தாலும் அவர்களுக்கு மரியாதை கிடைப்பதில்லை என்பது இன்னொரு கசப்பான உண்மை. ஆணின் உடைமையாகப் பெண் கருதப்படும் வரையில் இந்தப் பிரச்னை ஓயாது. பெண்களுக்குப் பாலியல்ரீதியான பிரச்னைகள் எல்லா இடங்களிலும் இருக்கின்றன. அதைக் காரணம் காட்டி தடைகள் போடுதல் தவறு. நான் சந்தித்த நிறைய பெண்கள் அரசியல் குறித்த அடிப்படை அறிவுகூட இல்லாமல் இருக்கிறார்கள். இதில் படிக்காதவர்களைவிடப் படித்தவர்களின் எண்ணிக்கைதான் அதிகம்.

கொடுமைகளுக்கு முடிவு எப்போது வரும்?

பெண் குழந்தையின் வாழ்வு என்பது கேள்வி குறியாக அல்லவா உள்ளது இத்தலை முறையில்.ஒவ்வொரு நாளும் செய்தித்தாளைப் படிக்கும்போது மனம் கனக்கிறது.பெண் என்கிற ஒற்றைக் காரணத்திற்காகக் குழந்தைப் பருவத்தில் இருந்து வயதான மூதட்டி வரை ஏதோ ஒரு கொடுமையை அன்பவித்துக் கொண்டிருப்பது வேதனை. பெண் என்றால் வீட்டைத் தாண்டினால் ஆபத்து என்கிற கட்டமைவு வைத்திருக்கும் இந்தச் சமுதாயம், யாரால் பெண்ணுக்கு ஆபத்து, சில ஆண்களால் தானே என்று கண் எதிரே கண்டும் உணர முடியாது குருடர்களாக, “பெண் குழந்தைகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளணும் “என்று அறிவுரை சொல்லிக் கொண்டே இருக்கப் போகிறதே தவிர, அதற்கான தீர்வு கிட்டினபாடில்லை.

உணர்வு சூழ் உலகம் - புதிய தொடர்

மனம் சிக்கலானது எனில் அதில் பிறக்கும் உணர்வுகளும், அதனால் நமக்குள் எழும் மாற்றங்களும்கூட அப்படித்தான். ஒரே நிகழ்விற்கு வெவ்வேறு நபர்களிடம் நாம் வெவ்வேறு விதமாக நடந்துகொள்ளலாம், வெவ்வேறு நேரத்தில் ஒரே நபரிடம்கூட நாம் அதே விதமாக நடந்துகொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை. ஏனெனில், “அது போன வாரம், இது இந்த வாரம்.”

இப்படிக்கு... இலக்கிய நாசினி

ப்ளாகுகள், ஃபோரம்கள், ஸைட்கள், அமேசான் கிண்டில், பிரதிலிபி, வாட்பேட், பிஞ்ச் என்று ஏராளமான எழுத்து மற்றும் வாசிப்புக்கான ஆப்களில் அதிக அளவில் எழுதிக் கொண்டிருப்பவர்கள் பெண்கள். அவர்களின் எண்ணிக்கையை எல்லாம் மொத்தமாகக் கணக்கிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் ஒரு கை மண் அளவைக் கொடுத்து அதில் எவ்வளவு மண்துகள்கள் இருக்கிறது என்று கணக்கிடச் சொல்வது போல.